என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிளக்கு  பூஜையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தி அசத்திய கேரள பெண்கள்
    X

    திருவிளக்கு பூஜையின்போது, பெண்கள் வேத மந்திரங்கள் முழங்க விளக்கு ஏற்றி பூஜை நடத்தினர். 

    திருவிளக்கு பூஜையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தி அசத்திய கேரள பெண்கள்

    • இசை இசைத்தும், பாடல்கள் பாடியும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர்.
    • சிறு குழந்தைகள் உள்பட பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று பாரதிய இந்து சேவா பரிவார் என்ற அமைப்பின் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

    ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதி மண்டபத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் இசை இசைத்தும், பாடல்கள் பாடியும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் சிறு குழந்தைகள் உள்பட பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிளக்கு பூஜையின்போது, பெண்கள் வேத மந்திரங்கள் முழங்க விளக்கு ஏற்றி பூஜை நடத்தினர்.

    கேரளா மாநிலத்தி லிருந்து ஓசூர் பகுதிகளுக்கு வந்து வாழ்ந்து வரும் ஏராளமான குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×