என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
- நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்று கூறி மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பாரு வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 22 ).
இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 2-வது பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்ற வள்ளியம்மாள் அங்கிருந்து கடந்த மாதம் 29-ந்தேதி அன்றுதான் வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் மறுநாளே தனது அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்று கூறி மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை அங்கு சென்று வீட்டுக்கு வருமாறு வள்ளியம்மாளை அழைத்துள்ளார். வரமறுத்து வள்ளியம்மாள் பிடிவாதம் பிடித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த வள்ளியம்மாள் விஷம் குடித்து விட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






