search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமிதோப்பு அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் பழமை மாறாமல் புனரமைப்பு
    X

    சாமிதோப்பு அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் பழமை மாறாமல் புனரமைப்பு

    • முதல் கட்ட பணிகள் தொடங்கியது
    • நேற்று காலை 10 மணிக்கு பாலாலயம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    சாமிதோப்பு அருகே உள்ள உப்பளத்தின் நடுப்பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அளத்து பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மின்சார வசதிகள் இன்றி இருந்த கோவிலை மின்சார வசதிகள் ஏற்படுத்தி கோவிலை புனரமைக்க வேண்டும் என்று வடக்கு தாமரைகுளம் பண்ணையார் சமுதாய பொதுமக்கள் மற்றும் கோவிலை சுற்றி உள்ள வட்டார ஊர் பொதுமக்கள் தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் அந்த கோரிக்கையை அவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அளத்து பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி அலங்கார விளக்குகள் அமைத்து கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கோவிலுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் தொடங்க நேற்று காலை 10 மணிக்கு பாலாலயம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்க்கும் அலுவலர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரை பாரதி, இந்து சமய அறநிலையத்துறை நாகர்கோவில் தொகுதி ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலாலயம் பூஜையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் அளத்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காரியம் ஸ்ரீ ராமச்சந்திரன் செய்து இருந்தார்.

    Next Story
    ×