என் மலர்
கிருஷ்ணகிரி
- இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாகமருதாண்டப்பள்ளி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அமைந்து உள்ளது.
இந்த பங்கில் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவது வழக்கம்.இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டிகள் வாகனம் இயங்காமல் அவதிபட்டனர்.
இந்நிலையில் வாகனத்தை சோதனை செய்து பார்த்ததில் மழை நீர் பெட்ரோல் கிடங்கில் இறங்கி உள்ளது தெரிய வந்தது.
இதனால் பெட்ரோல் போட்டவர்களின் வாகனங்கள் இயங்காததால் பங்கை 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.
- தனியார் விளையாட்டு அமைப்பின் சார்பில் 23-வது வாலிபால் கோடை பயிற்சி நிறைவுவிழா நடைபெற்றது.
- வாலிபால் பயிற்சி பெற்ற 87 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
ஓசூர்,
ஓசூரில் ராயக்கோட்டை சாலையிலுள்ள ஆர் வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் விளையாட்டு அமைப்பின் சார்பில் 23-வது வாலிபால் கோடை பயிற்சி நிறைவுவிழா நடைபெற்றது.
விழாவிற்கு,பள்ளி தலைமையாசிரியர் முனிராஜ் தலைமை தாங்கினார்.மாநகராட்சி கவுன்சிலர் மோசின்தாஜ் நிசார் அகமது,
உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக ,ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு, கோடை கால வாலிபால் பயிற்சி பெற்ற
87 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் இந்த விழாவில் பயிற்சி யாளர்கள் தாயுமா னவன்,கீதா மற்றும் பள்ளி மாணவ மாணவி யர்கள்,ஆசிரிய ர்கள் பலர் பங்கேற்றனர்.
- விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
- பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதுடன், நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மைதானத்திற்கு" முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, நேற்று விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கறுப்பு மை பூசி அழிக்கும் பணியில் பா.ஜ.க.வை சேர்ந்த இருவர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. பின்னர், பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், எம்.எல்.ஏ. மற்றும் மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்தியதாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ.க.தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (வயது40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உதவித்தொகை, பட்டா பெயர் இடமாற்றம், தனிப்பட்டா, தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- ஜமாபந்தியில் 97 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் ஜமாபந்தியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 8 தாலுகாக்களிலும் நேற்று ஜமாபந்தி முகாம் தொடங்கியது. போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்துதார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் 6 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை வேண்டி 12 மனுக்களும், பட்டா மாற்றத்திற்கு 10 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கு 17 மனுக்களும், வீட்டுமனை பட்டா வேண்டி 29 மனுக்களும், நில உடமை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக 1 மனுவும், பரப்பு வித்தியாசம் கணிணி திருத்தம் தொடர்பாக 7 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 மனுக்களும், 1 புகார் மனுவும், 14 இதர துறை மனுக்கள் என மொத்தம் 97 மனுக்கள் வரப்பெற்றதை தொடர்ந்து, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட 6 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு பதிவேடுகளான அ பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 - ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு திட்டங்கள் உடனடியாக கிடைக்கும் வகையில் ஜமாபந்தி நடத்தப்படுகிறது. அதன்படி அந்தந்த பகுதிகளில் நடத்தப்படும் இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் இடமாற்றம், தனிப்பட்டா, மற்றும் சிறு சிறு பிரச்னைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தீர்க்கப்படாத தங்கள் பிரச்னைகள் குறித்தும் பொதுமக்கள் மனு கொடுத்தால் அதற்கான தீர்வுகள் எடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமிற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் தலைமை தாங்கினார். இதில், வேப்பனப்பள்ளி உள்வட்டத்தை சேர்ந்த பதிமடுகு, இனாம்குட்டப்பள்ளி, தீர்த்தம், நாடுவனப்பள்ளி, அளேகுந்தாணி, நேரலகிரி, சூரியனப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், மணவாரனப்பள்ளி ஆகிய ஒன்பது கிராமங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
அவர்களது மனுக்களை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். இதில் தாசில்தார் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் சரண்யா தலைமையிலும், அஞ்செட்டி தாலுகாவில் ஓசூர் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையிலும், சூளகரி தாலுகாவில் உதவி நிலவரித்திட்ட அலுவலர் பாலாஜி தலைமையிலும், பர்கூரில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தலைமையிலும், ஊத்தங்கரையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் தலைமையிலும் ஜமாபந்தி தொடங்கியது.
நேற்று மாவட்டத்தின், 8 தாலுகாவிலும் தொடங்கிய ஜமாபந்தி முகாம் சனி, ஞாயிற்றுகிழமைகள் தவிர வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கே.கே.நகரில் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.
