என் மலர்
கிருஷ்ணகிரி
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை அருகிலுள்ள மணியம்பாடி கிராமத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது.
- யானை கிராம பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன.
இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது அருகில் உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை அருகிலுள்ள மணியம்பாடி கிராமத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது.
இந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்து, தின்று அட்டகாசம் செய்தன.
யானை கிராம பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென்று வெடிவிபத்து நடந்து 9 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால் 15 பேர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், வெடிவிபத்தால், பட்டாசு குடோனை சுற்றி இருந்த 5 கட்டிடங்கள் இடிந்து சேதமானது. இதேபோல் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவர் உடைந்து சேதமானது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் பழையபேட்டை பகுதியில் விபத்த இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிவிபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு இன்று அமைச்சர் சக்கரபாணி அரசு அறிவித்த நிதிஉதவிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஆய்வறிக்கை இன்று அவர்கள் தாக்கல் செய்தனர். அதில் இந்த வெடிவிபத்துக்கு ஒட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்ததால் தான் அருகில் இருந்த பட்டாசு குடோன் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு.
- இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு அமித் ஷா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்ததாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- இரவு 7 மணிக்கு ராகமாலிகா குழுவின் இசை கச்சேரி நடைபெற்றது.
- அன்னதான நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் மொகரம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். நேற்று இரவு 7 மணிக்கு ராகமாலிகா குழுவின் இசை கச்சேரி நடைபெற்றது.
இதையடுத்து ஜே.கே.எஸ்.பாபு தலைமையில் மேல் மக்கானில் மொகரம் திருவிழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய செயலா ளர்கள் தேங்காய் சுப்பிர மணி, மகேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், சாஜித் மற்றும் மேல் மக்கான் விழா கமிட்டி பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். பின்னர் திருநெல்வேலி தீன்முரசு ஆழ்வை உஸ்மானின் இஸ்லாமிய பாட்டுக் கச்சேரி நடைபெற்றது.
- அதியமான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் பேராசிரியர்களும், மாணவிகளும் அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து இயற்பியல் துறை சார்பாக ஆஸ்ட்ரோ அவெஞ்சர்ஸ் - 2023 என்ற நிகழ்வின் தொடக்கமாக முதுநிலை இயற்பியல்துறை இரண்டாம் ஆண்டு மாணவி கலையரசி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன், அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி. திருமால்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கவிதை போட்டி, வினாடி, வினா, கட்டுரை போட்டி, அப்துல் கலாமின் புகைப்படம் வரைதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வின் முடிவில் இளம்அறிவியல் இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி யுவஸ்ரீ நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறை சார்ந்த மாணவிகளும் பிற அறிவியல் துறை மாணவிகளும் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
- குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
- 46 பேர் மீது வழக்குப்பதவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வந்த பேர், நிபந்தனையை கடைபிடிக்காமலும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமலும் இருந்து வந்தனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா, ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை போலீசார் மொத்தம் 46 பேர் மீது வழக்குப்பதவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
- அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.
கிருஷ்ணகிரி,
ஆடி 2-வது வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று இரண்டாம் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, திராட்சை மற்றும் பூலோகம் போன்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் வேப்பிலை அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீயோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆடி வெள்ளியை யொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கே.மோட்டூர் வவ்வால்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
- டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மண் இருந்தது , தெரிய வந்தது.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் போலீசார் கே.மோட்டூர் வவ்வால்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று நின்ற ஒரு டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மண் இருந்ததும், அதை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கஞ்சா விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர்.
- 850 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்த பேளகொண்டப்பள்ளி அனுகாஷ் மாரண்ணா (24), ஓசூர் சின்ன எலசகிரி ரஞ்சித் குமார் (27), ஓசூர் காமராஜ் நகர் மனோஜகுமார் (27), தேன்கனிக்கோட்டை தாலுகா சாதனைப்பள்ளி ஹரீஷ் (22), தேவகானப்பள்ளி அருகே உள்ள தோகரை அக்ரஹாரம் பிரகாஷ் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 850 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8,500 ஆகும்.
- மாடு நிலத்தில் மேய்ந்தது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
- 24-ந் தேதி அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில் 2 தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
காவேரிப்பட்டணம்,
நாகரசம்பட்டி அருகே உள்ள சின்ன கரடியூரை சேர்ந்தவர் மாரி (வயது 60). பெரிய கரடியூரை சேர்ந்தவர் பாலாஜி (27). இவர்களிடையே மாடு நிலத்தில் மேய்ந்தது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில் 2 தரப்பினரும் மோதிக் கொண்டனர். அதில் மாரி காயம் அடைந்தார். அவர் கொடுத்த புகரின் பேரில் பாலாஜ (27), ராஜா மணி (63), நாகராஜ் (66) ஆகிய 3 பேர் மீது நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் பெரியசாமி (70), மாரி (60) உள்பட 4 பேர் மீது வழககு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பட்டாசு குடோனில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர்.
- வெடி விபத்தால் குடோன் அருகே இருந்த ஒரு ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோன் வெடித்தது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதால் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் உள்ள காட்டிநாயனப்பள்ளி சாலையில் பட்டாசு குடோன் அமைத்து பட்டாசுகளை மொத்த விற்பனை செய்து வருகிறார்.
அந்த பட்டாசு குடோனில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பட்டாசு குடோனுக்கு வழக்கம்போல் தொழிலாளிகள் வேலைக்கு வந்தனர். அப்போது திடீரென்று பயங்கர வெடித்து சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதில் குடோனில் பணிபுரிந்த 4 தொழிலாளிகள் தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.
வெடிவிபத்தில் சிக்கிய மீதமுள்ள 6 தொழிலாளிகள் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த வெடி விபத்தால் குடோன் அருகே இருந்த ஒரு ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் 10 பேருக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு குடோன் அருகே இருந்த ஓட்டல் இடிந்து விழுந்ததால், அதில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டுள்ளனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது வரும் வழியிலேயே மேலும் 4 பேர் உயிரிழந்தார். காயமடைந்த 6 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிவிபத்து குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன், மாவட்ட கலெக்டர் சரயு, மற்றும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெடிவிபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
கிருஷ்ணகிரி:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி, பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடிவிபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு குடோனில் பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






