என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் இரண்டு பைக் திருட்டு
- மளிகை வியாபாரி உள்ளிட்ட இருவரின் பைக் திருட்டு
- போலீசார் நடத்திய விசாரணையில் 2 திருடர்கள் கைது
கரூர்,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந் தவர் மணிகண்டன். மளிகை வியாபாரி. இவர் தனது கே.டி.எம்., பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இதே போல கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சேர்ந்தவர் முனியப்பன் (வயது 55). இவர் தனது வீட்டின் நிறுத்தி வைத்திருந்த டூவீலரை இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து முனியப்பன் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள மேல்செட்டி தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மூர்த்தி (எ) சத்தியமூர்த்தி (வயது 19) மற்றும்திருச்சி மாவட்டம், சமயபுரம் பழைய மாரியம்மன் கோயில், பள்ளிவாசல் தெரு சரவணன் என்பவரின் மகன் விஜயகுமார் (20) ஆகிய இருவரும் திருடி சென்றது தெரிய வந்தது. மாயனூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






