என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது.
    • காலியிடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடப்பி–ரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது. இதில், மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்க்கை விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கல்லூரியில் சேரலாம்.

    கலந்தாய்வில் பங்கேற்ப–வர்கள் மாற்றுச் சான்றிதழ் (அசல், இ.எம்.ஐ.எஸ்., எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 அசல் சான்றிதழ்கள்) சாதி சான்றிதழ் (அசல்) வருமானச் சான்றிதழ், மார்பளவு புகைப்படங்கள்-4, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முதல்பக்க நகல், சேர்க்கைக் கட்டணமாக, கலைப்பிரிவுக்கு 2,100, அறிவியல் பிரிவிற்கு 2,120, கணினி அறிவியல் பிரிவிற்கு 1,220 ரூபாய் எடுத்து வரவேண்டும்.

    காலியிடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வை யிட்டார்.
    • மேலும் மகளிரிடம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி 23-வது வார்டு ராசுவீதியில் உள்ள தொடக்க பள்ளியில் பொது நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் நிரந்தர சமையல் அறை கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் வசந்தி, பொறியாளர் சேகரன், இளநிலை பொறியாளர்கள் அறிவழகன், உலகநாதன், கவுன்சிலர்கள் தேன்மொழி மாதேஷ், பாலாஜி, சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை 1-வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வை யிட்டார்.

    மேலும் மகளிரிடம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பேசினார். அப்போது நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நிர்வாகி அன்பரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

    • மாநகராட்சி கூட்டரங்கில், ஆணையாளர் சினேகா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
    • இதில், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, உள்பட 38 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீடு குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, நேற்று மாநகராட்சி கூட்டரங்கில், ஆணையாளர் சினேகா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.

    இதில், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, உள்பட 38 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த தேர்தலில், தி.மு.க.வை சேர்ந்த மம்தா சந்தோஷ், நாகராஜ், கிருஷ்ணப்பா, சென்னீரப்பா, வெங்கடேஷ் ஆகியோரும், அ.தி.மு.க. கவுன்சிலர்களான லட்சுமி ஹேமகுமார், ரஜினிகாந்த், சிவராம் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் பாக்கியலட்சுமி குப்புசாமி என மொத்தம் 9 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • ஆக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகளில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.
    • 35 பள்ளிகளில் இருந்து 350 மாணவர்களும், 300 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று சரக அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிரோசலின் தொடங்கி வைத்தார். இதில், கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், கேரம் மற்றும் ஆக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகளில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.

    அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 35 பள்ளிகளில் இருந்து 350 மாணவர்களும், 300 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    • விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
    • விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.

    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14, கோவிந்தப்பமுதலி தெரு, வார்டு எண் 7, பன்னீர் செல்வம் தெரு ஆகிய இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில், நடைபெறும் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என முதல் அமைச்சர் அறிவித்து, அதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் முகாமை தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் கடந்த 24-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    நமது மாவடடத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 16-ந் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.

    விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நடைபெறும் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.07.2023 முதல் 26.07.2023 வரை 8 வட்டங்களில் உள்ள 584 நியாயவிலைக ்கடைகளுக்குட்பட்ட பகுதிகளில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 404 மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, காவேரிப்பட்டிணம் பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ் அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து திம்மராயப்பாவை சரமாரியாக தாக்கினார்.
    • போலீசார் வெங்கட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது29). விவசாயி.

    மருதாண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (25).

    இருவரும் நேற்று முன்தினம் இரவு குண்டுகுறுக்கி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுக்குடித்தனர்.

    அப்போது போதையில் இருந்த வெங்கட்ராஜூக்கும், திம்மராயப்பாவுக்கும் இடையே திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ் அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து திம்மராயப்பாவை சரமாரியாக தாக்கினார்.

