என் மலர்
கன்னியாகுமரி
- தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
- முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்
நாகர்கோவில் :
குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சங்க தலைவர் சிந்து நல்லபெருமாள், செயலர் சவுதாமினி, உறுப்பினர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முகிலன்குடியிருப்பு ஊர் செயலர் செல்லசிவலிங்கம், பொருளாளர் கிருஷ்ணகோபால், அறங்காவலர்கள் முத்துமாலை, அப்பாத்துரை, சுயம்பு, துணைத்தலைவர் மல்லிகா, வார்டு கவுன்சிலர்கள் பாமா, அமுதா, கோம்பவிளை ஊர்த்தலைவர் நாகமணி, தி.மு.க. நிர்வாகி தாமரை பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் உள்ளது
- போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் வேப்ப மூடு பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் செல்பி பாயிண்ட் அமைக் கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். பூங்காவிற்குள் பாகிஸ்தான் போரில் கடந்த 1971-ம் ஆண்டு ஈடுபட்ட மேக் 21 ரக போர் விமானம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானமானது கடந்த 2014-ம் ஆண்டு விமானப் படையால் வழங்கப்பட்டது.
தற்பொழுது இந்த விமானம் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் விமா னப்படை தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பிஜு, அபினவ் ஆகியோர் கொண்ட குழுவினர் மாநக ராட்சி அலுவல கத்திற்கு வந்தனர். மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிர மணியனுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் வைக்கப் பட்டுள்ள விமானத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:-
போர் விமானத்தை நல்ல நிலையில் மாநகராட்சி பராமரித்து வருகிறது. போர் விமானத்தில் பொதுமக்கள் தங்களது பெயர்களை எழுதி வைத்துள்ளனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற போர் விமானத்தில் பெயர்களை எழுதாமல் இருக்க எச்சரிக்கை பலகை மாநகராட்சி சார்பில் வைக்க வேண்டும். விமானத்தின் உற்பத்தி, அது என்ன என்ன சேவை செய்துள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் எழுதி அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்.
விமானத்தின் இரு புறங்களில் உள்ள மரக்கி ளைகளை அகற்ற வேண்டும். இதனால் விமானத்தின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுவதை தவிர்க்கலாம். மேலும் போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் அந்த விமானத்திற்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்
- வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் புதுமைப்பெண் திட்டமானது தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந்தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் தாங்கள் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வாயிலாகவே விண்ணப் பக்க வேண்டும். கன்னியா குமரி மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிறுவ னங்களில் மேல்படிப்பு, தொழிற்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூர்ந்து கிடக்கும் கால்வாயில் அறநிலையத்துறை பொறியாளர்கள் ஆய்வு
- தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாயையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி,செப்.1-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துஉள்ளது. பழைய மன்னர்ஆட்சி காலத்தில் இந்த தெப்பக் குளம் வெட்டப்பட்டு உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தெப்பக்கு ளம் 25 அடி ஆழம் கொண்டதாகும்.
இந்த தெப்பக்குளத்துக்கு குமரி மாவட்டத்தின் கடைசி விவசாய பாசன கு ளமான குமரி சால் குளத்தின் அருகில் உள்ள பாபநாச தீர்த்த கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. தெப்ப குளத்துக்கு தண்ணீர் வரும் இந்த கால்வாய் நீண்ட காலமாக தூர்வாரப் படாமல் புதர்மண்டி கிடக்கி றது.
இந்த தெப்பக்குளத்தில் தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாகத் திரு விழாஅன்று தெப்ப திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தண்ணீர் இல்லாத வறண்ட தெப்பக் குளத்தில் தான் இந்த தெப்பத்திருவிழா நடந்து வரு கிறது. அம்மனை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து தண்ணீர் இல்லாத குளத்தின் கரையில் வைத்து பூஜை செய்து விட்டுஎடுத்துச் செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.
இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்து வருகின்ற னர். எனவே இந்த தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாயில் தூர்வாரி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்கு ளத்தில் தண்ணீர் நிரப்பி தெப்ப திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவராக பொறுப் பேற்றுள்ள பிரபா ராம கிருஷ்ணன் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாயையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகனதாஸ் தலைமையில் பொறியாளர்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் தீர்த்த கால்வாயை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சுபாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பணியா ளர்கள் அழகு, சதீஷ் உள்பட பலர் சென்று இருந்தனர். தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் தீர்த்த கால்வாயில் முதல் கட்டமாக விவேகானந்த கேந்திராவில் இருந்து தெப்பக்குளம் வரை ராட்சத குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பது குறித்து ஆய்வு செய்யப் பட்டது.
- கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
- கைது செய்யப்பட்ட பிரதீஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ. பேராயத்தால் நிர்வகித்து வரும் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் சிலர் காரில் உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கும், இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் பொறுப்பு சுசீலா வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வடசேரி போலீசார் குழித்துறை சேர்ந்த இந்து சேனா மாவட்ட தலைவர் பிரதீப் குமார் என்ற மணிகண்டன் (40), சிதறாலை சேர்ந்த பிரதீஸ் (36), பாகோடு கழுவன்திட்டையை சேர்ந்த மூர்த்தி (50) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 448, 294 பி, 384, 506 (2) ஐபிசி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பிரதிசை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
- கோழிப்போர்விளையில் 70.5 மில்லி மீட்டர் பதிவு
- சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பாசன குளங்களிலும், அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தக்கலை கோழிபோர்விளை பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 70.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மாம்பழத்துறை யாறு, அடையாமடை, ஆணைக்கிடங்கு, கன்னி மார், களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவி லில் மழை வெளுத்து வாங்கியது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
களியல் 1.2, கன்னிமார் 2.2, குழித்துறை 2.2, குழித்துறை 29.4, நாகர்கோவில் 22.2, தக்கலை 70.3, பாலமோர் 9.2, மாம்பழத்துறையாறு 44.2, கோழிபோர்விளை 70.5, அடையாமடை 57.2, ஆணைகிடங்கு 41.2,
அணை பகுதியில் போதுமான அளவு மழை பெய்யவில்லை.
இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.36 அடியாக இருந்தது. அணைக்கு 478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 28.70 அடியாக உள்ளது. அணைக்கு 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.10 அடியாகவும், மாம்பழத்துறை யாறு நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு மாவட்டத்துக் குட்பட்ட கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் மழை கண்ணா மூச்சி காட்டி வருகிறது. இந்த பகுதிகளில் நேற்றும் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை. இன்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது.
- நான்கு வழிச்சாலையில் புத்தேரி குளத்தின் மேல் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
- ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை தொடங்கு வதற்கான நடவடிக்கை
நாகர்கோவில் :
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்த புரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நில ஆர்ஜித பணிகள் முடிவடைந்து பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது.
கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பல்வேறு இடங்களில் பணிகள் முடிவ டைந்துள்ளது. ஒரு சில இடங்களில் பணிகள் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. குறிப்பாக குளங்களை மணல் நிரப்பி மூடி சாலைகள் அமைப்ப தற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் உள்ள குளங்களை மூடாமல் அதற்கு மேல் மேல்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நான்கு வழிச்சாலையில் புத்தேரி குளத்தின் மேல் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்பொழுது பணியை மீண்டும் தொடங்க நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இருந்து மணலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 9 குளங்களிலிருந்து கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஒரு சில குளங்களிலிருந்து மணல் எடுக்க மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மணல் எடுப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மணல்களை கொண்டு வந்து பணியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நான்கு வழிச்சாலையில் மேலும் 64 இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதில் ஒரு சில இடங்களில் குளத்தின் மேல்மட்டபாலம் அமைக்க வேண்டியது உள்ளது. அந்த பாலம் அமைக்க உள்ள இடங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துவருகிறார்கள்.
ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் குளத்தில் உள்ள மணலை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப பாலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தோட்டியோடு பகுதியில் குதிரைபாஞ்சான் குளத்தில் மேல்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. அந்த குளத்தில் உள்ள மணலின் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதற்கு ஏற்ப குளத்தில் இருபுறமும் மணல்கள் நிரப்பி பில்லர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலப்பணிகள் முடிவடைந்ததும் குளத்தில் போடப்படும் மணல்கள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை பணிகள் முற்றிலுமாக முடிவடையும் பட்சத்தில் கன்னியாகுமரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு போக்குவரத்து நெருக்கடி இன்றி குறைவான நேரத்தில் செல்ல முடியும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
- படகு போக்குவரத்து தாமதம்
- காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்துதொடங்கியது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. பவுர்ணமி நாளான நேற்று கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றும் படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்துதொடங்கியது.
- மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
- ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது
கிள்ளியூர் :
இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க சாகர் பரிக்கிரமா என்ற யாத்திரையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோரப் பகுதிகளின் மீனவர்களுக்கான திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த யாத்திரை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை இன்று குமரி மாவட்டம் தேங்காபட்டணம் வந்தடைந்தது. இந்த குழுவில் மத்திய மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் தேங்காபட்டணத்தில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகள் தொடர்பாகவும், மாயமான மீனவர்களை தேட வசதியாக ஹெலிகாப்டர் தளம், விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ், துறைமுக மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கூறிய தாவது:-
தமிழகத்தில் முதன் முறையாக தேங்கா பட்டணத்தில் மீனவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிபடி மீன்வளத் துறை அமைச்சகம் ஏற்படுத்தினார். மீனவர் மேம்பாட்டுக்காக சுமார் ரூ38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இந்தியா இன்று மீன் ஏற்றுமதியில் 4-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தேங்காபட்டணம் பிரச்சினை சம்மந்தமாக கமிட்டி அமைத்து துறைமுகம் சீரமைக்கப்படும். இங்கு பொது மக்கள் அளித்த அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் கவுசிக், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், தொழில் அதிபர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மற்றும் மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்தூர், வள்ளவிளை, குறம்பனை, வாணியக்குடி, குளச்சல், முட்டம் மீனவ கிராமங்களுக்கும் மத்திய மந்திரிகள் குழு சென்றது. அங்கும் மீனவர்களை சந்தித்து பேசினர்.
தேங்காப்பட்டணம் துறைமுகம் வருவதற்காக மத்திய மந்திரிகள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் புறப்பட்டனர். அவர்களை வரவேற்று துறைமுகம் அழைத்து வருவதற்காக தனியார் படகுகள் கடலுக்குச் சென்றன. தேங்காப்பட்டணம் துறைமுகம் அருகே கடற்படை படகு வந்த போது காற்று அதிகமாக இருந்தது. அலையும் வேகமாக காணப்பட்டது. இதனால் கடற்படை படகில் இருந்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளால் துறைமுகத்திற்கு வரும் தனியார் படகில் ஏற முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் கடற்படை படகில் இருந்தபடி தவிப்புக்குள்ளானார்கள். இந்த சம்பவம் சிறிது நேரம அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க உத்தரவு
- சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு வட்டவிளை, காந்திஜி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம், 42-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் கோவில் தெரு 1,2,3 பகுதிகளில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 52-வது வார்டு புல்லுவிளை-குளத்து விளை சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் போன்றவை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் அனிலா, ஸ்டாலின் பிரகாஷ், ரமேஷ், சுகதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள் ராஜேஷ், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். வீட்டு வரி குறைப்பு, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காண அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகர பகுதியில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்கள் மூலமாக மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் ஓடைகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் ஓடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
- எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
- மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவு ர்ணமி அன்று பவுர்ணமி விழா கொண்டா டப்படு வது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான ஆவணி பவுர்ணமி விழா கோலாக லமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, துளசி, கேந்தி, தாமரை உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்தி ரன் உள்பட திரளான பக்த ர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்த னர். இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்ல க்கில் எழுந்தருள செய்து கோவிலின்உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாள பூஜையும். ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்
மார்த்தாண்டம் :
களியக்காவிளை பேரூராட்சிட்பட்ட 9-வது வார்டு கைதக்குழியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலி ருந்து ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்ப ட்டது. இதனை விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.
களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினு லால்சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்னகுமார், வட்டார தலைவர் ரவி சங்கர், பேரூராட்சி காங்கி ரஸ் கமிட்டி தலைவர் பென்னட், வார்டு உறுப்பினர்கள் ஜெயகலா, விஜயா, சுசீலா, ரிபாய், தாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்ட னர்.






