என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைக்கிறார்
    • காலை 10.30 மணிக்கு ராஜாக்கமங்கலம் அளத்தங்கரை சிவசக்தி மகாலில் நடக்கிறது

    நாகர்கோவில் :

    கொட்டாரம் அருகே உள்ள மந்தாரம்புதூரை சேர்ந்த தங்கசுவாமி- சுந்தரி தம்பதியின் மகன் அமுதன். இவர் குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர். இவருக்கும் சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்த துரை-வளர்மதி தம்ப தியரின் மகள் மோனிஷாவுக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு ராஜாக்கமங்கலம் அளத்தங்கரை சிவசக்தி மகாலில் நடக்கிறது. திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வவாகிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் மாலை 6.30 மணிக்கு வழுக்கம்பாறை முத்தாரம்மன் திருமண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மணமகன் குடும்பத்தார் ரமேஷ், சிவகாமி, ரகு, அமிதா, அரவிந்த், சாந்தி மற்றும் குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள், உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    • கலிக்கம் மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் 17-ந் தேதி நடைபெறுகிறது.
    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலய வளாகத்தில் கண்ணில் சொட்டு மருந்து விடும் கலிக்கம் மருத்துவ முகாம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பொற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இவ்வாலயம் சார்பாக கண்ணில் சொட்டு மருந்து விடும். கலிக்கம் மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் 17-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த மாதம் நாளை மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலய வளாகத்தில் கண்ணில் சொட்டு மருந்து விடும் கலிக்கம் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கலிக்கம் என்ற சொட்டு மருந்து கண்ணில் விடுவதால் சொரியாஸிஸ், வெண்படை, கரும்படை, விஷக்கடி, தேமல் மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை. குளுக்கோமா, ரெடினா போன்ற குறைபாடுகள் உடையோருக்கு பயனளித்து வருவதாக மருத்துவ முகாம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வரும் ஸ்ரீஷீரடி சாயியாபா ஆனந்த ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    மத்திய அரசை கண்டித்து கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் கனரா வங்கி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலை வர்கள் குமரேசன், மரிய அருள்தாஸ், ராஜகிளன், ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ராஜேஷ்கு மார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு உரிய முக்கி யத்துவம் வழங்குவதில்லை. 2021-22 இல் ரூ.98,468 கோடி ஒதுக்கிய நிலையில், 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    ஆனால் எதிர்பார்க்கப் பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூ.73 ஆயிரம் கோடியை விட 18 சதவீதம் குறை வாகவும், 2022-23 நிதி யாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.89 ஆயிரம் கோடியை விட 33 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களில் இந்த திட்டம் ரூ.6147 கோடி தற்போது பற்றாக்குறையில் உள்ளது என்று இணையதளத்தில் ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

    இந்த பற்றாக்குறையின் விளைவாக ஆண்டுக்கு சராசரியாக வெறும் 17 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மோடி அரசு அநியாயமான முறையில் குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டு மென்றால் ரூ2.72 லட்சம் கோடி தேவை. ஆனால் தற்போது அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

    கொரோனா காலத்தில் கிராமப்புற பொருளா தாரத்தை இத்திட்டம் தான் காப்பாற்றியது. கோடிக்க ணக்கான மக்களை பட்டினி கொடுமையிலிருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கி யது.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், பால்மணி, மாநில பொதுசெயலாளர் ஆஸ்கர்பிரடி, நிர்வாகிகள் ஆசீர் பிரைட் சிங், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், , கிள்ளியூர் வட்டார பொதுசெயலாளர் எட்வின்ஜோஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், 100 நாள் வேலை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • யார்?அவர் போலீசார் விசாரணை
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    குளச்சல் :

    குளச்சல் இரும்பிலியில் யாமான் குளம் உள்ளது. கடந்த பல நாட்களாக இந்த குளம் பாசிப்படர்ந்து பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக சென்றவர்கள், குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கவிழ்ந்த நிலையில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இறந்து கிடந்த நபர் லுங்கியும், முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து 2 நாட்களுக்கு மேலாகும் என கூறப்படுகிறது. இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர் ஷீலா ஆகியோர் சம்பவம் இடம் சென்று பார்வை யிட்டனர். குளச்சல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரும்பிலி யாமான் குளத்தில் பி ணமாக மிதந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரும்பிலியாமான் குளத்தில் ஆண் பிணம் மிதந்து கிடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 22-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது
    • வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் வெங்கடா ஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் கட்டப்பட்ட பிறகு 2-வது முறையாக பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கு கிறது. இந்த விழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    பவித்ர உற்சவத்தின் போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7அர்ச்சகர் கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி தலை மையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் மற்றும் துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி வெங்க டாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி, பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் :

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால்நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ.சார்பாக ஆற்றூர் சந்திப்பில் அவரது உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங் குமார், மாவட்ட பொது செயலாளர்கள் ஜான் இக்னேசியஸ், ஆற்றூர் குமார், மாவட்ட செயலாளர் பெனட், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    குளச்சல், 

    மீனவர்களின் வள்ளங்களுக்கு அரசு மானிய விலையில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மண்எண்ணை வழங்குகிறது. சிலர் இதனை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி, கடியபட்டணம், முட்டம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். முட்டம் சோதனைச்சாவடி அருகே செல்லும்போது, சந்தேகத்திற்கிடமாக ஒரு மீன் கூண்டு வண்டி வந்தது.

