என் மலர்
கன்னியாகுமரி
- தமிழகத்தின் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சோ்த்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு
- மக்களின் மனதில் நீங்காத இடத்தை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிருக்கிறது.
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு முதலில் விதித்திட்டது திராவிட முன்னேற்ற கழகம். மக்கள் பணிகளையும், தமிழகத்தின் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சோ்த்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு. அண்ணா காட்டிய வழியை கருணாநிதி பின்பற்றினார். அந்த மரபை தொடர்ச்சியாக செயல்படுத்தி தமிழகத்தில் தலை சிறந்த ஆட்சியை அளிக்கிறார் மு.க.ஸ்டாலின். நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது.
இந்தியாவிலேயே ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரை மக்களின் மனதில் நீங்காத இடத்தை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிருக்கிறது. பா.ஜனதா கட்சி ஆட்சி இதுவரை இல்லாத அளவிற்கு பல வேதனைகளை மக்களுக்கு உருவாக்கி இருக்கின்றது.
உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது. மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பல காரியங்கள் செய்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது நீட் தேர்வு இருக்காது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களால் கருணாநிதியின் நூற்றாண்டு விழா எழுச்சியோடு இன்று கொண்டாடப்படுகிறது.
அண்ணாவின் பெயர் சொல்லாமல் தமிழகத்தில் அரசியல் கிடையாது. இந்த நாட்டில் அண்ணா, பெரியார், கலைஞர் பிறந்திருக்காவிட்டால் நமது கதி என்னவென்று நினைத்து பாருங்கள்.
திராவிட கழகம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற பொதுவுடமை ஆகும். வரலாற்றை பார்த்தால் தெரியும் தி.மு.க.விற்கு பதவி சுகம் இல்லை எனவும் தமிழர்களின் உரிமையை பாதுகாத்து மீட்டுக்கொண்டு வருவதும் ஆகும். காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக மாணவ- மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.பெர்னார்டு, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- கணவன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
- அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரசேரி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது35) கொத்தனார். இவரது மனைவி சுபா லட்சுமி(25). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்பொ ழுது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அய்யப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில் சுபாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து சுபாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைய டுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். ஆனால் சுபாலட்சுமி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுபாலட்சுமி சாவிற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 2பேர் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினா ர்கள். இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் உடலை பெற்று கொள்வதாக கூறினார்கள். பின்னர் சுபாலட்சுமி உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
- 200 மாணவர்கள்,விழாக்குழுவினர் வெள்ளை சீருடையுடன் பங்கேற்பு
- பொற்றையடியில் இருந்து கோட்டார் வரை நடந்தது
நாகர்கோவில் :
ஸ்ரீ நாராயண குருவின் 169-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து பொற்றையடி அருகே மருந்துவாழ்மலை சதய பூஜை சங்க வளாகத்தில் இருந்து தொடர் ஜோதி ஓட்டமானது புறப்பட்டது.
கோட்டார் நாராயண குரு பள்ளியை சேர்ந்த 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் விழா குழுவினர் வெள்ளை சீருடையுடன் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்ற னர். பொற்றையடியில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டமானது ஈத்தங்காடு, சுசீந்திரம், இடலாக்குடி வழியாக கோட்டார் நாராயண குரு மணி மண்டபத்தை வந்தடைந்தது.
ஜோதியை இந்து கல்லூரி ஆட்சிமன்ற குழு துணை தலைவர் கோபாலன் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. விழா குழு தலைவர் நாக ராஜன் தலைமை தாங்கி னார். துணை தலைவர் கோபாலன், செயலாளர் சுப்ரமணியன், துணை செயலாளர் மணி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உறுப்பினர் ராமசாமி வர வேற்று பேசினார். வழக்கறி ஞர் சதீஷ்குமார், துணை தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்து கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் நாகராஜன், மனோன்ம ணியம் சுந்தரனார் பல்க லைக்கழகத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதைத்தொ டர்ந்து நாராயண குரு பிறந்த நாளையொட்டி நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மண்டப பணியாளர்களுக்கு உறுப்பினர்கள் ராமசாமி, முருகன் ஆகியோர் சீருடை களை வழங்கினர். பொருளா ளர் நடேஷ் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை முத்து தொடங்கி வைத்தார்.
