என் மலர்
கன்னியாகுமரி
- பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
- திருநெல்வேலி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கொச்சுவேலி ரெயில்களை இயக்க வேண்டும்
நாகர்கோவில் :
ரெயில்வே துறை பல்வேறு வழித்தட ரெயில்களை இணைத்து ஒரே ரெயிலாக இயக்கி வருகிறது. புனலூர்-குருவாயூர், கொல்லம்-செங்கோட்டை, செங்கோட்டை-மதுரை ஆகிய 3 ரெயில்களை இணைத்து ஒரே ரெயிலாக மதுரை-குருவாயூர் என்று இயக்கப்படுகிறது. கடந்த மாதம் மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-சேலம் ஆகிய 3ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக மயிலாடுதுறை-சேலம் என்று இயக்கப்பட்டது. இதற்கு முன்பும் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரெயில் மற்றும் திண்டுக்கல்-மயிலாடுதுறை ஆகிய 2ரெயில்களையும் இணைத்து நீட்டிப்பு செய்தும் ஒரே ரெயிலாக செங்கோட்டை-மயிலாடுதுறை என்று அறிவிக்கப்பட்டு பல மாதங்களாக இயங்கி வருகிறது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம்-நிலாம்பூர் பயணிகள் ரெயில்களை இணைத்து 173 கி.மீ. தூரத்துக்கு ஒரே ரெயிலாக கோட்டயம்-நீலாம்பூர் ரெயில் என இயக்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் எந்த ஒரு ரெயிலும் இவ்வாறு இணைத்து இயக்கப்படவில்லை என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.
மேலும் இந்த சங்கம் சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் கோட்டயம் சென்று விட்டால், மறு மார்க்கம் கோட்டயம்-நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்கப்படுவது கிடையாது. ஆகையால் இந்த ரெயிலை மறுமார்க்கமாக இயக்க வேண்டும். அதற்கு தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரு சில பயணிகள் ரெயில்களை இணைத்து ஒரே எண் கொண்ட ரெயிலாக கோட்டயம்-நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கி பின்னர் இந்த ரெயிலை திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
திருநெல்வேலி-திருவனந்தபுரம் பயணிகள் ரெயில் திருநெல்வேலியில் இருந்து காலை புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வரும் ரெயிலின் வேகத்தை அதிகப்படுத்தி விரைவாக நாகர்கோவில் வருமாறு கால அட்டவணையை சிறிய அளவில் மாற்றம் செய்து நாகர்கோவில்-கொச்சுவேலிரெயிலுடன் இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி-திருவனந்தபுரம் பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.
மறுமார்க்கமாக கொச்சு வேலியில் இருந்து மதியம் புறப்படும் ரெயிலின் கால அட்டவணையை மாற்றி மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சுமார் 6.15 மணிக்கு நாகர்கோவில் வந்து இங்கிருந்து நாகர்கோவில்-திருநெல்வேலி ரெயிலையும் இணைத்து திருவனந்தபுரம்-திருநெல்வேலி ஒரே ரெயிலாக இயக்க வேண்டும். கன்னியாகுமரி-திருப்பதி நேரடி ரெயில் தற்போது மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்ட பகுதிகளிலிருந்து திருப்பதிக்கு செல்ல நேரடி தினசரி ரெயில் சேவை இல்லை. மதுரையிலிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது.
ஆகவே தற்போது திருப்பதியிலிருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில், மதுரை-விழுப்புரம் ரெயில் ஆகியவற்றை இணைத்து கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி - திருப்பதி என்று இயக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட பயணிகள் வசதிக்காக திரு நெல்வேலி -செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரெயில் ஆகியவற்றை இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி - கொல்லம் என்று இயக்க வேண்டும். இதேபோல் செங்கோட்டை- –திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி-திருச்செந்தூர் ஆகிய 2 ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக செங்கோட்டை –திருச்செந்தூர் என்று இயக்க வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் மதுரைக்கு தெற்கு உள்ள பகுதிகளில் இருந்து நேரடி ரெயில் இல்லை. தற்போது நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர ரெயிலின் பெட்டிகளை வைத்து தான், சென்னை எழும்பூர்-ஜோத்பூர் வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக கன்னியாகுமரி-ஜோத்பூர் வழி மதுரை, சென்னை என்று இயக்க வேண்டும்.
