என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12- ம் வகுப்பு"

    • மாணவ மாணவியர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் சிறப்பு கையேடும் பயன்படும்
    • உயர் கல்வித்துறையில் ஆண்டுதோறும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமையை சேர்க்கும் கல்லூரியாக அறிஞர் அண்ணா கல்லூரி திகழ்ந்து வருகிறது

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய நான் முதல்வன் திட்டத்தின் படி அரசுப் பள்ளியில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு கையேடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் முதல்வர் தனபால் வரவேற்புரை ஆற்றினார். வேளாங்கண்ணி கல்விக் குழுமம் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளர் கூத்தரசன் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தன்னுடைய தலைமை உரையில் கல்லூரியில் வழங்கப்படும் சிறப்பு கையேடு மாணவ, மாண வியர் பொது த்தேர்வில் அனைத்து பாடங்களையும் நினைவுப் படுத்தி திருப்புதல் செய்வதற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று பேசினார்.

    விழாவில் பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர் மோகனசுந்தரம் சிகரத்தை நோக்கி என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு அவசியம் . மாணவ மாணவியர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் சேவை வணங்குவதற்கு உரியது. அறிஞர் அண்ணா கல்லூரியில் வழங்கும் சிறப்பு கையேடுகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். உயர் கல்வித்துறையில் ஆண்டுதோறும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமையை சேர்க்கும் கல்லூரியாக அறிஞர் அண்ணா கல்லூரி திகழ்ந்து வருகிறது . மாணவ மாணவியர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் சிறப்பு கையேடும் பயன்படும் என்று பேசினார். விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 3500-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டன. விழாவில் வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் பள்ளி முதல்வர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை கல்லூரி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

    ×