என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி 9 மாத கைக்குழந்தை -தாய் பலி
- லாரி மோதியதில் 3 பேரும் படுகாயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே 9 மாத கைக்குழந்தை உயிரிழந்தது.
- இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது35). இவருக்கு திருமணம் ஆகிவேள்வி (22) என்ற மனைவியும், சித்தார்த் 9 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முரளி மற்றும் மனைவி கைக்குழந்தையுடன் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சாம்பல் பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஊத்தங்கரை தனியார் பள்ளி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் 3 பேரும் படுகாயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே 9 மாத கைக்குழந்தை உயிரிழந்தது.
படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேள்வியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