    உடனே போலீசார் அந்த வண்டியை நிறுத்தினர். அப்போது டிரைவர் மற்றும் வண்டியிலிருந்த ஒருவர், வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் மீன் கூண்டு வண்டியை திறந்து பார்க்கும்போது, வண்டிக்குள் 30 கேன்களில் சுமார் 1000 லிட்டர் மானிய மண்எண்ணை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மீன் வண்டியில் வந்த 2 பேரையும் குளச்சல் மரைன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மண்எண்ணை மற்றும் பிடிபட்ட இருவரையும் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை
    • படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் அய்யப்ப பக்த ர்கள் சீசன் காலம் தொடங்க உள்ளது. சீசன் காலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்க ணக்கான அய்யப்ப பக்த ர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடு வார்கள். இதனால் பாதுகாப்பு காரணமாக முக்கடல் சங்க மத்தில் பக்தர்கள் குளிக்கும் பகுதியின் இரு புறமும் பாதுகாப்பு மிதவை கள் அமைத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட வில்லை. இதனால் பக்தர்க ளின் உயிருக்கு ஆபத்து ஏற்ப டும் சூழல் ஏற்பட்டுஉள்ளது. அதேபோல் தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில் முக்டல் சங்கமம் படித்து றையில் படிந்திருக்கும் பாசிகள் அகற்றப் படாத தால் புனித நீராட வரும் வயதான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கருங்கற்களால் கட்டப்பட்ட படித்துறையில் கீழே விழுந்து கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கிழே விழுந்து காயத்துடன் சென்று உள்ள னர்.எனவே உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன் கன்னி யாகுமரி முக்கடல் சங்க மத்தில் பாதுகாப்பு மிதவை கள் அமைப்பதோடு படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சன்ட் பரிசு வழங்கினார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கா ன்கடை அருகே அமை ந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவை முன்னிட்டு மாணவர்க ளுக்கு ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல், தனிப்பா டல் போட்டி, கதை சொல்லு தல், கவிதை படித்தல், நடனம், மாறுவேடப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளி குறித்து வினாடி வினா போட்டியும் நடை பெற்றது.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 91 மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சன்ட் சான்றி தழ்களையும் பதக்கங்க ளையும் வழங்கினார். மாவட்ட மற்றும் மாநில அளவில் கராத்தே, செஸ், நீச்சல் மற்றும் நடனம் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை புரிந்த மாணவர்கள் அஸ்லின், அப்ரிஜா, அமீ ஹாரிஸ், ரேஷ்னா ராணி, ரெக்ஸிகா, தர்ஷிகா மற்றும் அதிதி சந்திசேகர் ஆகியோ ருக்கு கேடயம் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவிக்க ப்பட்டது. பள்ளி செயலாளர் டாக்டர் கிளா ரிசா வின்சென்ட் குழந்தை கள் தின விழாவையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    முடிவில் ஆசிரியர் அஷ்ராபா ஜாஸ்மின் நன்றி கூறினார். நிகழ்வுகளை ஆசிரியர் ஜெகின் பிரிட்டோ தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நிர்வாகி டெல்பின் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • கைதான பட்டதாரி வாலிபர் நாகர்.ஜெயிலில் அடைப்பு
    • ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    நாகர்கோவில் :

    தக்கலை அருகே மண லிக்கரை புதூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி பிரின்ஸ் (வயது 32), பி.ஏ.பி.எட் பட்டதாரி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள கவரிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த கடைக்கு தக்கலை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார். இதையடுத்து ஸ்டான்லி பிரின்சுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்ப ட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

    பின்னர் ஸ்டாலின் பிரின்ஸ், இளம் பெண்ணை ஒரு கோவிலிலுக்கு அழைத்து சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவரும் கருங்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த சில நாட்களில் ஸ்டான்லி பிரின்சின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்டான்லி பிரின்ஸ் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்த ரித்து அவரது செல்போன் எண்ணிற்கு அனுப்பினார். தன்னுடன் குடும்ப நடத்த வரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடு வதாகவும் மிர ட்டினார்.

    இது குறித்து இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டா ன்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவரும் கவரிங் கடையில் நகை ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த நகை தான் அணிந்தி ருக்கும் நகை மாடலை போன்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தனது திருமண போட்டோவை ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் எண்ணிற்கு பேராசி ரியர் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் மூலம் பேராசிரியருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். இதை கண்டித்ததால் ஆத்தி ரம் அடைந்த ஸ்டான்லி பிரின்ஸ், பேராசிரியர் போட்டோவை மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். என்னிடம் பேசாவிட்டால் ஆபாச போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்டான்லி பிரின்ஸ் மீது பேராசிரியரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ஸ்டான்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்டான்லி பிரின்சை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டா ன்லி பிரின்சிடம் போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். ஸ்டான்லிபிரின்ஸ் வேறு ஏதாவது பெண்க ளுக்கு ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதள ங்களில் அனுப்பி உள்ளா ரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொ ண்டனர். இதற்கிடையில் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், புகைப்பட ங்களை மார்பிங் செய்து மிரட்டல் விடுத்தால் உடனடியாக போலீசில் புகார் செய்தால் நடவடி க்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களது புகை ப்பட ங்களை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை வைத்து ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவு ரைப்படி 01-01-2024 ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திரு த்தம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்ட ரால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்கவும், பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும் தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தினங்களில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பான சிறப்பு முகாம்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடைபாதைகளில் அலங்கார தரை கற்கள் பதிக்கப்படுகிறது
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த சீசன் தான் கன்னியாகு மரியில் மெயின் சீசன் ஆகும். இந்த சீசன் காலம் சபரிமலை சீசன் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கன்னியா குமரிக்கு வந்து செல்வா ர்கள்.

    இந்த ஆண்டு சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதா ரம், குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம், கார் பார்க்கிங், சாலை வசதி உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கட ற்கரை பகுதியில் மணல் பரப்பே தெரியாத அளவில் நடைபாதைகளில் பல வண்ண அலங்கார தரை கற்கள் பதிக்கும்பணி தொ டங்கி நடைபெற்று வருகிறது.

    ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.

    ×