என் மலர்
நீங்கள் தேடியது "புத்தொளி பயிற்சி முகாம்"
- அர்ச்சகர் வாசீஸ்வரன், ராமானுஜ பட்டாச்சாரியார், அறிவானந்தம் ஆகியோர் பேசினார்கள்.
- இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்களும் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.
மலைக் கோவிலில் இந்த முகாமினை இந்து சமய அறநிலைய த்துறையின் கிருஷ்ணகிரி பிரிவு உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமி நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து முகாமில் பேசினார். தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, மலைக ்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன், ராமானுஜ பட்டாச்சாரியார், அறிவானந்தம் ஆகியோர் பேசினார்கள். மேலும் இதில் தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், செயல் அலுவலர்கள் சின்னசாமி, சித்ரா, ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, சத்யா, அண்ணாதுரை மற்றும் பணியாளர் சசிகுமார் ஆகியோரும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம், தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும். பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தெரிவித்தார்.






