என் மலர்
கன்னியாகுமரி
- கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்
- போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார் :
திருவட்டார் அருகே உள்ள திருவறம்பு கொல்வேர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி (வயது 47). செங்கல் சூளை தொழிலாளியான இவர், மனைவி-மகளை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான ஜெபமணி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஜெபமணி, மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் பாய் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
- கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி திருட்டுப்போன 2 மின் மோட்டார்களை மீட்டனர்
கொல்லங்கோடு :
கொல்லங்கோடு பகுதிக்குட்பட்ட வள்ளவிளை பாரிகடவு பகுதியை சேர்ந்த நிஜா (வயது 34) மற்றும் வள்ளவிளை பகுதியை சேர்ந்த மேரி விமலா ஆஷா (33) ஆகியோருக்கு சொந்தமான மின்மோட்டாரை கடந்த மே மாதம் மர்ம நபர் திருடி சென்றார். இந்த திருட்டு சம்பந்தமாக மஞ்ச தப்பு காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35) மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் கணேஷ்குமார் அம்பலகுளம் பகுதியில் வைத்து ராஜேஷை மடக்கி பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி திருட்டுப்போன 2 மின் மோட்டார்களை மீட்டு ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயில் கருகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பூதப்பாண்டி, நவ.2-
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கீழ விளாங்காடு பகுதியை சேர்ந்தவர் உமா. இவரது மனைவி அவ்வையார் (வயது 49). அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்த இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
அதன்பிறகு அவ்வையார் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை உமா வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார்.வீட்டில் அவ்வையார் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர் மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவ்வையார் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக இறந்தார். வெளியே சென்று வீடு திரும்பிய உமா, மனைவி தீயில் கருகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவ்வையார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
- சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நடைபெறுகிறது
கன்னியாகுமரி, நவ.2-
கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணி கள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா பயணி கள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.
இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடு முறை என்பதாலும், கிறிஸ்து மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை யொட்டியும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர் கள் கூட்டம் அலைமோதும்.
எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சபரிமலை சீசனையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவி லில் தினமும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர் களுக்கு வசதியாக திருக்கோ வில் நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்கு வசதி யாக "கியூ செட்" அமைந்து உள்ள பகுதியில் சிமெண்ட் தரைத்தளம் அமைக்கும் பணி, மின்விளக்கு வசதி மேல் கூரை சீரமைக்கும் பணி போன்ற பணிகள் நடை பெற்றுள்ளன. கோவிலின் வெளிப்பிரகா ரத்தில் உள்ள நடைபாதை குண்டும், குழியுமாக கிடந்தது. பிரகார நடைபாதையில் சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப் பட்டு சீரமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலை யில் வருகிற 17-ந்தேதி சபரி மலை சீசன் தொடங்குகிறது.
இந்த சீசனையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவார்கள். இதைத்தொ டர்ந்து பக்தர்களுக்கு வசதி யாக கோவிலில் நடை திறக்கும் நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க திருக்கோவில் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு வரும் லட்டு, அரவணை, முறுக்கு, பஞ்சா மிர்தம், அதிரசம் போன்ற பிரசா தங்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த சபரிமலை சீசனையொட்டி 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணியும் இப்போதே தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். ஆய்வின் போது நாகர் கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப் பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த உள்பட பலர் உடனிருந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர்.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் உள்ள வாவத்துறை கடலில் நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிண மாக மிதந்து கொண்டி ருந்தார்.
இதுகுறித்து கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர்.
அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. அவர் யார்? எந்த ஊர்? என்பன போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. அவர் வட மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
சுமார் 5 அடி உயரம், புது நிறம். அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண் டரா? அல்லது கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு அவரது பிணத்தை கடலில் வீசி வீட்டு சென்றார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 11 கிராமசபை கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கோஷம்
- மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
கன்னியாகுமரி, நவ.2-
மகாராஜபுரம் பஞ்சாயத்து சிறப்பு கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் இந்த பஞ்சாயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 11 கிராமசபை கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கோஷம் எழுப்பினர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடந்தது.
கூட்டத்தில் துணை தலைவர் பழனிகுமார், மகாராஜபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சுயம்புலிங்கம், அனீஸ்வரி, சுயம்பு, ராஜம், சுகாதார செவிலியர் ஹெப்சிபாய், மக்களை தேடி மருத்துவம் செவிலியர் ரூபி, சமூக ஆர்வலர் சொர்ணவதி உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களான சிவகாமி, கிருஷ்ணம்மாள், பகவதியம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும் மகாராஜபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்
- கல்லறைகளுக்கு சுண்ணாம்பு தெளித்தும், வர்ணம் பூசும் பணியையும் மேற்கொண்டனர்.
