என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடியில் நின்றவாறு செல்போன் பேசிய எலக்ட்ரீசியன் தவறி விழுந்து பலி
- மாடியில் நின்றவாறு செல்போன் பேசிய எலக்ட்ரீசியன் தவறி விழுந்து பலியானார்
- இது குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூரில் மாடியில் நின்றவாறு செல்போன் பேசிய எலக்ட்ரீசியன் தவறி விழுது பலியானார். கரூர் மாவட்டம் வாங்கல் அருகேயுள்ள கோவில் பாளையத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37) எலக்ட்ரீசியனான இவர் கடந்த 5-ம் தேதி மாலை தனது வீட்டின் முதல் மாடியில் நின்றவாறு செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அங்கு சிகிச்ைச பலனின்றி திருமுருகன் உயிரிழந்தார். இது குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






