என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருதாட்ட திருவிழா"

    • பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையினையொட்டி தொடர்ந்து3மாதங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த விழாவில் எருதுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு நேரம் கடந்து எருதுகள் ஓடுகிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிடப்பட்டு, குறைந்த நேரத்தில் ஓடும் எருதுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.

    இதற்காக எருதுகளை அதன் உரிமையாளர்கள் பல பயிற்சிகள் அளித்து, அழைத்து வருகின்றனர்.

    அந்த எருதுகளை வேறு வேலைக்கு, அதாவது உழவு, மாட்டு வண்டி போன்ற எதற்கு பயன்படுத்தாமல், வருடத்தில் 9மாதம் அதற்கான உணவை அளித்து வளர்த்து வருகின்றனர்.

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இந்த எருது விடும் திருவிழாவில் பரிசு பெறுவதை பெருமையாக கருதி, அதற்காகவே பல லட்சங்கள் செலவு செய்து எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்க தங்கள் எருதுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று தமிழக அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு கிருஷ்ணகிரி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எருதுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து போட்டியில் பங்கேற்க வைத்தனர்.

    அவ்வாறு அழைத்து வரப்பட்ட எருதுகளை மந்தையில் ஓட விட்டு, ஸ்டாப் வாட்ச் மூலம் குறைந்த நேரத்தில் ஓடிய எருதுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    அதன்படி, முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.35 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரம், 5ம் பரிசாக ரூ.17 ஆயிரம் என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொது மக்கள், இளை ஞர்கள் செய்திருந்தனர்.

    மேலும் விழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுத்திட குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×