என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சி சார்பில்மினி மாரத்தான் போட்டி
    X

     கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில்மினி மாரத்தான் போட்டி

    • ராகுல்காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ராகுல்காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நடராஜன், முரளிதரன் ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.

    இதில் 17- வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் ஆண்,பெண் என தனியாக நடத்தப்பட்ட இந்த மினி மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இன்றி தருமபுரி மாவட்டத்திலும் இருந்து ஏராளமான இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்கள்.

    இதில் அண்ணாசிலையில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் காத்தி சிலை, ரவுண்டானா, பெரியமாரியம்மன் கோவில், ராசு விதி, திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆவின் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிக்கம், கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் விக்னேஷ் பாபு, முன்னாள் ஊத்தங்கரை சேர்மன் ஆறுமுகம், மாவட்டத் துணைத்தலைவர் ஹரி, நகரத் தலைவர் முபாரக், லலித் ஆண்டனி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் சுப்பிரமணி, என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்கள். மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்கள்.

    Next Story
    ×