என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜெனிகர் பிரபு (வயது 40) பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் ஜெனிகர் பிரபு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆசிரியர் ஜெனிகர் பிரபு கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுகிர்தா, முதுகலை படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், பயிற்சி மாணவி ப்ரீத்தி ஆகியோர் தான் காரணம் என சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று சுகிர்தாவின் தந்தை மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரித்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

    இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஹரீசுக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். இன்று அவர் விசாரணைக்கு வருவார் என கருதப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

    இதற்கிடையில் ஜெயிலில் உள்ள பேராசிரியர் பரமசிவம், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பேராசிரியர் பரமசிவத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    • சபாநாயகர் அப்பாவு பேச்சு
    • நாகரில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

    நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீதம், உள்ளாட்சியில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்தது. மேலும் பெண்கள் அந்த காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எந்திரமாகத் தான் இருந்தனர். அப்படிப்பட்ட அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர் தான். காமராஜர், பெரியார், கலைஞர் போன்றவர்கள் பெண்கள் படிப்பதற்கான உரிமையை பெற்றுக் கொடுத்தார்கள். சொத்தில் சம உரிமை என்பதை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அன்றைய காலகட்டத்தில் ஜாதி அடிப்படையில் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டது.

    அய்யா வைகுண்டருக்கு, முடிசூடும் பெருமாள் என்று பெயர் இருந்தது. அதை மாற்றி முத்துக் குட்டி என்று வைத்தார்கள். பேரை கூட மாற்றும் நிலை இருந்தது. மார்பில் துணி அணியக்கூடாது. தலையில் தலைப்பாகை அணியக்கூடாது காலில் செருப்பு அணியக்கூடாது என்ற நிலையை மாற்றி காட்டினார்கள். பெண் கல்விக்காக போராடியவர் கலைஞர். பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு உதவி தொகைகளை வழங்கினார். பட்டம் படித்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றார். இதன் மூலமாக தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்தது.

    இந்தியாவில் 34 சதவீதம் பேர் கல்வி கற்று உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 51 சதவீதம்பேர் கல்வி கற்று உள்ளனர். பெண்களைப் பொருத்தமட்டில் இந்தியாவில் 26 சதவீதம் பேர் கல்வி கற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் 72 சதவீதம் பேர் கல்வி பெற்றுள்ளனர். கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர்.

    குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-2ஐ விண்ணில் ஏவியவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் தான். இதைத்தொடர்ந்து சந்திராயான்-3ஐ குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் ஏவி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழகம் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியை வளர்க்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. ஆங்கிலம் சரளமாக பேச அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் விளங்கி வருகிறது.

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 306 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியராக இருந்த என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி. சட்டமன்ற தலைவராக்கி, ஆசிரியர் குலத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக கல்வி கண் திறந்தார். ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் 27 ஆயிரம் பள்ளிகளை திறந்து பெருமை சேர்த்தார். கடந்த ஆண்டு கல்லூரிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடங்களுக்கு காமராஜர் பேரிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு எதிரானதாகும். இந்தியாவில் தற்பொழுது 704 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. தமிழகத்தில் 74 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் மருத்துவம் படித்து வருகிறார்கள். மத்திய அரசு மீண்டும் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர பார்க்கிறது.

    புதிய கல்விக் கொள்கையால், நீட் தேர்வு போலவே கல்லூரிகளிலும் மேற்படிப்பு படிக்க நுழைவுத் தேர்வு வேண்டிய நிலை வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு குறித்து பேசினார்கள். மேயர் மகேஷ், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ், தலைவர் ஆவுடையப்பன்,குமரி மாவட்ட கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபாராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், எஸ்.எல்.பி. பள்ளி தலைமை ஆசிரியை ஜமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    நாகர்கோவில், நவ.7-

    நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பியாசா ஹாஜிபாபு ஏற்பாட்டில் இடலாக்குடி சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    தலைமையாசிரியை கவிதா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஹாஜிபாபு, பொருளாளர் அன்சாரி, எஸ்.எம்.சி. தலைவி நித்யா, கவுன்சிலர் சொர்ணதாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகர்கோவில் கோட்டார் லயன்ஸ் சங்க செயலாளர் தாஹா பாரூக் வரவேற்றார். முகாமை டாக்டர்கள் ஹசனுதீன், சேக் முஹம்மது ஆகியோர் தொடங்கி வைத்தனர். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முஜீப் ரஹ்மான், ரியாஸ், தாஹிர், பிரபு, ஆசிரிய-ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர் அத்தீக் ரஹ்மான் நன்றி கூறினார். 500-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், நவ.7-

    நாகர்கோவில் மாநகராட்சி 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 37-வது வார்டு சமரச வீதி குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சி லர்கள் மேரி ஜெனட் விஜிலா, செல்வலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகி கள் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 5-ந்தேதி மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா
    • போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில சீனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி கடந்த 4 மற்றும் 5-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

