என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்ப ட்டுள்ளஅன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தி வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று மாலை திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 611 வசூல் ஆகி இருந்தது.

    இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டி யல்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயரம் உள்ள மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வ தவர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி விழா நடைபெற்றது. இதை யொட்டி மாலை 4.30 மணிக்கு மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் பர்வதவர்த்தினி அம்மனு க்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சா மிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடி யார்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண் பொங்கல், எள்ளு, உளுந்து, பஞ்சா மிர்தம், சாம்பார்சாதம் உள்ளிட்ட 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • குளச்சல் நகர அ.தி.மு.க. முடிவு
    • மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நகர அலுவலகத்தில் நட ந்தது. கவுன்சிலர் ஆறுமு கராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செய லாளர் ரவீந்திரவர்ஷன், ஆனக்குழி சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சிட்டி சாகுல்அமீது வரவேற்று பேசினார். துணை செய லாளர் செர்பா தீர்மான ங்கள் வாசித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர்கள் பஷீர்கோயா, கில்லேரியன் மற்றும் தர்மராஜ், ஜெகன், வினோத், அன்பில் அகமது, பூக்கடை றாபின், ஜில்லட், முகம்மது, சாகுல் அமீது, ஜோக்கின், லூயிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் குளச்சல் நகரில் மாசுப்பட்டு கிடக்கும் ஏ.வி.எம். சானல், வெள்ளி யாகுளம் ஆகிய 2 நீர்நிலை களையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வலியுறுத்துவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டும் வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர தேர்தல் பணி செய்வது, குளச்சல் நகராட்சியில் உள்ள 25 பூத்களிலும் மகளிர், இளை ஞர்கள் உள்ளிட்டோர்களை இணைத்து தேர்தல் பணிக்குழு அமைப்பது, கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடந்த மாநாட்டில் குளச்சலில் இருந்து கலந்துகொண்ட தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது. முடிவில் முன்னாள் துணை செயலாளர் தேவி சக்தி நன்றி கூறினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
    • ஒரே நாடு ஒரே தேர்தல்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோண த்தில் தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய புதிய கட்டிடம் ரூ.2.40 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி குமரி மாவட்ட த்தில் படித்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் வகையில் திறன் பயிற்சி மையம் அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் தொழில்பயிற்சி மையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளில் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பாரதிய ஜனதா சொல்லி வருகிறது. இதனை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. பாரதிய ஜனதா எதை சொல்கிறதோ அதை ஆதரிப்பது தான் அ.தி.மு.க.வின் வழக்கம். அ.தி.மு.க.வை பற்றி சொல்வ தற்கு எதுவும் இல்லை. அவர்களுக்கு ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை எதிர்த்தார்கள். ஆனால் இப்போது பாரதிய ஜனதா சொல்வதை கேட்டு ஆதரிக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா வழி நடப்ப வர்கள் அ.தி.மு.க.வினர். அதனால் அ.தி.மு.க.வை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாரதிய ஜனதா நேர்மையான கட்சி, நேர்மையான ஆட்சி என்று கூறி வந்தது. தற்போது மத்திய அரசின் சி.ஏ.ஜி. அறிக்கையில் ரூ.7 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரதிய ஜனதா கூறுகிறது.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி விவகாரத்தில் சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து தான் பாரதிய ஜனதாவினர் பெரிதாக பிரசாரம் செய்தார்கள். இப்போது அது மிகப் பெரிய ஊழல் என்று கூறி வந்தனர். அவர்களுக்கென்று வந்தவுடன் அதில் ஒன்று மில்லை என்று கூறுகிறா ர்கள். ஊழலற்ற நேர்மை யான ஆட்சி என்று கூறிவரும் பாரதிய ஜனதாவி னர் செய்துள்ள மிகப்பெரிய ஊழல் இதுவாகும். தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த ஊழல் குறித்து பதில் கூற வேண்டும்.

