ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

அதியமான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் பேராசிரியர்களும், மாணவிகளும் அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து இயற்பியல் துறை சார்பாக ஆஸ்ட்ரோ அவெஞ்சர்ஸ் - 2023 என்ற நிகழ்வின் தொடக்கமாக முதுநிலை இயற்பியல்துறை இரண்டாம் ஆண்டு மாணவி கலையரசி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன், அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி. திருமால்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கவிதை போட்டி, வினாடி, வினா, கட்டுரை போட்டி, அப்துல் கலாமின் புகைப்படம் வரைதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வின் முடிவில் இளம்அறிவியல் இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி யுவஸ்ரீ நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறை சார்ந்த மாணவிகளும் பிற அறிவியல் துறை மாணவிகளும் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com