என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை.
    • பதறிப்போன மாதேவ் தனது மனைவியை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    கிருஷ்ணகிரி 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளியை அடுத்த கெம்பேகவுண்டம ்தொட்டியை் சேர்ந்தவர் மாதேவ். இவரது மனைவி ராதா (வயது27).இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மாதேவ் தனது மனைவியை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து மாதேவ் தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராதாவை தேடிவருகின்றனர்.

    • அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் மூன்று மாணவ, மாணவியர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி கேடயம் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் பயின்ற மாணவன் சுனில் 490 முதல் மதிப்பெண்ணும், தேவதர்ஷினி என்கின்ற மாணவி 484 பெற்று இரண்டாம் மதிப்பெண்ணும், டார்வின் என்கின்ற மாணவன் 483 மூன்றாம் மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 30 மாணவர்களும் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். மேலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் மூன்று மாணவ, மாணவியர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    பாடவாரியாக தமிழில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும், ஆங்கிலத்தில் 34 மாணவர்களும், கணிதத்தில் 43 மாணவர்களும், அறிவியலில் 52 மாணாக்கர்களும், சமூக அறிவியலில் பாடத்தில் 48 மாணவர்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி கேடயம் வழங்கினார்.

    மேலும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் சந்தோஷ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பாராட்டினார்.

    • செயின்ட் பீட்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதி நவீன வசதி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் இந்த அதிநவீன மருத்துவ சேவைகளை பயன்டுத்திக்கொள்ள வேண்டும்

    ஓசூர்,  

    ஓசூரில் அதியமான் பொறியியல் கல்லூரி அருகே செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில், நேற்று ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேத்லாப், அதிநவீன என்.ஐசியு , பிஐ சி யு ஆகியவற்றின் தொடக்கவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவனரும், தலைவருமான தம்பிதுரை எம்.பி. தலைமை தாங்கி, ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கேத்லாப் மற்றும் அதிநவீன பிரிவுகளை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். முன்னதாக அவர் விழாவில் பேசியதாவது:-

    ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது, கடந்த 5 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மற்றும் அண்டை மாவட்ட மக்களுக்கு லாப நோக்கமின்றி, அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறது. மருத்துவமனையில் மேலும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மாரடைப்பு நோய்களிலிருந்து உயிர் காக்கும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கும் அதிநவீன கேத்லாப்வசதி, குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகள், குறைமாத குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்க அதிநவீன என் ஐசியு மற்றும் பிஜ சிறு வசதிகள் இந்த மருத்துவமனையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது,

    இந்த வசதிகள் மூலம் குழந்தைகளுக்கான அதிதீவிர நோய்களை, செயின்ட் பீட்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலேயே சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு, விழாவில் தம்பிதுரை பேசினார். மருத்துவக் கல்லூரியின் செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை பேசுகையில், "செயின்ட் பீட்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதி நவீன வசதி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அதிநவீன மருத்துவ சேவைகளை பயன்டுத்திக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் விழாவில் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக, மருத்துவமனை தலைவர் பானுமதி தம்பிதுரை கலந்து கொண்டார். மருத்துவமனையின் செயலாளர் லாசியா தம்பிதுரை, நிர்வாக அறங்காவலர் நம்ரதா தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா வரவேற்றார். மேலும், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, மருத்துவ சூப்பிரண்டு வாசுதேவா, மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மருத்துவ கல்லூரி டீன் சோமசேகர் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்விக்கான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
    • தாய் கஸ்தூரி கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீர்த்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்று விட்டார்.

    இதனால் எந்த ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத கீர்த்திவர்மா நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்த நிலையில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் கீர்த்திவர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் போராடி சாதனை படைத்த மாணவனை அவரது தாய் கஸ்தூரி மற்றும் ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவன் கீர்த்திவர்மா கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மாவின் சாதனையை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீர்த்தி வர்மாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், அந்த மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதி அளித்தார்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் கீர்த்தி வர்மாவின் வெற்றிச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    அவரது தாயாரை தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் கீர்த்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.
    • இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஓசூர்,

    கிருஷணகரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வரர் நகரில் உள்ள முனீஸ்வரர் கோயில் அருகே நேற்று 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள், பெங்களூர் சாதிம் நகர் பகுதியை சேர்ந்த குமார் (49) மற்றும் பெங்களூரு உளிமாவு பகுதி மீனாட்சி கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் (30) என்பதும் தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து முறையே 1 1/4 கிலோ மற்றும், ஒரு கிலோ கஞ்சா பொருள்கள் என மொத்தம் 2 1/4 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களையும், அவர்கள் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளையும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா, ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாமல் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.

    அப்போது அந்த சாலை வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை.

    இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    காவேரிபட்டணம்,

    தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.

    இதனையடுத்து காவேரிப்பட்டணத்தில் தி.மு.க.வினர் 10-க்கும் மேற்பட்ட காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து ,பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முக்கிய பிரமுகர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதே போல் காவேரிப்பட்டணம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி னார்கள்.

    • கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி மாரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மதுமிதா (வயது16). இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாறன். இவரது மகன் சேட்டு என்கிற வெங்கடேஷ் (வயது27). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் சேட்டுவுக்கு அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை ஜெரகலட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூடப்பா (71). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருப்பதால், குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுைடந்த காணப்பட்ட சூடப்பா நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    • மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 13,467 பேரும், மாணவிகள் 12,886 என மொத்தம் 26293 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

    இதில் மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு 89.48 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 85.36 பேர் சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதால் கடந்த ஆண்டைவிட 4.12 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஓசூரில் உள்ள 26 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும், கிருஷ்ணகிரியில் உள்ள 58 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும் என மாவட்டத்தில் உள்ள 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.
    • திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது43) என்பது தெரியவந்தது.

    ரியல் எஸ்டேட் அதிபரான பிரகாசுக்கு, லட்சுமி (36) என்ற மனைவி உள்ளார். இதையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல கூறிய லட்சுமி பின்னர் போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் தனது கணவரை தானே அடித்துக்கொலை செய்ததாகவும், தனது கள்ளக்காதலன் சின்னராஜ் உதவியுடன் உடலை சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான லட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாசுக்கும் திருமணம் நடந்தது. எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் போதையில் வந்து அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    கடந்த 18.03.2023 அன்றும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் இறந்தார்.

    இதையடுத்து உடலை அங்கிருந்து மறைக்க முடிவு செய்தேன். இதற்காக எனது கள்ளக்காதலன் சின்னராஜூக்கு (38) போன் செய்தேன். சின்னராஜ் சரக்கு வேன் டிரைவர் ஆவார். அவருடன் எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.

    திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது. உடலை எரித்தோம் நான் போன் செய்து அழைத்ததும் சின்னராஜ் எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் எனது கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு வந்தோம். ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் அங்கு உடலை கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டு வந்து விட்டோம்.

    உடலை எரித்ததால் போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதான அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் லட்சுமியை சேலம் பெண்கள் சிறையிலும், சின்னராஜை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    • பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
    • எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்கானி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ஜெயராஜ் (வயது19). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயராஜை தேடிவருகின்றனர்.

    • சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னஎலத்தகிரி பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது36), சண்முகம் (40), செந்தில் (38), நந்திஷ் (31), சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.

    ×