என் மலர்
கன்னியாகுமரி
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- மழை நின்றதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் இன்று காலையில்"திடீர்" என்று மழைபெய்தது. இன்னொரு புறம் கடல் சீற்ற மாகவும் கொந்தளிப்பா கவும் காணப்பட்டது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்துதொடங்கப் படவில்லை.இதனால் படகுத் துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
காலை 9 மணிக்கு மழை நின்றதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.அதன் பிறகுசுற்றுலா பயணிகள்விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
- விழாவிற்கு அ.தி.மு.க. வடக்கு பகுதி செய லாளர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார்.
- கே.சி.யு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
தீபாவளி பண்டிகையை யொட்டி நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் நிர்வாகி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புத்தேரி பராசக்தி கார்டனில் நடந்தது. விழாவிற்கு அ.தி.மு.க. வடக்கு பகுதி செய லாளர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார்.
விழாவில் நலத்திட்ட உதவிகளை மாநில நிர்வாகி கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சந்திரன், மாவட்ட துணை செயலாளர் பார்வதி, கவுன்சிலர் அக்சயா கண்ணன், பகுதி செயலாளர்கள் முருகேஷ்வரன், ஜெவின் விசு, இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மற்றும் கே.சி.யு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தாழக்குடி அழகம்மன்ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கூறினார்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
ஆரல்வாய்மொழி :
தாழக்குடியில் அழகம்மன்ஜெயந்திஸ்வரர் ஆலயத்தில் ரூ.3 லட்சம் செலவில் சோலார் மின்விளக்கு பொருத்தப் பட்டது. இதை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாழக்குடி பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார்,துணைத் தலைவர் ராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், வார்டு உறுப்பினர்கள் ரவிபிள்ளை, ரோகினி அய்யப்பன், சுரியபார்வதி, பாக்கியம், அழகம்மாள், ஜெயந்தி தி.மு.க. நிர்வாகிகள் சங்கர், வாரன், முத்துகிருஷ்ணன், பொறியாளர் ராஜ்குமார், சர்வேயர் அய்யப்பன், ஓய்வுபெற்றகண்காணிப்பாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.அறங்காவலர் குழு தலைவர் கூறும்போது இன்னும் சில மாதங்களில் தாழக்குடி அழகம்மன்ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கூறினார்.
- போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
- பேராசிரியர் பரமசிவம் மீண்டும் பாளை அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுகிர்தா, முதுகலை படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், பயிற்சி மாணவி ப்ரீத்தி ஆகியோர் தான் காரணம் என சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. மேலும் பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஹரீசுக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.
இதற்கிடையில் பேராசிரியர் பரமசிவத்துக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்காகவும் ஜாமின் மனு விசாரணைக்காகவும் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் நேற்று நாகர்கோவில் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து நேற்று மாலை அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பேராசிரியர் பரமசிவத்துக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவரது ஜாமின் மனு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவம், மீண்டும் பாளை அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு
- நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.
கன்னியாகுமரி :
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "சட்டமன்ற நாயகர்- கலைஞர்" விழா குழு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சபாநாயகரும் "சட்டமன்ற நாயகர்- கலை ஞர்" விழா குழு உறுப்பின ருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் நாகராஜன் முன்னிலைவகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை பேபி வர வேற்றுப் பேசினார். விழா வில் தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாணவி சுஷ்மா "கலைஞரின் திட்டங்களும் சாதனை களும்" என்ற தலைப்பிலும், மாணவி அபிநயா "கலைஞர்ஒரு சகாப்தம்" என்ற தலைப் பிலும், மாணவிதேவி சாதனா "கலைஞரின் திட்டங்கள்" என்ற தலைப் பிலும் மாணவி பிரபா ஏஞ்சல் "கலைஞரின் சட்டமன்ற சாதனைகள்" என்ற தலைப்பிலும், மாணவி சந்தியா "கலைஞரின் சாதனைகள்" என்ற தலைப்பிலும் பேசினார்கள். இதில் மாணவி அபிநயாவுக்கு முதல் பரிசும் மாணவி சந்தியாவுக்கு 2-வது பரிசும் மாணவி பிரபா ஏஞ்சலுக்கு 3-வது பரிசும் கிடைத்தது.
பரிசு பெற்ற இந்த மாணவிகளுக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடை யப்பன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செய லாளரும் முன்னாள் பேரூ ராட்சி வார்டு கவுன்சிலரு மான வைகுண்ட பெரு மாள், மாநில தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பேரூர் தி.மு.க. அவைத் தலைவர் சுப்பையா பிள்ளை, மாவட்ட தி.மு.க. பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் தமி ழன்ஜானி, கிருஷ்ண
குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் சட்டமன்ற பேரவை இணை செயலாளர் பாண்டியன் நன்றி கூறி னார்.
நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.
- உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
- தயாரிப்பு தேதி தெளிவாக இருக்க வேண்டும்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவர் செந்தில் குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற் பனை செய்யும் வியாபாரி களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள வட்டாரம், நகராட்சிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள், நுகர்வோர்கள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இனிப்பு, காரவகைகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப் பட்டுள்ளது குறித்து நியமன அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-
இனிப்பு பாக்சுகளை விற்பனை செய்யும் வணிகர்கள், அந்த பாக்ஸில் இனிப்பு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம் ஆகியவற்றை தவறா மல் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விபரங் களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைக்க வேண்டும். சமைப்ப தற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், தூய்மையாக பாது காக்கப்பட்ட தண்ணீ ராக இருக்கவேண்டும்.
இனிப்பு காரவகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் நீரின் தரத்தினை அறி யும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொருட் களை சுத்தம் செய்ய வேண் டும். உணவு வியாபாரம் முடிந்தவுடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைத்தல் வேண்டும்.
உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் அணிய வேண்டும். உணவு பொருட் களை கையாளுபவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், தொகுப்பு எண், தயாரிப்பா ளரின் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் ஆகி யவை லேபிளில் தெளி வாகத் தெரியும்படி அச்சி டப்பட வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விபர சீட்டு இடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலா வதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
இனிப்பு மற்றும் கார வகைகளை பேக்கிங் செய்து நுகர்வோருக்கு கொடுக்கும் போது உணவு சேமிப்புக் குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன் களையே பயன்படுத்த வேண்டும்.
பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது.
பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்ட பங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் சில்லறை விற்பனை செய்யும் பொழுது காட்சிப்ப டுத்தப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயா ரிக்கப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும்.
இனிப்பு, காரவகை உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர்கள், ஈக்கள் மொய்க்கும் வண் ணம் இனிப்பு, காரவகைகள் திறந்த நிலையில் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாங்கும் இனிப்பு மற்றும் கார வகை களுக்கு முறையான ரசீது பெற்றி ருத்தல் வேண்டும். அதிகப்படி யாக செயற்கை வண்ணங்கள் கொண்டு இனிப்பு பொருட் கள் தயாரிக்கப் பட்டிருந்தால் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முறையான விபரச்சீட்டு உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் அனை வரும் முறையான பயிற்சி களை பெற்றிருக்க வேண் டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் காரவகை பலகா ரங்களை வாங்கும் போது உணவுப்பாதுகாப்பு துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சிட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறை யின் வாட்ஸ் ஆப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணி லோ அல்லது உணவு பாது காப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண் 04652-276786 என்ற எண்ணிலோ புகார் தெரி விக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவருக்கு ஜானகி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
- ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி வெள்ளமடம் அருகே வேம்பத்தூர் காலனி செல்லப்பன் (வயது 70), விவசாயி. சம்பவத்தன்று இவர் வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெள்ள மடம் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் செல்லப்பன் தூக்கி வீசப் பட்டார். அக்கம்பக்கத்தி னர் அவரை மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பரிதாப மாக இறந்தார். அவருக்கு ஜானகி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- அகில உலக ஓய்வு நாள் பாடசாலை தினம்
- சிறப்பு விருந்தினராக போதகர் ராஜபக்தசிங் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.
மார்த்தாண்டம் :
அகில உலக ஓய்வு நாள் பாடசாலை தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திருச்சபை குமரி பேரராயம் மார்த்தாண்டம் காஞ்சிரபுரம் சேகரம் சார்பில் 7 திருச்சபைகள் பங்கேற்ற ராலி பெருவிழா நடைபெற்றது.
காஞ்சிரபுரம் சேகரத்து போதகர் முத்துசாமி கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கினார். மருதூர் குறிச்சி போதகர் ரெஞ்சித்வேத குமார் முன்னிலை வகித்தார். பவனியை காட்டத்துறை திருச்சபை வளாகத்தில் வைத்து சேகரத்துக்குட்பட்ட போதகர்கள் புறாவை பறக்க விட்டு தொடங்கி வைத்தனர். பவனியானது மருதூர் குறிச்சி திருச்சபையில் முடிவடைந்து சிறப்பு கூடுகையும் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக போதகர் ராஜபக்தசிங் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.