மாலை 5.30 மணிக்கு மேஜிக் ஷோ மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாராயண குரு பிறந்த நாளையொட்டி கோட்டா ரில் உள்ள அவரது மணி மண்டபம் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலித் தது. மேலும் கோட்டார் பகுதியில் அவரது பிறந்த நாளை ஒட்டி கொடி தோரணங்களும் கட்டப் பட்டு இருந்தது.
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
- மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கடை வீதியில் நிறுத்தப்படும் பைக்குகள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகளை மர்ம நபர்கள் திருடி செல்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. திருடர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
நாகர்கோவில் புதுகுடியி ருப்பு டிஸ்லரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெயின் ஜெனிஸ் (வயது 42) காங்கிரஸ் பிரமுகர். இவர் தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதையடுத்து மரிய ஜெயின் ஜெனிஸ் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மரிய ஜெயின் ஜெனிஸ் மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிளை திருடி யது நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேறு வழக்கில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- ஒத்துழைப்பு தர வேண்டும் குழித்துறை மின்வாரியம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
களியக்காவிளை :
குழித்துறை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (2-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை
ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக் கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந் தெரு, பழவார், விளவங் கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடை பெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் குழித்துறை மின்வாரியம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.
- பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம்.
திருவட்டார் :
கன்னியாகுமரி மாவட்ட த்தில் வாழை விவசாயம் அதிக அளவில் நடை பெறுகிறது. செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோ ட்டை, பேயன், ரஸ்தாளி, சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழை ரகங்கள் பயிரிடப்படு கின்றன. மட்டி வாழை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆரம்ப த்தில் விளைந்த காட்டு ரக வாழை ஆகும். அது மெல்ல மெல்ல நாட்டுப்ப குதிகளுக்கும் பரவியது. மட்டியின் சிறப்பே அதன் ருசியும், மணமும் தான். வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.
முன்பு பேச்சிப்பாறை, குலசேகரம், அருமனை உள்ளிட்ட மலைப்பகுதி களில் மட்டுமே மட்டி வாழைக்கு லைகள் அதிகமாக விற்பனைக்கு வரும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மட்டி வாழைக்குலைகள் அதிகமாக பயிரிடுகி றார்கள். இதனால் எப்போதும் சந்தையில் கிடைக்கும் பழ ரகங்களில் ஒன்றாக மட்டி விளங்குகிறது.
மாவட்டத்தில் நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டி வாழைப்பழமும், முந்திரிப்பருப்பும் தவறாமல் இடம்பெறும். மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல், பொதுவாக மஞ்சள் நிறத்தில் தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூ டியது.
வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்பு சுவையும். மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட்டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைக ளுக்கு மிகவும் விரும்பி அளி ப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைப்ப ழத்தை நசுக்கி கொடு க்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
மட்டி வாழையை நட்டு 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோவும் அதற்கு மேலும் எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம்பெ ற்றுள்ளது.
தற்போது இந்த மட்டி பழத்துக்கு அரசு புவிசார் குறியீடு கொடுத்திருப்பதை தொடர்ந்து அதன் விலை ரூ.160-க்கு விற்பனை ஆகிறது.
- வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்
- விநாயகர் சதுர்த்தி விழா தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது.
நாகர்கோவில் :
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க ப்படும். குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களிலும், வீடுக ளிலும், கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைக்கப்படும்.
அகஸ்தீஸ்வரம், ராஜா க்கமங்கலம், தோவாளை, மேல்புறம் உள்பட மாவட்ட த்திலுள்ள 9 ஒன்றியங்க ளிலும் 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஒரு அடி முதல் 12 அடி வரை உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பூஜை க்காக வைக்கப்படுகிறது. அன்ன விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர், சிம்ம விநாயகர், ராஜ விநாயகர், கருட விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பூஜை க்கு வைக்கப்படும். தற்போது விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்து மகா சபா சார்பில் தெற்கு சூரங்குடியில் விநா யகர் சிலைகள் தயாரிக்க ப்பட்டு வருகிறது. இதே போல் வில்லுக்குறி பகுதியி லும் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் நிறைவடைந்து வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.
