என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்களுக்கான சேர்க்கை"
- பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது.
- காலியிடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடப்பி–ரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது. இதில், மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்க்கை விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கல்லூரியில் சேரலாம்.
கலந்தாய்வில் பங்கேற்ப–வர்கள் மாற்றுச் சான்றிதழ் (அசல், இ.எம்.ஐ.எஸ்., எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 அசல் சான்றிதழ்கள்) சாதி சான்றிதழ் (அசல்) வருமானச் சான்றிதழ், மார்பளவு புகைப்படங்கள்-4, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முதல்பக்க நகல், சேர்க்கைக் கட்டணமாக, கலைப்பிரிவுக்கு 2,100, அறிவியல் பிரிவிற்கு 2,120, கணினி அறிவியல் பிரிவிற்கு 1,220 ரூபாய் எடுத்து வரவேண்டும்.
காலியிடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






