என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒடிசா இரயில் கோர விபத்து: ஓசூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
    X

    ஒடிசா இரயில் கோர விபத்து: ஓசூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

    • மெழுகுவர்த்தி ஏந்தி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரவீண்குமார், கீர்த்தி கணேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ஒடிசாவில் முன்தினம் நடந்த கோர ரெயில் விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு , கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரவீண்குமார், கீர்த்தி கணேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×