என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி
- ரூ. 12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
- ஏமாந்ததை அறிந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள மேசகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மல்லிகா (வயது 28).
இவர் ஆன்லைன் மூலம் அடிக்கடி பொருட்கள் வாங்குவது வழக்கம். இந்நிலையில் மல்லிகாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில் அவர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் குலுக்கல் மூலம் மல்லிகாவுக்கு ரூ. 12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அந்த பரிசை வாங்க ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளுக்காக ரூ.5.22 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கு மற்றும் போன் பே மூலம் மல்லிகா ரூ.5.22 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவருக்கு வந்த கடிதத்தில் கூறப்பட்டபடி எந்த பரிசும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாந்ததை அறிந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.