    இதில் காயமடைந்த திம்மராயப்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திம்மராயப்பா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வெங்கட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் வெங்கட்ராஜ் போலீசாரிடம் திம்மராயப்பா தன்னை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர்கள் மீது மோதியது.
    • அங்கு வெங்கடாஜலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குண்டாலமடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது40). லாரி டிரைவரான இவர் தனது நண்பர் எஸ்.மோட்டூரைச் சேர்ந்த தர்மலிங்கம் (30) என்பவருடன் சம்பவத்தன்று தருமபுரி-திருப்பத்தூர் சாலை மஞ்சமேடு என்ற பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர்கள் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வெங்கடாஜலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்மலிங்கத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5½ கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • அவரிடம் இருந்து ஸ்கூட்டரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரை வழிமறித்து சோதனை செய்ததில், ஓசூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த பாரத் (வயது 28) என்பவர் ரூ.6,500 மதிப்புள்ள 5½ கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஸ்கூட்டரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆத்திரமடைந்த கீதா இந்த குடிநீர் குழாயை யார் உடைத்தது என்று தெரியாமல் சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார்.
    • இதில் காயமடைந்த கீதா கிருஷ்ணகிரி அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி சமாண்டாமலை சிப்பாயூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி கீதா (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முனுசாமி மகன் சக்தி(36).

    இந்த நிலையில் கீதா வீட்டின் அருகே இருந்த குடிநீர் குழாயை மர்ம நபர்கள் யாரோ ஒருவர் உடைத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த கீதா இந்த குடிநீர் குழாயை யார் உடைத்தது என்று தெரியாமல் சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்தி தன்னை தான் திட்டுவதாக நினைத்து அதனை தட்டி கேட்டார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சக்தி, கீதாவை ஆபாசமாக திட்டி சரமாரியாக கையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கீதா கிருஷ்ணகிரி அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து கீதா கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சக்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சக்தி போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் கீதா, அவரது கணவர் வாசு ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • சிறுதானிய பயிர்களை பயிரிடுதல் மற்றும் இடுபொருள் மானிய திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    ஊத்தங்கரை,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொல்லநாயக்கனூர் கிராமத்தில் வேளாண்மைத்துறையில் அட்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா தலைமை வகித்தார்.

    இதில் நக்கல்பட்டி ஸ்ரீவிநாயகா கோலாட்டம், கும்மி ஆட்ட கிராமிய கலைக்குழு மூலம், வேளாண்மைத்துறை திட்டம், உழவன் செயலி பயன்பாடு, நுண்ணீர் பாசன திட்டம், இயற்கை வேளாண்மை, மண் பரிசோதனை செய்தல், சிறுதானிய பயிர்களை பயிரிடுதல் மற்றும் இடுபொருள் மானிய திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், அட்மா திட்டப்பணிகள் குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

    • காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் என மொத்தம் ரூ.4 கோடியே 64 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் சமுதாக கூடம் கட்டுமான பணிகள், சுண்டேகுப்பம் ஊராட்சி செட்டிமாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ். ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதே போல், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் கரகூர் வளமீட்பு பூங்காவில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரம் மமிப்பில் கழிவு நீர் கசடு சுத்திகரிப்பு மையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஈரக்கழிவுகளை உரமாக்கும் கூடம் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் என மொத்தம் ரூ.4 கோடியே 64 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மலையாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    தொடர்ந்து சுண்டேகுப்பம் ஊராட்சி, செட்டிமாரம்பட்டி, மலையாண்டஅள்ளி, கன்னிநகர் மற்றும சந்தாபுரம் ஆகிய கூட்டுறவு நியாய விலைக ்கடைகளுக்குட்பட்ட பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் சபாரத்தினம், சுமதி, தமிழ்செல்வி, பணி மேற்பார்வையாளர்கள் கவிதா, விஜயராஜ், ரீனா, வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைசாமி, எல்லம்மாள், அரசுகோவிந்தசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருப்பதி, பேரூராட்சியில் பேரூராட்சி செயல்அலுவலர் சாம்கிங்ஸ்டன், ஜீனுர் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் அனிஷாராணி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் பழனிசாமி, இளநிலை உதவியாளர் இளங்கோ மற்றும் அலுவலக பணியாளர்கள் கார்த்திகேயன், செந்தில், முகமதுஇத்ரிஸ், விக்னேஷ், ராஜேஸ்வரி, விஞ்ஞானிகள், பேராசிரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    • ஓசூரில் நேற்று மாலை, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    ஓசூர், 

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஓசூரில் நேற்று மாலை, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ×