என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் விவசாயியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
- ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ் அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து திம்மராயப்பாவை சரமாரியாக தாக்கினார்.
- போலீசார் வெங்கட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது29). விவசாயி.
மருதாண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (25).
இருவரும் நேற்று முன்தினம் இரவு குண்டுகுறுக்கி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுக்குடித்தனர்.
அப்போது போதையில் இருந்த வெங்கட்ராஜூக்கும், திம்மராயப்பாவுக்கும் இடையே திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ் அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து திம்மராயப்பாவை சரமாரியாக தாக்கினார்.
இதில் காயமடைந்த திம்மராயப்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து திம்மராயப்பா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வெங்கட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் வெங்கட்ராஜ் போலீசாரிடம் திம்மராயப்பா தன்னை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.






