search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6½ அடி உயர்ந்தது
    X

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6½ அடி உயர்ந்தது

    • பேச்சிப்பாறை அணை 18.29 அடி ஆனது
    • பாலமோரில் 77.6 மில்லி மீட்டர் மழை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தாலும் இரவில் மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவில், கொட்டா ரம், மயிலாடி, தக்கலை, குளச்சல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி ருந்தனர். அவர்கள் அருவி யில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிக பட்சமாக 77.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 6½ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.29 அடியாக உள்ளது. அணைக்கு 1369 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 589 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35.05 அடியாக உள்ளது. அணைக்கு 1563 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி 14.4, புத்தன்அணை 12.8, சிற்றார் 1 -11, சிற்றாறு 2-6, பூதப்பாண்டி 9.2, களியல் 5.3, குழித்துறை 6.4, நாகர்கோவில் 2.4, சுருளோடு 2.4, தக்கலை 7.3, குளச்சல் 16.4, இரணியல் 4.2, பாலமோர் 77.6, மாம்பழத்துறையாறு 14.2, திற்பரப்பு 4.8, அடையா மடை 7, முள்ளங்கினாவிளை 7.2, முக்கடல் 5.2.

    மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கன்னிபூ நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் இருந்தது. தற்போது பெய்துவரும் இந்த மழை விவசாயத்திற்கு கை கொடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×