ஓசூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஓசூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

ஓசூர்,

கிருஷணகரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வரர் நகரில் உள்ள முனீஸ்வரர் கோயில் அருகே நேற்று 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள், பெங்களூர் சாதிம் நகர் பகுதியை சேர்ந்த குமார் (49) மற்றும் பெங்களூரு உளிமாவு பகுதி மீனாட்சி கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் (30) என்பதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து முறையே 1 1/4 கிலோ மற்றும், ஒரு கிலோ கஞ்சா பொருள்கள் என மொத்தம் 2 1/4 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களையும், அவர்கள் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளையும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com