- 50 ஆயிரம் மதிப்பில் சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட கே.கே.நகரில் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் அவதிபட்டு வந்தனர். இதை அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கு பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சூளகிரி துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், கனகராசு, தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன், துணைத் தலைவர் வரலட்சுமி, செயலர் வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் சீனிவாசன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்களை பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்தார்.
- பொது மக்களிடமிருந்து 134 மனுக்கள் பெறப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுக்காகளில் , பசலி 1432 ஆம் ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.
ஓசூரில், தாலுக்கா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி பொது மக்களிடமிருந்து 134 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி அறிவுறுத்தினார். ஜமாபந்தி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- பார்வதி நகரில் ஒரு டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீதாராம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீத் (வயது24). டூவிலர் மெக்கானிக்கான இவர் ஓசூர் பார்வதி நகரில் ஒரு டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பக்கபிரகாஷ் (32), பர்கத் என்கிற ஆப்பிள் (25), பாலா என்கிற பாலாஜி (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஹபித்திடம் வேண்டுமென்றே வாய் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்க தொடங்கினர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹபித்தின் கையை வெட்டினர். மேலும், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி பிரகாஷ், காமட்சி, பாயாஸ், மீன்வியாபாரி முரளி ஆகிய 4 பேரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஹபித் உள்பட 4 பேரும் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்கத், பக்கபிரகாஷ், பாலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோன்று ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் என்பவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதுகுறித்து சாந்தா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவாஸை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- விதைகள் 50 சதவீத மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பருவத்திற்கேற்ப பயிர்களுக்கு ஏற்ப காப்பீடு செய்து பயன்பெறலாம்.
ஓசூர்,
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் வட்டாரத்தில் மழை பெய்து வருவதால் நடப்பாண்டு மானாவாரி பயிராக 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் ராகி விதைப்பு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பருவத்திற்கு தேவையான ராகி ரகங்களாக கே.எம்.ஆர் 204, ஜிபியூ 66 ரகங்கள் 18 டன் விதைகளும் மற்றும் துவரை ரகங்களாக பிஆர்ஜி 1, பிஆர்ஜி 5 ரகங்கள் 7 டன் விதைகள் ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விதைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தின் கீழ் நிலக்கடலை ரகமான கதிரி 1812 ரகம் 1600 கிலோ ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிர் உரங்களாக அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நுண்ணூட்ட சத்து உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. அத்துடன் 100 சதவீத மானியத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவையான பொருட்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் டீசல் மோட்டர் அல்லது மின் மோட்டார் அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம், நீர் கொண்டு செல்லும் பிவிசி குழாய்களுக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டி அமைக்க 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் அல்லது சதுர கன மீட்டருக்கு ரூ.350 வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பருவத்திற்கேற்ப பயிர்களுக்கு ஏற்ப காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின் கம்பம் தீடீரென சாய்ந்து விழுந்தது.
- மின் கம்பிகள் மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்தில் 4 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமாதையன் (வயது 35). விவசாயி. இவர் 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார்.அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வன் (30). இவரும் 1 பசு மாட்டை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் நேற்று சுமார் 11.30 மணியளவில் அருகே உள்ள தோட்டத்தில் மேய்ச்ச லுக்காக கட்டிவைத்த நிலையில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அங்கு நடப்பட்டிருந்த மின் கம்பம் தீடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது மின்கம்பத்தில் பொருத்த பட்டிருந்த மின் கம்பிகள் வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்தில் 4 மாடுகளும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் கதறி அழுது புலம்பினர்.
பின்னர் தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார், வருவாய் அலுவலர்கள், மின் வாரிய அலுவலர்கள், கால்நடை மருத்துவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார்சைக்கிளில் வந்த நபர் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தார்.
- திருவண்ணாமலை யை சேர்ந்த பன்னீரை கைது செய்தனர்.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை மது விலக்கு அமல் பிரிவு போலீசார் அத்திப்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்தனர். அதில் அவர் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கஞ்சா வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்ட் செங்கம் தாலுகா அயோத்திபட்டணத்தை சேர்ந்த பன்னீர் (53) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர்.
- அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது.
ஓசூர்,
ஓசூர் டவுன் போலீசார் ஓசூர் - ராயக்கோட்டை சாலை ஒன்னல்வாடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 6 லாரிகள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாகனத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூளகிரி ஒன்றிய குழு தலைவரிடம் வழங்கினர்.
- புதிய வாகனத்திற்கு பூஜை செய்த பினனர் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள புதிய மகேந்திரா ஸ்கார்பியோ வாகனத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், விமல் ரவிக்குமார் வாகனத்தை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத்திடம் வழங்கினர்.
இதனையடுத்து புதிய வாகனத்திற்கு பூஜை செய்த பினனர் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






