என் மலர்
கிருஷ்ணகிரி
- 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.
இதில் தொழிலாளர்கள், மருத்துவர்கள், நர்சுகள், சிறுவர், சிறுமியர், பெண்கள், மாணவ மாணவிகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.எம்.சி.டெக். கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார் கொடியசைத்து, மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
.10 கி.மீ. தூரத்தை கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டப்பா (36) என்பவரும், 5 கி.மீ தூரத்தை ஓசூரை சேர்ந்த ஹரிஷ் என்ற மாணவரும் முதலாவது இடத்தில் வந்தனர். இவர்களுக்கு முதல் பரிசு தொகையான தலா 6,000- ரூபாய் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- சிறப்பான முறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி படைத்தளபதி வெங்கடேசனுக்கு பணி நிறைவு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மஹாலில் ஊர் காவல் படை தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி கவுசிக் தேவ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சங்கு முன்னிலை வகித்தார். ஊர்க்காவல் படை சேலம் மண்டல கூடுதல் தலைவர் மகா அஜய் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி படைத்தளபதி வெங்கடேசனுக்கு பணி நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் இன்ஸ்பெக்டர்கள் குலசேகரன், பிரகாஷ், ஊர்க்காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி தளபதி மணிகண்டன், ஊர் காவல் படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
- புதுச்சேரியில் வருகிற 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படவுள்ளன.
ஓசூர்,
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் காப்போம் அமைப்பு மற்றும் ஈஷா'காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும், இந்தாண்டு இலக்கான 1.10 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
அதன்படி, இந்தாண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படவுள்ளன.
இது குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. ஓசூரில் நாளை (திங்கட்கிழமை) அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஏ.மனோகரன் மற்றும் அதியமான் பொறியியற் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை, கல்லூரி வளாகத்தில் நட்டு விழாவை தொடங்கிவைக்கின்றனர். தொடர்ந்து, அன்று மாலை வரை தொல்லியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் வேடியப்பன் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது ஈஷா நிர்வாகி போரிஸ் பீம் உடன் இருந்தார்.
- இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் முழு விவரங்களை உள்ளீடு செய்த பின்பே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்பங்கள் https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் வருகிற 5ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் வெளியாகும். இதில், சேர விரும்பும் மாணவர்கள், தேவையான விவரங்களை இணைத்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூ-.500ம், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கட்டணம் செலுத்துவோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணைய வங்கி சேவையை பயன்படுத்தலாம். இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் முழு விவரங்களை உள்ளீடு செய்த பின்பே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இத்தளத்தின் மூலம் பணம் செலுத்திய பிறகு தான் தங்கள் விண்ணப்பம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்னரே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
அதில், பயனடையும் வகையில் கல்லூரி முடித்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் பயிற்சி நிறுவன முதல்வர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
- 60 ஊழியர்களை கொண்டும், காவல் துறை மற்றும் வருவாய் துறையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.
- 100-க்கு மேற்பட்ட விளம்பர பேனர்கள் சாலை இருபக்கங்களிலும் வைக்கபட்டிருந்தது.
சூளகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் 161 எண்ணிக்கை, பேனர்கள் 462 எண்ணிக்கை மற்றும் போஸ்டர்கள் 435 எண்ணிக்கை ஆகியவை மாநகராட்சியின் 60 ஊழியர்களை கொண்டும், காவல் துறை மற்றும் வருவாய் துறையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.
இம்மாநகராட்சியின் அனுமதி பெறப்பட்ட பின்னரே விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவித்து க்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு உள்ளாட்சி விதிகள் 2023-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா தெரிவித்துள்ளார்.
அதேபோல் சூளகிரியில் பேரிகை, கிருஷ்ணகிரி, உத்தப்பள்ளி சாலைகளில் 100-க்கு மேற்பட்ட விளம்பர பேனர்கள் சாலை இருபக்கங்களிலும் வைக்கபட்டிருந்தது.
இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சி சரயு உத்தரவின் பேரில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபாலகிருஷ்ணன் தலைமையில் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஊராட்சி செயலர் வெங்கடேஷ், மற்றும் அலுவலர்கள் அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்றினர்.
- கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
- இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரை, மாவட்ட துணை தலைவர்கள் வின்சென்ட், ரமேஷ் அர்னால்டு, நகர தலைவர் முபாரக், நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், மாவட்ட பொதுச்செயலாளர் ஹரி, ஊடகப் பிரிவு தலைவர் கமலக்கண்ணன், இளைஞர் காங்கிரஸ் ஆஜீத், குருபிரசாத், நகர துணைத் தலைவர் இருதயநாதன், அமுல், மெக்கானிக் பாபு, ராஜா, சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, ஒடிசா ெரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலலமை செயற்குழு உறுப்பினர் பரிதாநவாப், நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், நாகராஜ், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் மற்றும் அன்பரசன், மதியழகன், நிர்வாகிகள் கடரலசுமூர்த்தி, திருமலைச்செல்வன், மோதிலால், டேம் பிரகாஷ், ஜமுனா புருஷோத்தமன், கேபிள் சரவணன், ராஜசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- மெழுகுவர்த்தி ஏந்தி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரவீண்குமார், கீர்த்தி கணேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
ஒடிசாவில் முன்தினம் நடந்த கோர ரெயில் விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு , கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரவீண்குமார், கீர்த்தி கணேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 8.58 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பரவலான மழையால், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 361 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 681 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று(4ம் தேதி) கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டுவிடும். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் திறந்துவிடப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதே போல், சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை முழு கொள்ளளவு நிரம்பி உள்ளதால், அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக நின்றிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 110 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 8.58 அடியாக உள்ளது.
- மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.
- ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 177 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் 4,5-ம் வகுப்பு மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் முதற்கட்ட தொடக்கமாக சூளகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சூளகிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்க, நடுநிலை பள்ளியை சேர்ந்த 240 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறனை புரிதலோடு மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகளை வடிவமைத்து பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.
பயிற்சியினை ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், சூளகிரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாதேஷ், வெங்கட் குமார், ஜார்ஜ், இந்திரா ஆகியோர் பார்வையிட்டு பாட புத்தகம், பயிற்சி புத்தகம், ஆசிரியர் கையேடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். பயிற்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சண்முக பிரியா செய்து வருகிறார். இதில் பொருப்பாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுனர் வைத்தியநாதன், வெங்கடேஷ், குமார், சங்கரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
- கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேதகிரி (வயது31). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12-ம் தேதி பணிக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 14 பவுன் தங்க நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து வேதகிரி, பர்கூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி, பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நடேஷ்குமார் (39), பெங்களூர் திலக் நகர் திலீப்குமார்(35), பர்கூர் துரைஸ் நகர் தினேஷ்குமார் (30) ஆகியோரை கைது செய்துஅவர்களிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மீட்டு, தொடர்ந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவசர சிகிச்சைக்காக இயங்கி வரும் மருத்துவமனை, சுற்றுசூழல் பாதுகாப்பு, பேருந்து வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
- அடிப்படை வசதிகள், ஊதியம், போக்குவரத்து வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் செய்யாறு சிறப்பு பொருளாதா மண்டலம் லோட்டஸ் புட்வேர் நிறுவனத்தை கலெக்டர் சரயு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அந்த நிறுவனத்தில் காலணிகள் தயார் செய்யும் பணிகள், காலணிகள் ஏற்றுமதிக்காக பேக்கேஜ் செய்யும் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பெண் பணியாளர்களின் குழந்தைகள் பராமரிப்பு அறை, பணியாளர்களின் அவசர சிகிச்சைக்காக இயங்கி வரும் மருத்துவமனை, சுற்றுசூழல் பாதுகாப்பு, பேருந்து வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
மேலும், நிறுவன உற்பத்தி பிரிவு மேலாணர்கள் காலணி உற்பத்தி, மூலப்பொருட்கள் வருகை, ஏற்றுமதி, பணியாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், ஊதியம், போக்குவரத்து வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.
இந்த ஆய்வின் போது, நிறுவனத் துணைத் தலைவர் அருள்சம்மந்தம், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மோழி, தனி தாசில்தார் கங்கை மற்றும் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






