என் மலர்
நீங்கள் தேடியது "பெண்ணுக்கு கொடுமை"
- திருச்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் பெண்கள் ஓட்டுனர் வேலை இருப்பதாக கூறினார்கள்.
- மனித அத்துமீறல்கள் இருப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோட்டை பகுதியை சேர்ந்த பஷீர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் வசித்து வருகிறேன். என் மனைவி நஜ்மா, 29 என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஹக்கீம் மற்றும் திருச்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் பெண்கள் ஓட்டுனர் வேலை இருப்பதாக கூறினார்கள்.
என் மனைவி நஜ்மாவிடம் அதிக சம்பளம் பெற்று தருவதாக கூறினார்கள். இதையடுத்து நஜ்மா கடந்த, 2022-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி துபாய்க்கு சென்றார். என் மனைவியை நான் மொபைலில் தொடர்பு கொண்ட போது, கடந்த ஒரு மாத காலமாக, அங்கு அவரை கஷ்டப்படுத்து வதாகவும், மனித அத்துமீறல்கள் இருப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் என் மனைவியை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






