நாகர்கோவிலில் நாளை மறுநாள் நடக்கிறது தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் மேயர் மகேஷ் அறிவிப்பு

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி
நாகர்கோவிலில் நாளை மறுநாள் நடக்கிறது தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் மேயர் மகேஷ் அறிவிப்பு
Published on

நாகர்கோவில் : குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஒழுகினசேரியில் அமைந் துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் எனது தலைமையில் நடக்கிறது. நாகர்கோவில் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இளைஞர் மாநில துணை செயலாளர்கள் இன்பாரகு, ஜோயல், அப்துல் மாலிக், இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ராஜா, பிரபு கஜேந்திரன், ஆனந்தகுமார் ஆகிய துணை செயலாளர்கள் இளைஞரணி பொறுப்பு களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலை நடத்துகிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான வயது சான்றிதழுடன் கலந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் செய்து வருகிறார்.

எனவே நேர்காணலுக்கு விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com