என் மலர்tooltip icon

    கரூர்

    • மாடியில் நின்றவாறு செல்போன் பேசிய எலக்ட்ரீசியன் தவறி விழுந்து பலியானார்
    • இது குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூரில் மாடியில் நின்றவாறு செல்போன் பேசிய எலக்ட்ரீசியன் தவறி விழுது பலியானார். கரூர் மாவட்டம் வாங்கல் அருகேயுள்ள கோவில் பாளையத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37) எலக்ட்ரீசியனான இவர் கடந்த 5-ம் தேதி மாலை தனது வீட்டின் முதல் மாடியில் நின்றவாறு செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அங்கு சிகிச்ைச பலனின்றி திருமுருகன் உயிரிழந்தார். இது குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் அறிமுக விழா நடைபெற்றது
    • விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் உப்புபாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் மனோசாமுவேல் மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கினார். முதலாமாண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஊக்கமூட்டும் விதமாக மாணவிகளிடம் உரையாற்றினர். அதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக முதலாமாண்டு மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவமழை முன்னிட்டு புகளூர் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடந்தது
    • வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் குறித்த ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு காவிரி ஆற்றில் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காவிரி ஆற்றில் சிக்கி கொண்டவர்களை எப்படி காப்பாற்றுவது, காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது, வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டால் தான் எப்படி தப்பிப்பது, வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் குறித்த ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் போட்டை நடு காவிரி ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், கயிறு போன்றவற்றின் மூலம் ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    • கடையில் நோட்டு புத்தகங்கள் திருடியவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் இதுகுறுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அருகே உள்ள சுங்கபேட்டையை சேர்ந்தவர் நடேஷ் (வயது 33). இவர் கோவை ரோட்டில் ஸ்டேஷனரிஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த நோட்டு புத்தகங்கள் அடிக்கடி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடேஷ் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நோட்டு புத்தகங்களை திருடியது கரூர் செல்வநகரை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் பள்ளி மாணவன் மாயமானார்
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து, மாயமான தினேசை தேடி வருகின்றார்.

    கரூர்,

    கரூர் வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் தினேஷ் (வயது 16). இவர் கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் தினேஷ் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து தினேசின் பெற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து, மாயமான தினேசை தேடி வருகின்றார்.

    • வேலாயுதம்பாளையம் அருகே தென்னை மரங்களில் திடீரென தீ பிடித்தது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்னைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40). இவரது தோட்டம் அருகாமையில் உள்ள வெள்ளதாரையில் தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்னை மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அரவிந்த் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும் தீயணைக்க முடியவில்லை. காற்றின் காரணமாக தீ மள மள வென வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது. இது குறித்து உடனடியாக அரவிந்த் புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்னைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இதனால் தீ பக்கத்து தோட்டங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்தது
    • பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர். வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அந்த பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.220-முல்லைப் பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேற்றுக்குள் சிக்கித் தவித்த பசு மாடு மீட்க்கப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேற்றுக்குள் இருந்து மீட்டனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே புன்செய் புகளூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் வடிவேல் நகர் தோட்டம் பகுதியில் தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கொடிக்கால் கிடங்கு சீரமைக்கப்பட்டு இருந்த சேற்று குழிக்குள் பசுமாடு இறங்கிவிட்டது. பின்னர் பசுமாடு அந்த சேற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தது. அதைப் பார்த்த சேகர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து பசுமாட்டை சேற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேற்றுக்குள் இருந்து மீட்டனர்.

    • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய மொழி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை, சென்னை, ஜப்பான் தூதரகத்தின் ஆராய்ச்சி ஆலோசகர் தெராகா மாமி விவரித்தார்.

    கரூர்,

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய மொழி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சென்னை ஜப்பான் தூதரகத்தின் தூதர் தாஹா மசாயுகி தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள கலாச்சார பாரம்பரிய ஒற்றுமையையும், ஜப்பானிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் திறமையான இந்திய நிபுணர்களை எதிர்பார்க்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் ஜப்பான் சார்ந்த 600 நிறுவனங்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை, சென்னை, ஜப்பான் தூதரகத்தின் ஆராய்ச்சி ஆலோசகர் தெராகா மாமி விவரித்தார். எம்.கே.சி.இ'ல், ஜப்பானிய மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 மாணவர்கள் உள்ளனர், மேலும் சுமார் 100 முன்னாள் மாணவர்கள் தற்போது ஜப்பானில் பணிபுரிகின்றனர், மேலும் 300 மாணவர்கள் ஜெஎல்பிடி சான்றிதழின் காரணமாக இந்திய நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர் என்று அசோக் சங்கர், இயக்குனர், எஸ்எஸ்ஜெஎல்டிசி தெரிவித்தார்.

    தலைமை உரை செயலாளர் முனைவர் ராமகிருஷ்ணன் வழங்கினார். முனைவர் குப்புசாமி, நிர்வாக இயக்குனர் மற்றும் முனைவர் முருகன், முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்கள். கலந்துரையாடல் அமர்வில், விசா செயல்முறை, உயர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களை பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அயல்மொழி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் குரு பிரசாத், மாணவர் நலத்துறை தலைவர் முனைவர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ஆலயத்தில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருண கணபதிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தவுட்டு ப்பாளையம், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், அத்திப்பாளையம், உப்புபாளையம், புன்னம்சத்திரம், புன்னம், கரைப்பாளையம், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, புகளூர், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • பருவ மழை பெய்வதை முன்னிட்டு விவசாயிகள் உற்சாகம்

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், விவசாயிகள் காய்கறி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, பாப்ப காப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்த ரப்பட்டி, திருக்காம் புலியூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் அதிகளவு காய்கறி சாகுபடி செய்து வருகின் றனர். வெண்டைக்காய், கத்திரிக்காய் களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். வெண்டைக்காய் கிலோ, 40 ரூபாய், கத்திரிக்காய், 30 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. காய்கறிகள் பறித்து லாலாப்பேட்டை, ஜெங்கொண்டம், மாயனுார் ஆகிய பழைய வார சந்தைகளில் விற்பனை செய்யப் படுகிறது. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மளிகை வியாபாரி உள்ளிட்ட இருவரின் பைக் திருட்டு
    • போலீசார் நடத்திய விசாரணையில் 2 திருடர்கள் கைது

    கரூர்,

    கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந் தவர் மணிகண்டன். மளிகை வியாபாரி. இவர் தனது கே.டி.எம்., பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இதே போல கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சேர்ந்தவர் முனியப்பன் (வயது 55). இவர் தனது வீட்டின் நிறுத்தி வைத்திருந்த டூவீலரை இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து முனியப்பன் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள மேல்செட்டி தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மூர்த்தி (எ) சத்தியமூர்த்தி (வயது 19) மற்றும்திருச்சி மாவட்டம், சமயபுரம் பழைய மாரியம்மன் கோயில், பள்ளிவாசல் தெரு சரவணன் என்பவரின் மகன் விஜயகுமார் (20) ஆகிய இருவரும் திருடி சென்றது தெரிய வந்தது. மாயனூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×