search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில்  மரக்கன்றுகள் நடும் விழா
    X

    ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
    • புதுச்சேரியில் வருகிற 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படவுள்ளன.

    ஓசூர்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் காப்போம் அமைப்பு மற்றும் ஈஷா'காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும், இந்தாண்டு இலக்கான 1.10 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    அதன்படி, இந்தாண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படவுள்ளன.

    இது குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. ஓசூரில் நாளை (திங்கட்கிழமை) அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஏ.மனோகரன் மற்றும் அதியமான் பொறியியற் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை, கல்லூரி வளாகத்தில் நட்டு விழாவை தொடங்கிவைக்கின்றனர். தொடர்ந்து, அன்று மாலை வரை தொல்லியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் வேடியப்பன் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது ஈஷா நிர்வாகி போரிஸ் பீம் உடன் இருந்தார்.

    Next Story
    ×