என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • விடுமுறை நாளான இன்று கடற்கரை களை கட்டியது
    • அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும், பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து களை கட்டி காணப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    • அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது.

    இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. அடையாமடை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல் பகுதிகளிலும் மழை பெய்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் சற்று வெப்பம் தணிந்து காணப்ப டுகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியல் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி ருந்தனர். அவர்கள் அருவி யில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 656 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் ணஇருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.20 அடியாக உள்ளது. அணைக்கு 547 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 4, நாகர்கோ வில் 2.4, புத்தன்அணை 4.8, சுருளோடு 5.2, சிற்றார் 2- 2, தக்கலை 4.4, குளச்சல் 4, இரணியல் 10.2, பாலமோர் 17.4, மாம்பழத்துறையாறு 7.6, திற்பரப்பு 5.3, கோழிப்போர்விளை 13.5, அடையாமடை 19.1, முக்கடல் 4.2.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவசாயிகளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பயிர் செய்யப்பட்டுள்ள கன்னிபூ கடைமடை பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள நிலையில் மழை பெய்துள்ளது விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் நெற்பயிரகளை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் அவரகள் கவலை அடைந்துள்ளனர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
    • வேப்பமூடு வழியாக கொள்ளையன் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி. இவர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவரது அலுவலகம் நாகர்கோவில் பொதுப்பணித்துறை சாலையில் உள்ள முத்தமிழ் தெருவில் உள்ளது. தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வக்கீல் செண்பகவல்லி கோர்ட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று செண்பக வல்லி தனது இரு சக்கர வாகனத்தில் அலுவல கத்திற்கு சென்றார். பின்னர் வாகனத்தை அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு மற்றொரு பெண் வக்கீலின் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றார். அவர் மதியம் அலுவலகத்திற்கு திரும்பி வந்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

    இதையடுத்து பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையன் ஒருவன் வக்கீல் செண்பகவல்லியின் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்தமிழ் தெருவிலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேப்பமூடு வழியாக கொள்ளையன் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து கொள்ளையன் உருவத்தை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வடசேரி பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்
    • இன்று ஆவணி 3-வது ஞாயிறு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாக தோஷங் கள் நீங்கும், திருமணங்கள் கைக்கூடும் என்பது ஐதீகம்.

    இதனால் ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆவணி ஞாயிற்றுழமைகளில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி செல்கிறார்கள்.

    ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமை இன்று காலை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டது. இதையடுத்து நாகராஜருக்கு சிறப்பு தீபா ராதனையும், அபிஷே கங்களும் நடந்தது. கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. நாகராஜரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

    இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. பக்தர்க ளுக்கு நாகராஜா கோவில் கலையரங்கத்தில் அன்னதானம் வழங்கப் பட்டது. கோவிலில் கூட்டம் அலைமோதியதையடுத்து கோவில் நடை சாத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி யதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் நாகராஜா திடலில் தங்களது இரு சக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் விட்டு விட்டு கோவிலுக்கு நடந்தே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாகராஜா கோவில் திடலையொட்டி உள்ள சாலை ஓரங்களில் திரு விழாக்கடைகள் அமைக்கப் பட்டு இருந்தது. கோவிலில் கூட்டம் அலைமோதியதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 500 பேர் பங்கேற்ற முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.
    • சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை கர்னல் சி.பி. உன்னி கிருஷ் ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் 10 நாட்கள் என்.சி.சி. முகாம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண் டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, முதல்வர் ராஜேஷ் ஆகியோர் முன்னி லை வகித்தனர். நாகர்கோ வில் 11-வது பட்டாலியன் சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு கர்னல் சி.பி.உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 500 பேர் பங்கேற்ற முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சிறு தானியம் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக ரோகிணி கல்லூரி பேராசிரியை ராதிகா சிறுதானிய பயன் பாடு பற்றி பேசினார். கடல் பாதுகாப்பு மற்றும் கடல் சார் தட்பவெப்ப நிலை குறித்து டேராடூன், இந்திய ராணுவ கல்லூரியில் ஜான்சன் உரை ஆற்றினார். இதற்கான பாதுகாப்பு உறுதிமொழியை ரோகிணி கல்லூரி முதல்வர் ராஜேஷ் என்.சி.சி. மாணவர் களிடையே வாசித்து ஏற்றுக் கொண்டார்கள். சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை கர்னல் சி.பி. உன்னி கிருஷ் ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் முகாம் அட் ஜூட்டன் கேப்டன் அஜிந்தர நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராணுவ பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி என்.சி.சி. அதிகாரி கள் மேற்கொண்டனர். பேரணியானது ரோகிணி கல்லூரியில் தொடங்கி வட்டக்கோட்டையில் முடிவ டைந்தது.

    • சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த ராஜ், மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு திடுக்கிட்டார்
    • பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ராஜ். மீனவரான இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவருடன் நண்பர் போல் பேசி பழகி உள்ளார்.

    இதற்கிடையில் ராஜ் வீட்டுக்குள் சென்றதை பயன்படுத்தி அந்த மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த ராஜ், மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு திடுக்கிட்டார்.

    உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மோட்டார் சைக்கிளையும், மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரையும் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் நடந்தது

    திருவனந்தபுரம் :

    திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை செய்து வருகிறது. இங்கு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு 10-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கிம்ஸ்ஹெல்த்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் சஹதுல்லா விழா வை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சுகாதார துறையின் மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றாக உடலுறுப்பு தானம் கருதப்பட வேண்டும். சமுதாயத்திற்கு ஒவ்வொரு தனிநபரும் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் பொறுப்புறுதியின் வழியாக ஒவ்வொரு உறுப்புதான செயல்பாடும் நிகழ்கிறது. உறுப்புதானம் செய்வதற்கு தங்களது விருப்பத்தை தாராள மனதுடன் வெளிப்படுத்த அதிக எண்ணிக்கை யிலான நபர்கள் முன்வர வேண்டும்.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் மிக உயர்ந்த அளவிலான வெற்றி விகி தத்தை கிம்ஸ்ஹெல்த் மருத் துவமனை கொண்டிருக்கி றது. கிம்ஸ்ஹெல்த், முதன் முதலில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையினை 2013 ஜுலை 23-ந்தேதி அன்று வெற்றிகரமாக மேற் கொண்டது. அதைத் தொடர்ந்து, இதுவரை 120-க்கும் அதிகமான கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செயல்முறைகளை இது வெற்றிகரமாக செய்தி ருக்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டை யும் ஒருங்கிணைந்த செயல் பாட்டை மேற்கொண்டது.

    பிரிக்கப்பட்ட கல்லீரலின் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை, டயாலிசிஸ் உடன் சேர்த்து கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் மிகக்குறைவான உடல் எடை கொண்ட குழந்தைக்கு உறுப்பு மாற்று சிகிச்சை ஆகிய சாதனை நிகழ்வுகளை கேரளா மாநிலத்தில் வெற்றிகரமாக நிகழ்த்திய முதல் மருத்துவமனை என்ற பெருமையை கிம்ஸ்ஹெல்த் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவானது உறுப்புதானம் அளித்த வர்கள் மற்றும் உறுப்புதானம் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருங்கிணைந்த மனதை நெகிழச்செய்யும் விதமாக அமைந்தது. உறுப்புதானம் பெற்ற 160 பேர் ஆர்வத் தோடு கலந்துகொண்டனர்.

    6 பேருக்கு தனது உடலு றுப்புகளை தானமாக வழங்கிய 16 வயதான சாரங் மற்றும் இரு கண்களையும், சிறுநீரகங்களையும் தானமாக வழங்கிய சரத் கிருஷ்ணன் ஆகியோரது குடும்பங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. அவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்ட னர்.

    கிம்ஸ் ஹெல்த்தில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மேறெ் கொள்ளப்பட்ட 10 வயதான ஆன் மேரி என்ற சிறுமி, அவளது கைவினை திறன் களை வெளிப்படுத்தும் தயாரிப்புகளின் கண்காட்சி யை நடத்தினாள். மேலும் டாக்டர் சஹதுல்லாவுக்கு இதய வடிவில் தாளினால் உருவாக்கப்பட்ட அழகான மாலையை அச்சிறுமி வழங்கினாள்.

    நிகழ்ச்சியில் கிம்ஸ் ஹெல்த்தின் துணைத்தலை வர் டாக்டர் விஜயராகவன், கேரளா கல்லீரல் பவுண்டே ஷனின் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லீரல், கணையம் மற்றும் ஈரல் பித்தக்கால்வாய் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலை மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சபீர்அலி வரவேற்று பேசினார்.

    மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பா ளரும், உறுப்புமாற்று சிகிச்சையின் ஒருங்கிணைப் பாளருமான டாக்டர் பிரவீன் முரளிதரன், நன்றி கூறினார்.

    இதில் இரையக்குடலியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர் மது சசிதரன் மற்றும் டாக்டர் அஜித் கே. நாயர், கல்லீரல், கணையம் மற்றும் பித்தக் கால்வாய் துறையின் நிபு ணர்கள் டாக்டர்கள் வர்கீஸ் ஹெல்டோ மற்றும் ஸ்ரீஜித், மயக்க மருந்தியல் துறையின் நிபுணர் டாக்டர் ஹஷிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்ச மின் தெரு ரேஷன் கடை பின்புறம் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து பூனையின் சத்தம் கேட்டது.

    அந்த பகுதி மக்கள் கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு மூலமாக கிணற்றின் உள்ளே இறங்கி பூனையை மீட்க நட வடிக்கையை மேற்கொண்ட னர். சுமார் 1 மணி நேரத் திற்கு பிறகு பூனை பத்திரமாக மீட்கப்பட்டது.

    இதேபோல் தேரேக் கால்புதூர், சண்முகா நகர் பகுதியில் உள்ள கால்வா யில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு சேற்றில் சிக்கியது. சேற்றில் சிக்கிய மாடு வெளியே வர முடியாமல் தவித்தது.

