search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு
    X

    சூளகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு

    • மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.
    • ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 177 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் 4,5-ம் வகுப்பு மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதற்கட்ட தொடக்கமாக சூளகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சூளகிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்க, நடுநிலை பள்ளியை சேர்ந்த 240 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறனை புரிதலோடு மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகளை வடிவமைத்து பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.

    பயிற்சியினை ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், சூளகிரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாதேஷ், வெங்கட் குமார், ஜார்ஜ், இந்திரா ஆகியோர் பார்வையிட்டு பாட புத்தகம், பயிற்சி புத்தகம், ஆசிரியர் கையேடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். பயிற்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சண்முக பிரியா செய்து வருகிறார். இதில் பொருப்பாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுனர் வைத்தியநாதன், வெங்கடேஷ், குமார், சங்கரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×