என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொகரம் திருவிழா"

    • இரவு 7 மணிக்கு ராகமாலிகா குழுவின் இசை கச்சேரி நடைபெற்றது.
    • அன்னதான நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தொடங்கி வைத்தார்.

     காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் மொகரம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். நேற்று இரவு 7 மணிக்கு ராகமாலிகா குழுவின் இசை கச்சேரி நடைபெற்றது.

    இதையடுத்து ஜே.கே.எஸ்.பாபு தலைமையில் மேல் மக்கானில் மொகரம் திருவிழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் தேங்காய் சுப்பிர மணி, மகேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், சாஜித் மற்றும் மேல் மக்கான் விழா கமிட்டி பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். பின்னர் திருநெல்வேலி தீன்முரசு ஆழ்வை உஸ்மானின் இஸ்லாமிய பாட்டுக் கச்சேரி நடைபெற்றது.

    ×