விநாயகர் சிலை பிரதி ஷ்டை செய்வதற்கு போலீ சார் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை அறி வித்துள்ளனர். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்து அமைப்பினர் வேறு சில இடங்களிலும் புதிதாக விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்ய அனுமதி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து ள்ளனர்.
இதுதொடர்பாக போலீ சார், அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே கரைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும். புதிதாக வேறு இடங்களில் கரைக்கக்கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள க்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொட ர்பாக பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் விழாவை உற்சாகமாக வழக்கத்தை விட விமர்சையாக கொண்டாடுவதற்கும் தயாராகி வருகிறார்கள். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது.
- டீ குடிப்பதற்காக குழித்துறையில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்றார்
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில் :
மார்த்தாண்டம் கண்ணன் கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 69), தொழிலாளி. இவர் தினமும் காலை வீட்டிலிருந்து பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க செல்வது வழக்கம்.
இன்று காலையில் ஞானதாஸ் டீ குடிப்பதற்காக குழித்துறையில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது மதுரையில் இருந்து புனலூர் நோக்கி சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் ஞானதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சுமார் 150 தென்னை மரங்களை நட்டு தினமும் பராமரித்து வருகிறார்.
- அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
திருவட்டார் :
குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி, தென்னை விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சுமார் 150 தென்னை மரங்களை நட்டு தினமும் பராமரித்து வருகிறார். இந்த மரத்தில் இருந்து மாதந்தோறும் தேங்காய் வெட்டி விற்பனை செய்து வருகிறார். நேற்று தென்னை மரங்களில் இருந்து தேங்காய் வெட்டி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து வந்தார்.
அதில் ஒரு தென்னன மரத்தில் சுமார் 107 தேங்காய்கள் இருந்தன. அதில் ஒரு கிளையில் 7 தேங்காய்கள் இருந்தன. இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
- சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
- கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சிய கத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. இந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தமாதம் கலைநயம் மிக்க பாரம்பரிய விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெற்றன.
கலை ஆர்வம் மிக்க நமது முன்னோர்கள் செம்பிலும், பித்தளையிலும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் வீட்டு உபயோக பொருள்களை வடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக விளக்குகளில் பல்வேறு வகையான விளக்குகளை பயன்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்குகளை பார்ப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கு என்று கூறினர். ஆனால் உண்மையில் இவை கஜ லட்சுமி விளக்குகள் என்று சொல்லப்படுகின்றன.2 யானைகளுக்கு நடுவில் அம்மன் உள்ளது. கஜம் என்பது சமஸ்கிருதத்தில் யானையை குறிக்கும். 19-ம் நூற்றாண்டில் இந்த மாதிரியான விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள விளக்குகள் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சியின் நோக்கம் என்று கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.
- சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள்
- சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 720 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 31.07.2023 வரை சுழல்நிதி கடனாக 337 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.51 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ் 160 நபர்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 24094 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1372.49 கோடி வங்கி கடன் பெற்றுதரப் பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 52 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.32.30 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 3558 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 2297 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் மழை பெய்தது. சுருளோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 47.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவிலிலும் நேற்று மாலையில் மழை பெய்தது. இதனால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பூதப்பாண்டி, கன்னிமார், மயிலாடி, பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் சற்று தணிந்துள் ளது. பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 17.50 அடியாக உள்ளது. அணைக்கு 470 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 28.30 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சுருளோடு 47.2, பூதப் பாண்டி 10.2, கன்னிமார் 4.2, மயிலாடி 10.4, நாகர்கோவில் 11.4, பெருஞ்சாணி 1.8, புத்தன் அணை 1.6, மாம் பழத்துறையாறு 21.4, ஆரல்வாய்மொழி 13.4.
நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது.






