search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்புத்துறை"

    • புதிதாக தளவாடங்கள் வாங்க 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதியை பாதுகாப்புத்துறை ஒதுக்கியது.
    • இதில் ராடார், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படைக்கு மேலும் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசு மற்றும் விமானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திற்கு ரபேல்-எம் ரக போர் விமானங்கள் தேவைப்படுகிறது. இதற்காக 26 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் மத்திய அமைச்சகத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் புதிதாக தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரூ.70 ஆயிரம் கோடி செலவில் 7 போர்க்கப்பல்கள் கட்டுவதற்காக ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் டன் எடை கொண்டவை ஆகும். மேலும் தாக்கும் திறனும் அதிகமாக இருக்கும்.

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது பென்டகனில் ஜெனரல் அணுமின் உற்பத்தியாளர் அவருக்கு பிரிடேட்டர் ட்ரோன்களை பற்றி விளக்கக் காட்சியை வழங்கினார். இதன்பின் இந்த பிரிடேட்டர் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கையெழுத்தாகிவிடும் என தெரிகிறது.

    அதேபோல் ரபேல்-எம் போர் விமானங்களைக் வாங்குவதால் வரும் மூன்று மாதங்களில் இந்திய ஆயுதப் படைகளின் திறன், குறிப்பாக இந்தியக் கடற்படைக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். மேலும் 3 கூடுதல் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.

    இந்தக் கூட்டத்தின் இறுதியில் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை யின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் ஸ்ரீதர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் எனப்படும் "புட் சேப்டி ஆன் வீல்ஸ்" வாகனம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஆல். சி.எஸ்.எஸ். திட்டத்தில் வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வுக் கூடங்களின் கட்டுப்பாட்டில் தலா ஒரு வாகனம் இயங்கி வருகிறது.

    மதுரையினை மையமாக கொண்டு இயங்கிவரும் இவ்வாகனமானது பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பகுப்பாய்வு குறித்தான விழிப்பு ணர்வினை ஏற்படுத்தி வருகிறது. இவ்வா கனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்க ளிடையே நல்ல சுகாதாரமான சத்தான உணவை உட்கொள்ள ஒரு தூண்டு கோலாக அமைகிறது.

    ஏற்கனவே இவ்வாகன மானது மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு தற்போது கன்னியாகுமரி வந்துள்ளது. இவ்வாக னமானது கன்னியாகுமரி மற்றும் தென்காசி முதலான தென்மாவட்டங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளது.

    பொதுமக்கள், வியாபா ரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் பரிசோ தனைக்காக பெறப்படும் உணவு பொருட்கள் இவ்வாய் வகத்தில் மேற்கொள்ளப் படும், எளிய பரிசோதனை மூலம் அப்பொருளின் தரம் கண்டுபிடிக்கப்படுகிறது. தரமற்ற பொருளாக இருப் பின் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் இவ்வா கனத்துடன் இணையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களில் லேபிளில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பிற விபரங்களினை பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கு வார்கள். உணவில் கலப்படம் குறித்து கண்டுபிடிக்கும் எளிய பரிசோதனைகளை இவ்வாய்வகத்திலிருந்து வரும் பகுப்பாய்வாளர். மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்து காட்டுவர். விழிப்புணர்வு காணொளிகள் ஒளி பரப்பாகும். வியாபாரிகளுக்கு தேவையான விளக்கங்கள் வழங்கப்படும். பாதுகாப்பான உணவு, "ஜங்க் புட்" தவிர்த்தல், இயற்கை உணவினை பயன்படுத்துதல் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் வாகனம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அனுமதியினை மாவட்ட நியமன அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    ஆகவே, இவ்வாய்ப்பினை பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, துறை அலுவலர்கள், தனியார் உணவக உரிமை யாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×