search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant Dead"

    • வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
    • நள்ளிரவு மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே உடல் நலக்குறைவுடன் சுற்றி திரிந்த குட்டி ஆண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.
    கவுண்டம்பாளையம்:

    பெரியநாயக்கன்பாளையம் வனசரகம் தடாகம் காப்புக்காடு சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரி அருகே உள்ள சிறிய பள்ளத்தில் கடந்த 6-ந்தேதி 7 வயதான குட்டி ஆண் யானை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    உடனடியாக வனசரகர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், கோவனூர் கால்நடை உதவி டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதை தொடர்ந்து யானை தானாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    நேற்று காலை பூச்சியூர் கிரீன் கார்டன் அருகே உள்ள வனப்பகுதிக்குள் அந்த குட்டியானை வந்தது. நடந்து வந்து கொண்டிருந்த யானை திடீரென மயங்கி கீழே விழுந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் கால்நடை டாக்டர்களுடன் விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 குளுக்கோஸ் பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டு, யானைக்கு செலுத்தப்பட்டது. மேலும் வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகளும் யானைக்கு உணவாக கொடுத்தனர். ஆனால் யானையால் எழுந்திருக்கவே முடியவில்லை. இருப்பினும் யானையை கண்காணித்து கொண்டே இருந்தனர்.

    நேற்று காலை தொடங்கிய சிகிச்சை இன்று காலை வரை விடிய, விடிய நடந்தது. ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி 7 வயது ஆண் குட்டி யானை இறந்து விட்டது. யானை இறந்தது குறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உயர் அதிகாரிகளும், வனத்துறையினர் உடனடியாக யானை இறந்து கிடந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை டாக்டர்கள் யானையை உடற்கூராய்வு செய்யும் பணியை தொடங்கினர். உடற்கூராய்வு செய்த பின்னரே யானை எப்படி இறந்தது, இறந்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும்.
    மொரப்பூர் அருகே யானை சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே காப்புக்காடு பகுதியில் கடந்த மாதம் 25-ந்தேதி 22 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. இதுபற்றி பாலக்கோடு வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

    கால்நடை மருத்துவர் பிரகாஷ் அங்கு வந்து யானையின் உடலை பரிசோதனை செய்தார். அப்போது யானை குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், யானை சுடப்பட்டு செத்து கிடந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் முனிராஜ் (வயது 29), திருப்பதி மகன் மணி (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஜெயவேல் (55) என்பவரையும் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    ×