என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • நாகர்கோவில் கோணத்தில் ரூ.2.50 கோடியில் அறிவுசார்மையம் கட்டப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு எம்.பி.என்.நகர் மற்றும் சி.எம்.சி. நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 42- வது வார்டுக்குட்பட்ட பாரதி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 27-வது வார்டு ஆசாரிமார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 14 மற்றும் 15-வது வார்டு சாஸ்தான் கோவில் தெருவில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதனை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, சுகாதார ஆய்வாளர்கள் ஜான், மாதவன் பிள்ளை, மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் கோணத்தில் ரூ.2.50 கோடியில் அறிவுசார்மையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியை மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அறிவுசர்மையம் மாணவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி மையமாக அமையும். தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மையம் திறக்கப்படும். இதில் நூலகங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராகின்ற வகையில் பூத் கமிட்டி அமைப்பது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு பகுதி 25-வது வார்டு அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர 25-வது வார்டு வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் வடிவீஸ்வரத்தில் நடைபெற்றது. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராகின்ற வகையில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான கையேடுகளை வழங்கி, சீரிய முறையிலும், சிறப்பாக நிர்வாகிகள் செயல்பட ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், நாகர்கோவில் மாநகர பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், ஜெபின்விசு, முருகேஸ்வரன், நாகர்கோவில் மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, கோபாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகி திவ்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட் டம் மார்த்தாண்டம் நல்லூர் பரமாணிக்க விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

    இவரது மனைவி ஜெயா (45), இவர் கடை நடத்தி வருகிறார், மேலும் இளநீர் வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த 22-ந்தேதி வாடிக்கையாளர் ஒருவ ருக்கு அரிவாளால் இளநீர் வெட்டும் போது இடது கை கட்டை விரல் துண்டாகி கீழே விழுந்தது. இதனால் ஜெயா துடிதுடித்து போனார். உடனடியாக உறவினர்கள் ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    துண்டான கைவிரலையும் தனியாக கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஐசக் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஐசக் சுந்தர் சென் தலைமை யிலான டாக்டர் அகமது ரபிக் மீரான் மற்றும் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் அடங் கிய மருத்துவ குழுவினர் அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை மேற் கொண்டனர்.

    அப்போது அவருக்கு துண்டான கை விரலை மீண்டும் சேர்த்து பொருத்தி வைத்து சிகிச்சை அளித்த னர். 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் ஜெயாவின் குடும்பத்தார் டாக்டர் ஐசக் சுந்தர் சென்னு க்கு நன்றி தெரி வித்தனர்.

    இது குறித்து டாக்டர் ஐசக் சுந்தர் சென் கூறியதா வது:-

    பொதுவாக கை மணிக் கட்டு பகுதிகள் துண்டாகி பொருத்தும்போது ரத்த நரம்புகள் பெரிதாக உள்ளதால் இதைவிட எளிதாக இருக்கும் ஆனால் இது கட்டை விரல் என்ப தால் மிகச் சிறிய ரத்த குழாய் களை பொருத்துவது சவா லாக இருந்தது. எனினும் மிகத் துல்லியமாக சிகிச்சை அளித்து கைவிரல் சரி செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    • தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்
    • லிப்ட்டுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில், செப்.1-

    நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் 5 மாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வங்கி, கம்ப்யூட்டர் சென்டர், இன்சூரன்ஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு ஏராளமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வணிக வளாகத்தில் உள்ள லிப்ட்டை பயன்படுத்துவது வழக்கம். இன்று காலையில் வேலைக்கு வந்த பணியாளர்கள் லிப்ட்டை பயன்படுத்தினார்கள். அதன்பிறகு லிப்ட் ஊழியர் ஜான்சன் (வயது 60) என்பவர் மேல் மாடி யிலிருந்து தரைதளத்திற்கு லிப்ட்டில் வந்து கொண்டி ருந்தார். அப்போது முதல் தளத்திற்கும், தரைத்தளத்திற்கும் இடை யில் வந்தபோது லிப்ட் பாதியில் நின்றது. இதையடுத்து அவர் தொடர்ந்து லிப்ட் இயக்க முயன்றார்.