கூட்டத்தை சேக ரத்துக்குட்பட்ட அனைத்து திருச்சபை போதகர்கள், சேகர திருமறை பள்ளி செயலாளர் பிறேம் ஜெயக்குமார், சேகர திருமறைப்பள்ளி கணக்கர் சுனிதா, மருதூர் குறிச்சி திருமறைப்பள்ளி சேகர செயலாளர் லாறன்ஸ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
- பொதுமக்கள் அச்சம்-போக்குவரத்து பாதிப்பு
- சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களியக்காவிளை :
நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பு பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் நேற்று இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சற்று நேரத்தில் 10 அடி ஆழமாக மாற அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திடீரென ஏற்பட்ட பள்ளம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற் குள்ளாக்கியது.
அவர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் நின்றதால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்களும், இளைஞர்களும் சேர்ந்து போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
எனவே களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்தனர்.
சாலை பணி நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில் சாலையின் நடுவில் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் மற்றும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப் போது மழை பெய்தது.
மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். மழை விட்டு விட்டு பெய்து வந்ததையடுத்து தீபாவளி விற்பனையும் மந்தமாக இருந்தது. கடை வீதிகளில் இன்று கூட்டம் குறைவா கவே காணப்பட்டது. களி யக்காவிளை, குழித்துறை, தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டு மானாலும் உபரி நீர் வெளி யேற்றப்படலாம் என்பதால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டு உள்ளது.
திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.17 அடியாக உள்ளது. அணைக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 18.71 அடியாக உள்ளது. அணைக்கு 155 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 234 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில் நேற்று மேலும் 4 வீடுகள் இடிந்துள்ளது.
அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் தலா ஒரு வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிகாரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டை களில் மழை நீர் தேங்கி யுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
அணைகளும், பாசன குளங்களும் நிரம்பி வருவ தையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிர படுத்தியுள்ளனர். ஏற்க னவே மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 6500 ஹெக்டே ரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் நடவு பணிகள் நடந்து வருகிறது.
தற்போது நடவு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.
- கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுேகாள்
- பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி உள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமள வில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர் மற்றும் நோய் வாய்ப்பட்டுள்ள வயோதிகர் கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார் கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் தனது 23.10.2018-ம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன் படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
பட்டாசுகளை வெடிப்ப தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரி கள், தேசிய பசுமை படை கள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவ னங்கள் மூலம் பொது மக்களிைடயே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலா ளர்கள் காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துணை இயக்கு நர், மாநகராட்சி ஆணையர் கள் மற்றும் உயர் அதிகாரி களின் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களி லும் விழிப்புணர்வு ஏற்ப டுத்த தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரிய மூலம் தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக் டர்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள் ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டா சுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்ப தற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சி யாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், பள்ளிகள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங் களுக்கு அருகில் பட்டாசு களை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டமாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யத்தால் கேட்டுக் கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தனது ஆணையில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப் பிட்டுள்ள பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என வும் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத் தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- விசைப்படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் பழுது ஏற்பட்டது.
- பழுதான படகை சரி செய்த பிறகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
என்.ஜி.ஒ.காலணி, நவ.8-
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.
கூடங்குளம் பகுதியில் மீன் பிடிக்க இவர்கள் சென்று கொண்டிருந்தனர். விசைப்படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் படகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் பழுதான விசைப்படகு நடுக்கடலில் தத்தளித்தது. இது குறித்து சக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடலில் ஏற்பட்ட நீரோட்டத்தின் காரணமாக விசைப்படகு, சங்குத்துறை பீச்சில் கரை ஒதுங்கியது. தரையில் உள்ள மணல் தட்டியபடி விசைப்படகு கரை ஒதுங்கி நின்றது. இதையடுத்து படகில் இருந்த மீனவர்கள் படகை விட்டு கீழே இறங்கி னார்கள். விசைப் படகு கரை ஒதுங்கியது குறித்து கடலோர போலீ சாருக்கும், சுசீந்திரம் போலீ சாருக்கும் தெரிய வந்தது.
அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பழுதான விசைப்பலகை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடு பட்டு உள்ளனர். பழுதான படகை சரி செய்த பிறகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.