- காலை முதலே கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாகர்கோவில் :
உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்த வர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான கல்ல றைத்திருநாள் இன்று (வியாழக் கிழமை) கடை பிடிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்திலும், இன்று கத்தோலிக்க கிறிஸ்த வர்கள் மற்றும் சி.எஸ்.ஐ. சபை கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் அனு சரிக்கப்பட்டது. இதை யொட்டி கிறிஸ்தவர்கள் தங்களுடைய உறவினர்கள், முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை களில் வளர்ந்து கிடக்கும் செடி-கொடிகள், புற்கள் போன்றவற்றை அகற்றி, கல்லறைகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். சிலர் கல்லறைகளுக்கு சுண்ணாம்பு தெளித்தும், வர்ணம் பூசும் பணியையும் மேற்கொண்டனர்.
கல்லறைத்திருநாளான இன்று கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று தங்களுடைய குடும் பத்தினர், உறவினர்கள் மற்றும் முன்னோர்க ளுடைய கல்லறைகளில் மலர் மாலைகள் அணி வித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் பிரார்த்தனை செய்து, அஞ்சலி செலுத்தினர். இதனால் இன்று காலை முதலே கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இன்று மாலை கத்தோ லிக்க ஆலயங்களை சேர்ந்த பங்குத்தந்தையர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்தி ரிப்பார்கள். இதேபோல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் நினைவாக அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன
- கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராள மான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொரு ளும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மாதம் கண்காட்சியில் அரும் பொருளான கலை நயம் மிக்க காசுகள் எண்ணும் மரத்தட்டு இடம் பெற்று உள்ளது.
காசு எண்ண பயன்படும் இத்தகைய மரத்தட்டுக்கள் திருவனந்தபுரம், திருவி தாங்கூர், கொச்சின் போன்ற கேரள சமஸ்தான பகுதிகளிலும் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் குமரி மாவட்ட பகுதிகளிலும் பெருமளவில் வழக்கத்தில் இருந்தன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காசு எண்ணும் மரத்தட்டு செவ்வக வடிவமாக உள்ளது. இதில் மொத்தம் 200 குழிகள் உள்ளன. குத்து கோட்டு வரிசையில் 12 குழிகளும், கிடைகோட்டு வரிசையில் 15 புள்ளிகளும் உள்ளன.
முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன. ஆக மொத்தம் 200 குழிகள் உள்ளன. நமது முன்னோர்கள் பயன்ப டுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரி வித்தார். இந்த கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.
- அபராதத்தை கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு
- ரூ.2 கோடியே 14 லட்சம் அபராதம் வசூல்
நாகர்கோவில், நவ.2-
குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீ சார் பல்வேறு நட வடிக்கை களை மேற்கொண்டு வரு கிறார்கள்.
நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசன்க ளுக்குங பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வரு கிறார்கள். போக்கு வரத்து விதி முறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் தடுத்து நிறுத்தி போலீசார் அபரா தம் விதித்து வருகிறார்கள். கனிமவளங்களை அதி கமாக ஏற்றி வரும் லாரி களுக்கும் அபராதம் விதிக் கப்பட்டு வருகிறது. போலீ சாரின் இந்த சோதனையில் தினமும் 2000-க்கும் மேற் பட்டவர்கள் சிக்கி வரு கிறார்கள். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள்.
பார்வதிபுரம், வடசேரி, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக பகுதிகளில் வாகன சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். அதிகாரம் ஏற்றி வரும் வாக னங்களுக்கும் அபரா தம் விதிக்கப்பட்டு வரு கிறது. ஹெல்மெட் அணி யாமல் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதுடன் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கும் அபராதம் விதித் துள்ளனர். குடிபோதை யில் வாகனம் ஓட்டியவர்களும் இந்த சோதனையில் சிக்கி உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதத்தில் நாகர் கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலை யத்தில் மட்டும் போக்கு வரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.36 ஆயிரத்து 290 வழக்கு கள் பதிவு செய்யப்பட் டுள்ளது. இதன் மூலமாக ரூ.2 கோடியே 14 லட்சத்து 17 ஆயிரம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
10,267 வழக்குகளில் அபாரதம் விதிக்கப்பட்ட அபராத தொகையை கட்டாமல் உள்ளனர். இதன் மூலமாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் உள்ளது. இதை வசூல் செய்வதற்கான நட வடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகி றார்கள். அபராதம் விதிக் கப்பட்டவர்கள் உடனடியாக அபராத தொகையை கட்டா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இதேபோல் தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்குட் பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் அதை கட்டாமல் ஏராளமானோர் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த அபராத தொகைகளை எப்படி வசூல் செய்யலாம் என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை யில் இறங்கி உள்ளனர்.
இது தொடர்பாக பட்டி யல் தயாரிக்கப்பட்டு வரு கிறது. வட்டார போக்கு வரத்து அலுவலகம் மூ லமாக நடவடிக்கை எடுக்க லாமா? என்பது குறித்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- குருந்தன் கோட்டில் 58.4 மில்லி மீட்டர் பதிவு
- சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்ச ரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
இரணியல் பகுதியில் மாலை 5 மணிக்கு வானத் தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அதன்பிறகு இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும், இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும் இருந்தன. மழைக்கு மரங்க ளும் முறிந்து விழுந்து மின்சாரமும் தடைப்பட்டது.
குருந்தன்கோட்டிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 58.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோழிப்போர் விளை, தக்கலை, சுருளோடு, பூதப்பாண்டி, அடையா மடை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணை கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதை யடுத்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வ ரத்திற்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றவும் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.19 அடியாக இருந்தது. அணைக்கு 321 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 173 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.66 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரு வதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.
அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும் போது அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்ப தால் பேரூராட்சி நிர்வாகம் அதை கண்காணித்து வரு கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 4.2, பெருஞ்சாணி 3.6, சிற்றார் 1-4.2, சிற்றார் 2-10.6, பூதப்பாண்டி 4.6, களியல் 16.2, கன்னிமார் 4.2, கொட்டாரம் 2.2, குழித்துறை 22.2, மயிலாடி 2.2, நாகர்கோவில் 2, புத்தன் அணை 2, சுருளோடு 5.2, தக்கலை 44, குளச்சல் 18.6, இரணியல் 53, பாலமோர் 8.2, மாம்பழத்துறையாறு 30, கோழிப்போர்விளை 54.2, அடையாமடை 2, குருந்தன் கோடு 58.4, முள்ளங்கினா விளை 13.4, ஆணைக்கிடங்கு 29.2, முக்கடல் 24.
- குளச்சல் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்
குளச்சல் :
குளச்சல் நகர்மன்ற கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் செந்தில்கு மார், மேலாளர் ஜெயன், துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, சுகா தார அலுவலர் ஸ்டான்லி குமார், நகரமைப்பு அலு வலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சில் ஜாண்சன் (தி.மு.க.) பேசுகை யில், நகராட்சி பகுதியில் புல் பூண்டுகள் வெட்டப்ப டாமல் உள்ளது என்றார்.
பனிக்குருசு (தி.மு.க.), எனது வார்டில் சாலை சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. சாலை நடுவே உள்ள மின் கம்பத்தையும் மாற்ற வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர், மின் கம்பத்தை மாற்ற மின் வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும். முதலில் நகராட்சி வைத்துள்ள பாக்கி பணத்தை செலுத்த சொல்கி றார்கள்.
ரகீம் (தி.மு.க.), நம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை விடவும் மேஸ்திரிகள் அதிகம் பேர் உள்ளனர். நகர சுகாதாரம் பேண வேண்டும். அதனால் தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார். அன்வர் சதாத், பணியா ளர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என கூறி னார்.
ரமேஷ் (காங்கிரஸ்), வீடு கட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது என்றார். இதற்கு நகரமைப்பு ஆய்வாளர், அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்.
ஷீலா ஜெயந்தி (தி.மு.க.), சாஸ்தான்கரை டிப்போ மேற்கு சாலைக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜேசையா பெயரை சூட்ட வேண்டும் என்றார்.
ஜாண்சன், புதிய சிறுவர் பூங்காவிற்கு காயிதே மில்லத் பெயரை சூட்ட வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பேசிய
தலைவர், கடிதம் அனுப்பி உள்ளோம். பதில் வந்ததும் பெயரை சூட்டலாம் என்றார்.
ரகீம், நகராட்சி வீடு களிலிருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய்களை அடைக்கக்கூடாது என கவுன்சிலர்கள் கொடுத்த பொருள் அஜெண்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இது செயல் வடிவம் காண வேண்டும். கழிவுநீர் குழாய் களை அடைத்து பொது மக்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது.
ஜாண் பிரிட்டோ (தி.மு.க.), களிமார் மருத்துவ மனையிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் வாய்க்கா லில் கலக்கிறது. மேலும் வணிக வளாக கட்டிடங்கள், அரசு அலுவலக கட்டிடங்க ளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீரும் மழை நீர் வடிகாலில் கலக்கிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்ந்து புல் புதர்கள் வளர்ந்து, பாசிகள் படர்ந்து துர்நாற்றமடிக்கும் வெள்ளியாகுளத்தை அம்ரூத் திட்டத்தில் சுத்தம் செய்து பராமரிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது
- தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும்.
நாகர்கோவில் :
தக்கலை ஊராட்சி ஒன்றியம், மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பிலாவிளை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (புதன்கிழமை) சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அரசின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் முழு சுகாதாரத்தை கடைபிடித்திடவும், உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும்.
தற்போது, மழை காலம் ஆரம்பித்து விட்டதால், தங்களது வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்குவதை கண்காணிக்க வேண்டும். நோய்கள் பரப்பும் கொசு உற்பத்தி ஆகுவதை பொது மக்கள் தடுக்க முன்வர வேண்டும். ஏதேனும், நோய் ஏற்பட்டால், அது நேரடியாக உங்களையும், மறைமுகமாக உங்களது பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய வீட்டுவரி, சொத்துவரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும், தங்களது கைப்பேசி எண்கள் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்திட வேண்டும்.
தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது வரை "நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை காவலர்களுக்கும், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி னார்.
கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி)ரஜத் பீட்டன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, துணை இயக்குநர்கள்ஷீலா ஜாண் (தோட்டகலைத்துறை), வாணி (வேளாண்மை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, தக்கலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்அ ருள் அந்தோணி, மருதூர் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்செல்வராணி, கல்குளம் வட்டாட்சியர்கண்ணன், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்அன்பு உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்ட னர்.






