என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
    X

    பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

    • ஆத்திரமடைந்த கீதா இந்த குடிநீர் குழாயை யார் உடைத்தது என்று தெரியாமல் சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார்.
    • இதில் காயமடைந்த கீதா கிருஷ்ணகிரி அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சமாண்டாமலை சிப்பாயூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி கீதா (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முனுசாமி மகன் சக்தி(36).

    இந்த நிலையில் கீதா வீட்டின் அருகே இருந்த குடிநீர் குழாயை மர்ம நபர்கள் யாரோ ஒருவர் உடைத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த கீதா இந்த குடிநீர் குழாயை யார் உடைத்தது என்று தெரியாமல் சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்தி தன்னை தான் திட்டுவதாக நினைத்து அதனை தட்டி கேட்டார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சக்தி, கீதாவை ஆபாசமாக திட்டி சரமாரியாக கையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கீதா கிருஷ்ணகிரி அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து கீதா கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சக்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சக்தி போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் கீதா, அவரது கணவர் வாசு ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×