என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஓசூரில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

    • ஓசூரில் நேற்று மாலை, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஓசூரில் நேற்று மாலை, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×