    இந்த போட்டியில் 160-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 5-ந்தேதி மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு இந்திய பளுதூக்கும் சம்மேளனத்தின் துணை தலைவரும், தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்க தலைவருமாகிய பொன் ராபர்ட்சிங் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில பளுதூக்கும் சங்க பொதுசெயலாளர் சண்முகவேல், பொருளாளர் சிதம்பரராஜன், குமரி மாவட்ட பளுதூக்கும் சங்க தலைவர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பளுதூக்கும் சங்கத்தினர் செய்திருந்தனர். முடிவில் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • உங்கள் வீடுகளில் பசுமையையும் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்கும்
    • இயற்கையான சோயா மெழுகு மெழுகுவர்த்திகளால் ஒளிரச் செய்யுங்கள்

    நாகர்கோவில் :

    தீபங்களின் திருநாளான தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் தருவாயில், நாட்கள் நெருங்க நெருங்க, இந்த வருடம் புதியதாக என்ன செய்யலாம் என்று மனதிலே உற்சா கத்துடனும், ஆர்ப்பரிப்புடனும் ஆரவாரத்துடனும் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். சுற்றுச்சூழலுக்கு உகந்ததான பொருட்களும் வாழ்க்கை முறைகளும் பிரபலமாகி கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் தீபாவளிக்கு இந்த புதிய நாகரிகத்தில் புதிய வகை பரிசளிப்புகள் பிரபலமாகி வருகின்றன.

    உங்கள் வீடுகளில் பசுமையையும் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்கும் தனித்துவம் செழிப்பான அலங்கார செடிகளால் கூடும். இளையோரும் முதியோரும் பிரபலங்களும் யாராக இருந்தாலும் மிகவும் விருப்பப்படும் அழகு செடிகள் எல்லோருக்கும் சந்தோஷம் தருபவையாக இருக்கும்.

    அதிகப்படியான நேரத்தை நாம் வீட்டினுள் செலவழிக்கும் பொழுது பச்சை நிறம் மற்றும் செடிகளின் பசுமை நமக்கு புத்துணர்ச்சி ஊட்டுப வையாக இருக்கின்றன. வீடுகளிலும் போதிய இடங்கள் இல்லாத நிலையில் எல்லோராலும் வீட்டுத் தோட்டமும் மாடித்தோட்டமும் அமைப்பது சாத்தியமான காரியங்கள் இல்லை. எளிய முறையில் நமது வீடுகளில் பசுமையான சூழலை உருவாக்கவும் அதன் மூலம் வரும் மன அமைதியும் சந்தோஷத்தை யும் அனுபவிக்கவும் வீட்டினுள் வளர்க்கும் செடிகள் மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன. இவைகள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன

    புதியதாக அழகு தாவரங்கள் வளர்த்த ஆர்வம் உள்ளவர்கள் அவைகளை கவனிக்கும் முறைகள் அறியாது மலைப்புடன் அழகு செடிகளை பார்த்துவிட்டு கடந்து செல்வது தான் வழக்கம். இந்த ஒரு நிலைமையை மாற்றி வீட்டினுள் அழகு செடிகள் வைப்பதை மிகவும் இலகுவாக மாற்றி அமைத்துள்ளன ஈத்தாமொழி எக்ஸ்க்ளுசிவ் வழங்கும் தென்னை நார் சார்ந்த பொருட்கள். இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து அழகு செடிகளும் தென்னைநார்சார் பொருட்களைக் கொண்டு முழுமையாக நிறுவி அமைக்கப்பட்டவை. எனவே இந்த செடிகளை அனுபவம் இல்லாதவர்கள் கூட மிகவும் எளிதில் கவனித்து பேணி பாதுகாக்க முடியும்

    தீபங்களின் திருநாளை இயற்கையான தீபங்களுடன் கொண்டா டுவதற்கு ஏதுவாக தேங்காய் ஓடுகளி லிருந்து கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்ட இயற்கை யான சோயா மெழுகு மெழுகுவர்த்தி களின் அழகிய சேகரிப்பு டன் பலவகை நறுமணங்க ளுடன் வீடுகளை ஒளிரச் செய்ய உங்கள் நண்பர்களுக்கு உங்கள் அன்பை பகிர இவைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த மெழுகுவர்த்திகள் பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உணர்வுகளை வசீகரிக்கும் இனிமையான வாசனை களையும் வெளிப்படுத்து கின்றன.