    மாட்டை மீட்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதை யடுத்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • தக்காளி ரூ.20-க்கு விற்பனை
    • பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற் பனை செய்யப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நட வடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாக வும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் தக்காளியின் உற்பத்தி குறைவாக இருந்ததால் விலை அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை படிப் படியாக குறைய தொடங்கி உள்ளது.

    குமரி மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப் பட்டது. உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அடியோடு நின்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்ப னைக்காக கொண்டுவரப் பட்டது.

    தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்ட பகுதி களில் இருந்தும் தக்காளி விற்பனைக்குவர தொடங்கி யது. அதிகளவு தக்காளி விற்பனைக்கு வந்ததையடுத்து விலை குறைய தொடங்கியது.

    ஓசூர், பெங்களூர் பகுதி களில் இருந்தும் அதிகளவு தக்காளி தற்பொழுது விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.40 ஆக குறைந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்கப்பட்டது. 25 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.400-க்கு விற்பனையானது.

    இதேபோல் இஞ்சியின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.150 ஆக குறைந்துள்ளது. இதேபோல் கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், மிளகாய் விலையும் குறைந் துள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.20, முட்டை கோஸ் ரூ.25, காலிப்ளவர் ரூ.25, கத்தரிக்காய் ரூ.30, வழுதலங்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.45, மிளகாய் ரூ.70, பல்லாரி ரூ.35, சிறிய வெங்காயம் ரூ.75, சேனை ரூ.70, இஞ்சி ரூ.150, வெள்ளரிக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35, வெண்டைக்காய் ரூ.30.

    காய்கறி விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர் பகுதிக ளிலிருந்தும் அதிகளவு தக்காளி வந்து கொண்டி ருப்பதால் விலை சரிந்துள்ளது. தக்காளி விலை அதிகமாக இருந்த போது பொதுமக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து வந்தனர். தற்பொழுது பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

    கிலோ கணக்கில் பெண்கள் தக்காளியை வாங்கி செல்கிறார்கள். இதேபோல் மற்ற காய்கறி களும் அதிக அளவு தற்போது விற்பனைக்கு வருவதால் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்பொழுது விலை சற்று குறைந்துள்ளது.

    தற்பொழுது திருமண சீசன் உள்ள நிலையிலும் வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலை குறைந்து காணப்படுகிறது என்றார்.

    • குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்காக போலீஸ் நிலையம் எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர்.

    இதில், குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பல்வேறு ஆன்லைன் செயலிகளில் இருந்து லோன் வாங்கியுள்ள அவர், அதை பலமுறை திருப்பி அளித்தும் உள்ளார். ஆனால் தாங்கள் இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து அவருக்கு நிர்பந்தம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் நிர்பந்தம் மிரட்டல் ஆக மாறியதால், குருநாத் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் வாய்விட்டு கெஞ்சியுள்ளார். தன்னால் இதற்கு மேல் முடியாது என்றும், நிறைய பணம் கொடுத்து விட்டேன் என்றும், இதற்கு மேல் என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தினால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றும் அவர் அதில் கூறியிருப்பதாக தெரிகிறது.

    ஆனால் அவரது இந்த நடவடிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட மோசடி கும்பல், குருநாத்தின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உள்ளது. உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை கட்டா விட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பரவ விடுவதோடு உனது உறவினர்கள் உனது தாய், தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக குருநாத்தின் தந்தை ஸ்ரீதரன், ஆன்லைன் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனுடைய சாவுக்கு காரணமான மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்துள்ளார்.

    • ஏராளமான பங்கு மக்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    தக்கலை :

    முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கேரளா மாநிலம் சுல்தான் பேட்டை மறை மாவட்ட ஆயர் அபீர் தலைமையில் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றப் பட்டது. நிகழ்ச்சிக்கு ஆலய அதிபர் டோமினிக் கடாட்ச தாஸ், இணை அதிபர் ஜேம்ஸ், முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், அருட்ப ணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    விழாவில் இந்து மதத்தை சேர்ந்த பால்மணி உள்ளிட்டோரும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த திருவிதாங் கோடு ஜமாத் செயலாளர் டாக்டர் யூசுப் உள்ளிட்டோரும் மற்றும் ஏராளமான பங்கு மக்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவானது வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி மறையுரை போன்றவை நடக்கிறது. நாளை (3-ந்தேதி) காலை 11 மணிக்கு பல்லாயிரம் பேர் பங்கேற்கும் சமபந்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு
    • 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மன், சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இதனால் அந்தப் பாறையில் பகவதி அம்மனின் ஒற்றைக் கால் பாதம் இயற்கையாகவே பதிந்து இருந்தது. இந்தக் கால் பாதத்தை பார்த்து சுவாமி விவேகானந்தர் 1892-ம் ஆண்டு தியானம் செய்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு சென்று பேசினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணி க்கப்பட்டது. அன்றுமுதல் இந்த மண்ட பத்தை தினமும் ஆயிர க்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்க ள். இந்த மண்டபம் நிறுவி 52 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகில் முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு வழங்கப்பட்டது.

    கடந்த 53 வருடங்களில் இன்று வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    ×