என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொல்லநாயக்கனூர் பகுதியில் வேளாண் திட்டங்கள் குறித்து கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
- கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- சிறுதானிய பயிர்களை பயிரிடுதல் மற்றும் இடுபொருள் மானிய திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொல்லநாயக்கனூர் கிராமத்தில் வேளாண்மைத்துறையில் அட்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா தலைமை வகித்தார்.
இதில் நக்கல்பட்டி ஸ்ரீவிநாயகா கோலாட்டம், கும்மி ஆட்ட கிராமிய கலைக்குழு மூலம், வேளாண்மைத்துறை திட்டம், உழவன் செயலி பயன்பாடு, நுண்ணீர் பாசன திட்டம், இயற்கை வேளாண்மை, மண் பரிசோதனை செய்தல், சிறுதானிய பயிர்களை பயிரிடுதல் மற்றும் இடுபொருள் மானிய திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், அட்மா திட்டப்பணிகள் குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர்.






