என் மலர்
நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி 4 பசுசாவு"
- மின் கம்பம் தீடீரென சாய்ந்து விழுந்தது.
- மின் கம்பிகள் மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்தில் 4 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமாதையன் (வயது 35). விவசாயி. இவர் 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார்.அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வன் (30). இவரும் 1 பசு மாட்டை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் நேற்று சுமார் 11.30 மணியளவில் அருகே உள்ள தோட்டத்தில் மேய்ச்ச லுக்காக கட்டிவைத்த நிலையில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அங்கு நடப்பட்டிருந்த மின் கம்பம் தீடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது மின்கம்பத்தில் பொருத்த பட்டிருந்த மின் கம்பிகள் வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்தில் 4 மாடுகளும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் கதறி அழுது புலம்பினர்.
பின்னர் தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார், வருவாய் அலுவலர்கள், மின் வாரிய அலுவலர்கள், கால்நடை மருத்துவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