    ஆனால் லிப்ட்டை இயக்க முடியவில்லை. இதையடுத்து லிப்ட் பழுதானது குறித்து ஆப்ரேட்டர் ஜான்சன் மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கி இருந்த ஜான்சனை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். 5-வது மாடிக்கு சென்று லிப்ட்டை தரை தளத்திற்கு கொண்டு வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

    சுமார் 45 நிமிடம் போராடி லிப்ட் தரை தளத்திற்கு கொண்டு வந்த னர். பின்னர் லிப்ட்டின் கம்பிகளை வெட்டி அங்கிருந்த ஜான்சனை மீட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஜான்சன் மீட்கப்பட்டார். ஜான்சன் லிப்ட் ஆப்ரேட்டர் என்பதால் அவர் எந்த ஒரு தயக்கமும் இன்றி இருந்தார். இருப்பினும் மீட்கப்பட்ட ஜான்சனுக்கு முதல் உதவி சிகிச்சைகளை அளித்தனர். ஏற்கனவே இந்த வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு லிப்ட் ஒன்று பழுதாகி அதில் சிக்கிய பொதுமக்கள் மீட்கப்பட்ட னர் என்பது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் நாகர்கோ வில் நகரில் கடந்த சில நாட்களாகவே திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் உள்ள லிப்ட்டுகளில் பொதுமக்கள் சிக்கி மீட்கப்படும் சம்ப வங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. எனவே வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபங்களில் உள்ள லிப்ட்டுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    • பணத்தை வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.
    • வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது

    இரணியல் :

    மதுரை மாவட்டம் முனிச்சாலை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோராராம் (வயது43). ராஜ ஸ்தானை சேர்ந்த இவர் மதுரையில் சில்வர் பாத்தி ரங்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஜெனாராம் (41). ஜெனாராம் அண்ணின் கம்பெனியில் உதவியாக இருந்து வந்தார். கணக்கு வழக்குகள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்கப்படும் பாத்திரங்களுக்கான பணத்தை வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக தக்கலை செல்ல நாகர்கோவிலில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். வில்லு க்குறி தாண்டி காரவிளையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜனாராம் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெனாராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவம் குறித்து அவரது சகோதரர் ஜோராராம் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய மந்திரி எல். முருகன் பேட்டி
    • “சாகர்மாலா பரிக்கிரமா” திட்டம் 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் மாண்டியாவில் தொடங்கப் பட்டது.

    கன்னியாகுமரி :

    மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைமந்திரி புருஷோத்தம்ரூபாலா, இணை மந்திரிஎல்.முருகன் ஆகியோர் "சாகர்மாலா பரிக்கிரமா"என்ற கடல் பயணநிகழ்ச்சியின் மூலம் நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கட ற்கரை கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மீனவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

    இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு மத்திய மந்திரிகள் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    அங்கு வந்தமத்திய மந்திரிகளை நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்ற னர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மத்திய மந்திரி கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர்.

    கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்தவிநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அயப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர், சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர்.

    அங்குஉள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கும் தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர். திருவேங்கட விண்ணவர பெருமாள், 18அடிஉயர ஆஞ்சநே யர்உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி மீன்வளத் துறை இணை மந்திரி முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி கடல் வழியாக சுற்றுப்பயணம் செய்து மீனவர்களை சந்திக்கும் "சாகர்மாலா பரிக்கிரமா" திட்டம் 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் மாண்டியாவில்தொடங்கப் பட்டது. இந்தயாத்திரையில் பிரதமர்மோடிகொண்டு வந்த திட்டங்களை மீனவர்க ளிடம் நேரடியாக எடுத்துச் செல்வதும்.

    மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து உரையாடுவதுதான் இதன் நோக்கம்ஆகும்.மீன்வளத் துறையில் ரூ.38ஆயிரத்து 500 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

    இறால் ஏற்றுமதியில் இந்தியா2-வது இடத்தில் உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் உலகில் 4- வது இடத்தில் உள்ளோம். இந்திய பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி சென்றுகொண்டி ருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 8ஆயிரம்கிலோ மீட்டர் கடற்கரையில் 3ஆயிரம்கிலோ மீட்டர் தூரம் சென்று உள்ளோம்.

    இன்னும் 5ஆயிரம்கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ளோம்.கன்னியாகுமரி மாவட்டத்தில்தேங்காப் பட்டணம், தூத்தூர், குறும்பனை, குளச்சல், முட்டம், வாணியக்குடி என பல பகுதிகளுக்கு சென்று வந்தோம்.

    இதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்துக்கு செல்ல உள்ளோம். சுதந்திரத்துக்கு பிறகு மீனவர்களை செங்கோட்டைக்கு அழைத்து உரையாற்றியது பிரதமர் மோடிதான். ஆழ்கடலில் மீன் பிடிக்க ஏற்கனவே 50 படகுகளுக்குமானியம் கொடுக்கப்பட்டுஉள்ளன.

    பாரம்பரிய மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்புள்ள படகுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ. மூலம் மீன்பிடி தொழிலை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    மீனவர்கள் கடல் வழியாக எந்த மாநிலத்துக்கும் செல்வதற்காக கோரிக்கை வைத்துஉள்ளனர். மாநிலம் விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட உள்ளது.

    இவ்வாறுமத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

    • அத்தப்பூ கோலம் வரைந்து உற்சாகம்
    • பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    தக்கலை :

    குமரி மாவட்டம் தக்கலையில் பத்மநாபபுரம் அரண்மனை இருக்கிறது. குமரி மாவட்ட பகுதியில் இருந்த போதிலும் இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட் டில் இருந்து வருகிறது.

    பத்மநாபபுரம் அரண் மனைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். கேரள சுற்றுலா பயணிகளும் அதிக ளவில் வருவது வழக்கம். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டா டப்படும் போது இங்கும் ஓணம் விழா நடை பெறும்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது, அரண்மனையின் முன்பு தினமும் அத்தப்பூ கோலம் வரையப்படும். மேலும் பெரிய ஊஞ்சல் கட்டப்பட்டு, அரண்மனை முழுவதும் வண்ண விளக்கு கள் அலங்கரிக்கப்பட்டிருக் கும். ஆனால் இந்த ஆண்டு பத்மநாபபுரம் அரண்மனை யில் ஓணம் விழா நடத்தப் படவில்லை.

    நிதி பிரச்சினை காரண மாக ஓணம் விழா கொண் டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டிய ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதற்கு பத்மநாபபுரம் பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரண்மனையை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பத்மநாபபுரம் அரண்மனையில் வழக்கம் போல் ஓணம் விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இதை யடுத்து பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா கொண்டாட கேரள அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் 5 நாட்கள் ஓணம் விழா கொண்டாடப் படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

    இதையடுத்து பத்மநாபபுரம் அரண்மனை முன்பு இன்று காலை அரண்மனை ஊழியர்கள் வண்ண வண்ண பூக்கள் அத்தப்பூ கோலம் வரைந்தனர். மேலும் அங்கு பெரிய ஊஞ்சலும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை பத்மநாபபுரம் பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

    ஓணம் விழா தொடங்கப் பட்டிருப்பதை தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    • கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • அவரது உறவினர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் :

    நாங்குநேரி மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் முத்துக்குமார் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். இந்த நிலையில் வள்ளியூர்-நாங்குநேரி இடையே ரெயில்வே தண்டவாளத்தில் முத்துக்குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.
    • 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.

    திருவட்டார் :

    குலசேகரத்தில் புகழ்பெற்ற புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.