    இந்த தீபாவளி இனிதானதா கவும், உங்கள் வீடுகளிலும், உங்கள் நண்பர்கள் மத்தியிலும், சந்தோஷத்தையும், அமைதியையும் நல்ல உடல் நலனையும் கொண்டு வருபவையாக நிலை நிறுத்துவதாக அமைய வாழ்த்துகிறோம். உங்கள் அனைவருக்கும் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஈத்தாமொழி எக்ஸ்க்ளூசிவ்வின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    • பேன்சி வகை காலணிகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
    • நியூ ஜனதா புட்வேரில் 84 முன்னணி கம்பெனிகளின் காலணிகள், ஷூக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஹோம் சர்ச் அருகே புதுப்பொலிவுடன் நியூ ஜனதா புட்வேர் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் குழித்துறை சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகில் யமஹா ஷோரூம் மாடியிலும், குளச்சல் பீச்ரோடு காந்தி சந்திப்பு அருகில் ஜாஷா காம்ப்ளக்சிலும் அமைந்துள்ளது.

    நியூ ஜனதா புட்வேரில் மக்களின் மனம் கவரும் வகையில் விழாக்கால சிறப்பு தள்ளுபடி வழங்க ப்பட்டு வருகிறது. இங்கு வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நியூ ஜனதா புட்வேரில் விழாக்கால சிறப்பு விற்பனையாக அதிகமான அளவில் புது வகை காலணிகள் வந்துள்ளது. இங்கு முன்னணி நிறுவனங்களின் காலணிகள் உட்லேண்ட், பக்காரூ, ஸ்கீச்சர்ஸ், அடிடாஸ், பூமா, லீகூப்பர் மற்றும் விகேசி, வாக்கரூ, பாராகன், ஏரோ வாக், ஏரோஸ்டைல் உள்ளிட்டவை உள்ளன. அத்துடன் ஸ்கூல் ஷூஸ், ஷாக்ஸ், முன்னணி நிறுவனங்களின் ஸ்கூல் மற்றும் காலேஜ் பேக், ட்ராலிகள், பெல்ட், தொப்பி, ரெயின் கோட், கூலிங்கிளாஸ், மூட்டு வலி, கால்வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் காலணிகளும், மணப்பெண்களுக்கு தேவையான பேன்சி வகை காலணிகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

    நியூ ஜனதா புட்வேரில் 84 முன்னணி கம்பெனிகளின் காலணிகள், ஷூக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர டிராவல் பேக், குடைகள், ரெயின் கோட், தொப்பிகள், கண் கண்ணாடி உள்பட அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைந்த விலையிலும் இங்கு கிடைக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பேக், உயர்தர கம்பெனிகளின் ஷூக்கள், சுகாதாரமான குடிநீரை குடிக்க அழகிய வாட்டர் பாட்டில்கள், மாணவ-மாணவிகள் உணவு எடுத்து செல்ல வசதியாக டிபன் பாக்ஸ் போன்றவை பல்வேறு வடிவங்களில் விழாக்கால சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது தீபாவளி விற்பனை அமோகமாக நடந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. அனுபவம் மிக்க விற்பனையாளர்களை கொண்டு இந்த புட்வேர் நிறுவனம் இயங்கி வருகிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என நியூ ஜனதா புட்வேர் உரிமையாளர் கமல் நாசர் தெரிவித்துள்ளார்.

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு கலந்துரையாடல் கூட்டம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் சம்னுத்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஜெகன் ஆண்டனி, ஆனக்குழி சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்து வைக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    • சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர்
    • சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துசென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் அமைந்துள்ளது. இந்த கண்காட்சி கூடத்தின் முகப்பு வாயிலில் 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் ராமாயண வரலாற்றை சித்தரிக்கும் சித்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மேல் தளத்தில் பாரத மாதா வெண்கல சிலையுடன் கூடிய கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பினால் தங்க நிறத்தில் தகதகவென்று வித்தியாசமாக ஜொலித்தது. இந்த காட்சியை இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துசென்றனர்.

    • உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.
    • உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 347 ரொக்க பணம் வசூலாகி உள்ளது.

    கன்னியாகுமரி, நவ.7-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப் பட்டன. குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்கா ணிப்பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அதிகாரிகள் முன்னி லையில் நேற்று திறந்து எண்ணப் பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 347 ரொக்க பணம் வசூலாகி உள்ளது. இது தவிர 3 கிராம் 400 மில்லி கிராம் தங்கமும், 12 கிராம் 200 மில்லி கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.

    • சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோடு சந்திப்பில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.
    • மேல் சிகிச்சைக்காக களியங்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இரணியல் :

    பூதப்பாண்டி பட்டார்குளம் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49). இவர் தக்கலை அரசு மருத்துவமனையில் பதிவறை எழுத்தராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 31-ந்தேதி காலை வேலைக்கு செல்வதற்காக பூதப்பாண்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோடு சந்திப்பில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பனுக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக களியங்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அய்யபபன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி வேணி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி காரை ஒட்டி வந்த ரொனால்டினோ மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    ×