தக்கலை, மார்த்தாண்டம் பகுதியில் மது விற்ற வாலிபர்- முதியவர் கைது

அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர்.
தக்கலை, மார்த்தாண்டம் பகுதியில் மது விற்ற வாலிபர்- முதியவர் கைது
Published on

தக்கலை:

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து சோதனை செய்து பார்த்த போது மறைத்து விற்பனைக்கு வைத்திருந்த 28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அவரை போலீஸ் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் காப்புகாடு பகுதியில் சேர்ந்த சிந்துகுமார் (வயது 35).இவர் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நல்லூர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நல்லூர் தேனாம்பாறை பகுதியில் நல்லூர் தேம்பறதல விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தங்கராஜ் (வயது 71) என்பவர் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com