    பால் கொள்முதல் முறையாக நடைபெற்று வருகிறது. பால் கொள்மு தலை அதிகரிக்க பால்வள த்துறை தேவை யான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • மன அழுத்தம் காரணமாக ராதாகிருஷ்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 53), தொழிலாளி. இவரது மனைவி திருவனந்தபுரத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். மகன் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இதனால் ராதாகிரு ஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டிற்குள் சென்ற போலீசார், படுக்கை அறையில் பார்த்தபோது கட்டிலில் ராதாகிருஷ்ணன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு மது பாட்டில்களும் கிடந்தன.ராதாகிருஷ்ணன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாக ராதாகிருஷ்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போ லீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார்
    • சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதைக்காக நெய்யூர்-பரம்பை மேம்பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறி வருகின்ற னர். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் மணவாளக்கு றிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழகியமண்டபம் செல்ல திங்கள்நகரில் இருந்து பைக்கில் சென்றார். அவர் தடுப்பு வேலிகளை கவனிக்காமல் நெய்யூரில் இருந்து அழகியமண்டபம் சாலையில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாரா தவிதமாக மேம்பால த்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோல் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகையை கவனிக்க தவறி விழுந்து படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரசல் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கி ருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை :

    குமரி மாவட்டம் குல சேகரம் கரப்பால் நகரை சேர்ந்தவர் ரசல் (வயது 61). இவருக்கு சொந்தமான தோட்டம் மார்த்தாண்டம் கோட்டை விளையில் உள்ளது.

    இவரது மனைவி மதுரையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ரசல் குடும்பத்தினருடன் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

    எனவே ரசலின் ேதாட்டத்தை அவரது தம்பி சைலஸ் (41) பராமரித்து வருகிறார். இந்த தோட்டத் தில் ஏராளமான வாழை மரங்கள் உள்ளன. சம்ப வத்தன்று இந்த வாழைகளை யாரோ வெட்டி சாய்த்துள்ளனர். மேலும் ரசல் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கி ருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன் விரோதம் காரணமாக பம்மம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மகேஷ் குமார் (49) தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் சைலஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • பொது மக்களுக்கு பால் விற்பனை செய்கின்ற காரணத்தினால் தான் இச்சங்கங்கள் தொடர்ந்து செயல்பட்டுகிறது.

    நாகர்கோவில், :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    குமரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை விஜிலென்ஸ் அதிகாரிகளை கொண்டும், துறை அதிகாரி களை கொண்டும் உள்ளூர் பொதுமக்களுக்கு பாலினை விற்பனை செய்யக்கூடாது எனவும் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்கள் மூலம் பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்ற பாலும் கிடைக்காமல் போகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்கின்ற பாலின் விலையை விட ஆவினுக்கு கொடுக்கப்ப டுகின்ற பாலின் விலை குறைவாக கிடைப்பதால் தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைகின்ற சூழ்நிலை உள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் நலிவடைந்த பொது மக்களுக்கு பால் விற்பனை செய்து வருகின்ற காரணத்தினால் தான் இச்சங்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    ஆனால் உள்ளூர் பொது மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது எனக் கூறுவதால், நஷ்டத்திற்கு பாலினை ஆவினுக்கு விற்பனை செய்ய நிர்ப்பந்திப்பதாலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

    ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த சுமார் 121 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து கலைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ரீத்தாபுரம், சுருளோடு, பேச்சிப்பாறை ஆகிய ஊர்களில் 3 புதிய பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்கள் ஆரம்பிக்கப் பட்ட நிலையில் இச்சங்கங்க ளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால், பல மாதங்கள் ஆகியும் இச்சங்கங்களின் மூலம் பால் உற்பத்தி செய்யப்படவில்லை.

    கடந்த ஆட்சியில் தமிழ் நாட்டில் பால் உற்பத்தி இந்தியா விலேயே 2-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு 4-வது இடத்திற்கு தள்ளப்படுகிறது. கர்நாடகா 2-வது இடத்தையும், உத்திரபிரதேசம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

    எனவே குமரி மாவட்ட ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், இச்சங்கங்க ளில் உள்ள உறுப்பினர்கள் வைத்துள்ள கறவை மாடுகளுக்கு தேவையான கலப்பு தீவனங்கள் முறையாக கிடைப்பதற்கும், மருத்துவ வசதிகள் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் நலிந்த நிலையில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை மிரட்டுகின்ற போக்கினை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும். சங்கங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பேச்சிப்பாறை அணை 18.29 அடி ஆனது
    • பாலமோரில் 77.6 மில்லி மீட்டர் மழை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தாலும் இரவில் மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவில், கொட்டா ரம், மயிலாடி, தக்கலை, குளச்சல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி ருந்தனர். அவர்கள் அருவி யில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிக பட்சமாக 77.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 6½ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.29 அடியாக உள்ளது. அணைக்கு 1369 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 589 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35.05 அடியாக உள்ளது. அணைக்கு 1563 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி 14.4, புத்தன்அணை 12.8, சிற்றார் 1 -11, சிற்றாறு 2-6, பூதப்பாண்டி 9.2, களியல் 5.3, குழித்துறை 6.4, நாகர்கோவில் 2.4, சுருளோடு 2.4, தக்கலை 7.3, குளச்சல் 16.4, இரணியல் 4.2, பாலமோர் 77.6, மாம்பழத்துறையாறு 14.2, திற்பரப்பு 4.8, அடையா மடை 7, முள்ளங்கினாவிளை 7.2, முக்கடல் 5.2.

    மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கன்னிபூ நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் இருந்தது. தற்போது பெய்துவரும் இந்த மழை விவசாயத்திற்கு கை கொடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஊழியர்கள் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு
    • குமரியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

    முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது. இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கி உள்ள னர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக் கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரி யவந்துள்ளது. இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    70,000 விண்ணப்பங்கள் ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பெரும்பாலான விண்ணப் பங்களில் உள்ள குளறுபடி கள் சரி செய்யப்பட்டது. 10 சதவீத விண்ணப்ப படி வங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்ப படி வங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த விண்ணப்ப படிவங்களையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கான ஆய்வு பணி தற்போது தொடங்கப் பட்டுள்ளது. வீடு வீடாக சென்று அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு பணியை தொடங்கி உள்ள னர். ஒவ்வொரு ரேஷன் கடைகள் உட்பட்ட பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கள ஆய்வு பணியை முடிப்பதற்கு இன்னும் தாமதமாகலாம் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கள ஆய்வுக்கு வரும் ஊழியர்கள் விண்ணப்ப தாரர்களிடம் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் விண்ணப்பித்த 50 சதவீத விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள விண்ணப் பங்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த விண்ணப்ப படிவங்களை சென்னை யில் உள்ள மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கள ஆய்வு மேற்கொண்டு வரும் விண்ணப்ப படிவங்களை அடுத்த கட்டமாக அனுப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்னனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை யின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் ஸ்ரீதர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் எனப்படும் "புட் சேப்டி ஆன் வீல்ஸ்" வாகனம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஆல். சி.எஸ்.எஸ். திட்டத்தில் வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வுக் கூடங்களின் கட்டுப்பாட்டில் தலா ஒரு வாகனம் இயங்கி வருகிறது.

    மதுரையினை மையமாக கொண்டு இயங்கிவரும் இவ்வாகனமானது பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பகுப்பாய்வு குறித்தான விழிப்பு ணர்வினை ஏற்படுத்தி வருகிறது. இவ்வா கனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்க ளிடையே நல்ல சுகாதாரமான சத்தான உணவை உட்கொள்ள ஒரு தூண்டு கோலாக அமைகிறது.

    ஏற்கனவே இவ்வாகன மானது மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு தற்போது கன்னியாகுமரி வந்துள்ளது. இவ்வாக னமானது கன்னியாகுமரி மற்றும் தென்காசி முதலான தென்மாவட்டங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளது.

    பொதுமக்கள், வியாபா ரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் பரிசோ தனைக்காக பெறப்படும் உணவு பொருட்கள் இவ்வாய் வகத்தில் மேற்கொள்ளப் படும், எளிய பரிசோதனை மூலம் அப்பொருளின் தரம் கண்டுபிடிக்கப்படுகிறது. தரமற்ற பொருளாக இருப் பின் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் இவ்வா கனத்துடன் இணையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களில் லேபிளில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பிற விபரங்களினை பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கு வார்கள். உணவில் கலப்படம் குறித்து கண்டுபிடிக்கும் எளிய பரிசோதனைகளை இவ்வாய்வகத்திலிருந்து வரும் பகுப்பாய்வாளர். மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்து காட்டுவர். விழிப்புணர்வு காணொளிகள் ஒளி பரப்பாகும். வியாபாரிகளுக்கு தேவையான விளக்கங்கள் வழங்கப்படும். பாதுகாப்பான உணவு, "ஜங்க் புட்" தவிர்த்தல், இயற்கை உணவினை பயன்படுத்துதல் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் வாகனம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அனுமதியினை மாவட்ட நியமன அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    ஆகவே, இவ்வாய்ப்பினை பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, துறை அலுவலர்கள், தனியார் உணவக உரிமை யாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.
    • விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற் கான விண்ணப்ப படி வங்கள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டு அந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப் பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளார்கள். இந்த விண்ணப்ப படிவங்களில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை கள ஆய்வு செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    ரேஷன் கடை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், பொதுப்பணித் துறை, சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் கலைஞர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் ஆய்வு தொடர்பாக நேரில் ஆய்வு மேற் கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வயல் தெரு, இருளப்பபுரம் வட்டவிளை, வேதநகர், தாமஸ் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    ×