    குழித்துறை மறை மாவட்ட செயலாளர் பேரருட்பணி ரசல்ராஜ், ஆலய பங்குதந்தை ஜோன்ஸ்கிளீட்டஸ், இணை பங்கு தந்தை சகாஜோபின், பங்கு பேரவை துணை தலைவர் ஜான்சன், செயலாளர் மேரி டெலரோஸ், பொருளாளர் மகேஷ், துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.

    இந்த தேர் பவனியானது இன்று மாலையில் கோவிலில் இருந்து தொடங்கி உண்ணியூர், கோணம், ஆணைக்கட்டி வழியாக கான்வென்ட் பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து கோவிலின் பின்புறம் வழியாக அண்ணாநகர், அரசுமூடு, காண்வெண்ட் வந்து கோவில் சன்னதியில் நிறைவடையும். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவிலில் வைத்து ஜாதி, மத பேதமன்றி அனைவருக்கும் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

    • உண்டியலில் இருந்து ரூ.22,99,588 ரொக்கமாகவும், 50 கிராம் தங்கம் மற்றும் 138 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன
    • இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு, இரவு 8 அத்தாழபூஜை

    மணவாளக்குறிச்சி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல் மற்றும் 6 குடங்கள் ஆகியன கடந்த மே மாதம் 10-ந்தேதிக்கு பிறகு நேற்று மீண்டும் திறந்து எண்ணப்பட்டது.

    உண்டியலில் இருந்து ரூ.22,99,588 ரொக்கமாகவும், 50 கிராம் தங்கம் மற்றும் 138 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன. மேலும் சவுதி 150 ரியால், அமெரிக்கா 25 டாலர், ஓமன் 2 ரியால், யு.ஏ.இ. 10 திர்காம் ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

    பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நாளை மறுநாள் (3-ந்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை, 2-ம் நாள் (4-ந்தேதி) காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. 3-ம் நாள் (5-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு, இரவு 8 அத்தாழபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஓணப்பண்டிகை தொடர் விடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையில் கேரளாவில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் கூட்டமும் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது. கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் அங்கு வெகு நேரமாக சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் படடகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்த படத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், மீன் காட்சிசாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளைபீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • மத்திய மந்திரி புருஷோத்தம்ரூபாலா தகவல்
    • பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த பணிகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகி யோர் நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வ ரம் விவேகா னந்தா கல்லூரி யில் நடந்த மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா பேசியதாவது:-

    நமது நாட்டில் முதன் முதலாக சாகர் பரிக்கிரமா திட்டத்தின் மூலம் குஜராத் முதல் கன்னியாகுமரி வரை யில் உள்ள கடலோர மீனவ கிராம மக்களை சந்தித்து வருகிறேன். பல இடங்களில் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு இங்கு வந்துள்ளேன். பொதுவாக இந்தியா என்று கூறினால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள். இப்படி பாரத தாயின் கால் பாதம் எனப்படும் கன்னியாகுமரி யில் நான் பேசுவதை பெருமைப்படுகிறேன். நம் நாட்டில் 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிக நீளத்தில் கடற்கரை அமைந்துள்ளது.

    மீனவர்களின் வாழ்க்கை கடலை நம்பித்தான் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைச்சரகத்தை பிரதமர் ஏற்படுத்தி உள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப் பட்டுள்ளது. அதில் 200 பேர் கடன் பெற்று பயன டைந்துள்ளனர். கடன் அட்டை மூலம் பெரும்பா லும் பெண்கள் பலன் பெற் றுள்ளனர். பிரதமர் மோடி மீனவ மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது ரூ.3ஆயிரத்து 680 கோடி தான். தற்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டப்பணி களுக்கு மீன்வளத்துறையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை மூலம் நான் தமிழக மக்களின் கருத்துக் களை கேட்ட பிறகு ஒரு விஷயம் தெரியவந்தது.

    கடலில் 1000 கிலோ மீட்டர் தாண்டி சென்று மீன வர்கள் மீன் பிடித்துவருவது எனக்கு ஆச்சர்யமாக உள் ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மீன்வ ளத்துறை அதிகாரிகள், மத்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகள், மீனவர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    ×