தர்மராஜா திரவுபதியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி

மணக்கோலத்தில் தர்மரா ஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, எக்கூரில் பிரசித்தி பெற்ற, தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி திருக்கல்யாண வைபவ, உற்சவ விழா நேற்று நடந்தது.

இந்த கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31ல்,கங்கணம் கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று மேல தாளங்கள் முழங்க தட்டுவரிசையுடன் சென்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து, உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மணக்கோலத்தில் தர்மரா ஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாகுழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com