என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனதில்"

    • ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள மாணவ -மாணவிகளின் தங்கும் விடுதிகளுக்கு தமிழக அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது
    • மத்திய அரசால் வழங்கப்படும் நிதி குறைவாகவும், தாமதமாகவும் வருகிறது.

    நாகர்கோவில் : கன்னியாகுமரியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள மாணவ -மாணவிகளின் தங்கும் விடுதிகளுக்கு தமிழக அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய அரசால் வழங்கப்படும் நிதி குறைவாகவும், தாமதமாகவும் வருகிறது.

    ஆதிதிராவிடர் நலத்துறை யின் கீழ் இயங்கும் பள்ளி களை பள்ளிக்கல்வி துறை யில் இணைக்கும் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் ஏராளமான ஆதிதிராவிடர் நலத்துறை தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் புதிய 9 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நாகர்கோவிலில் நிருபர்களிடம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறி யதாவது:-

    கல்வியின் மூலமாகத்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறோம். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு விடுதிகளில் மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவு கட்டணத்தை அதிகப்படுத்தி கொடுத்துள்ளார்.

    பள்ளி மாணவர்களுக்கு ரூ.1400, கல்லூரி மாணவர்க ளுக்கு ரூ.1500 என அதிகப்ப டுத்தப்பட்டுள்ளது. விடுதிகள் பராமரிப்பு தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து இந்த ஆண்டு முதல் ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளை பொறுத்தமட்டில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகிறோம்.

    இப்போதைய காலகட்டத் தில் விடுதி மாணவர்கள் குறைந்து வருகிறார்கள். இதற்கு காரணம் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தான் மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பது குறைந்துள்ளது. குறைவாக பள்ளி மாணவர்கள் தங்கி இருக்கும்விடுதிகளை கல்லூரி மாணவர்கள் விடுதியாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    9 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்பட உள்ளது. சேதமடைந்த விடுதி கள் சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. விடுதியில் உள்ள உணவு மெனுக்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக ஆலோ சனை நடத்தி வருகிறோம். அதன்பிறகு மெனுக்களின் மாற்றம் கொண்டு வரப்படும். பொங்கல், உப்புமாவுக்கு பதிலாக வேறு ஏதாவது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். காய்கறிகள் அதிகமாக இருக்குமாறு விடுதிகளில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னையில்ரூ.44 கோடி செலவில் 10 மாடி யில் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலை மனதில் வைத்து தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×