தற்போது தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற இடங்களுக்கு செல்ல நேரடி ரெயில் சேவை இல்லை. இதனால் பயணிகள், குறிப்பாக வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக மதுரை-புனலூர் இரவு நேர ரெயிலையும், திருச்சி-காரைக்கால் மெமோ ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக புனலூர்-காரைக்கால் என்று இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இந்த கோரிக்கைக்கு ரெயில்வே துறை இதுவரை செவி சாய்க்கவில்லை.
குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் விதமாக மற்ற பகுதிகளில் இயக்கப்படுவதை போன்று இங்கும் 2 ரெயில்களை இணைத்து இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு
- பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
மணவாளக்குறிச்சி :
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மாலை சுமங்கலி பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சபூஜை ஆகி யவை நடந்தது. மாலை 6 மணியளவில் சுமங்கலி பூஜை நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன், பகவதி குருக்கள் ஆகியோர் பூஜையை நடத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மண்டைக் காட்டில் குவிந்து சுமங்கலி பூஜையில் கலந்துகொண்ட னர்.
சிறப்பு கட்டணம் செலுத்திய இவர்களுக்கு சில்வர் தட்டு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, சேலை, ஜாக்கெட் துணி மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது. 2-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
பொங்கல் வழிப்பாட்டி லும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பெண்கள் குவிந்து பொங்க லிட்டனர். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, குமாரகோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், மதியம் 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.
நாளை (செவ்வாய்க்கி ழமை) 3-ம் நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாண வர்களுக்கு பரி சளிப்பு, இரவு 8 அத்தாழ பூஜையுடன் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றும் மழை நீடித்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
அவ்வப்போது மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இதமான குளிர்காற்று வீசியது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. இரணியல், குளச்சல், மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 68.8 மல்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை இன்றும் ஒரு அடி உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதியில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை விவசாயத்திற்கு கை கொடுக்கும் அளவில் உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.85 அடியாக இருந்தது. அணைக்கு 1007 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது. அணைக்கு 552 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 68.8, பெருஞ்சாணி 19.2, சிற்றாறு 1-12.2, சிற்றார் 2-9.2, பூதப்பாண்டி 9.8, களியல் 10, கன்னிமார் 5.8, கொட்டாரம் 8.2, குழித்துறை 39, மயிலாடி 5.4, நாகர்கோவில் 8.2, புத்தன்அணை 17.6, சுருளோடு 33.6, தக்கலை 6.2, குளச்சல் 8.6, இரணியல் 23, பாலமோர் 37.2, மாம்பழத்துறையாறு 10, திற்பரப்பு 15.2, கோழிபோர்விளை 6.2, ஆனைகிடங்கு 7.2, அடையாமடை 8.1, முக்கடல் 6.2.
- 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது
- நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த திருட்டு சம்பவங்களில் பெண் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் டிப்-டாப் உடை அணிந்து வரும் பெண்கள் கல்லூரி மாணவிகள் போல பயணி யோடு பயணியாக சேர்ந்து நகை திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது. இந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மேலும் புகைப்படங் களை பஸ் நிலையங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்று துண்டு பிரசுரங்கள் ஒட்டி உள்ளனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் புது நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள். வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பெண் போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் மாற்று உடையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
- மதுபோதை தகராறில் அடிக்கடி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மாணவர்கள் ஏராளமானோர் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது புத்தேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் அங்கு வந்தனர்.
பஸ் நிலையத்தில் வைத்து அவர்களுக்குள் திடீரென மோதல் உருவானது. ஒரு மாணவரை மற்ற 3 பேர் சேர்ந்து தாக்கினர். இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காயம் அடைந்த மாணவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் குடிபோதை தகராறில் மோதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட 4 மாணவர்களும் முட்டம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கூட்டாக சேர்ந்து மது குடித்துள்ளனர். முட்டம் கடற்கரை சுற்றுலா பகுதி என்பதால் மாணவர்களை மது குடிக்க கூடாது என்று கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள் அண்ணா பஸ் நிலையம் வந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மதுபோதை தகராறில் அடிக்கடி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பணியை பலப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- மனவேதனை அடைந்த ஆனந்த், தான் தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்து வந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரி திரட்டுதெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை மது குடிப்பதற்கு தனது தாயார் லீலா என்பவரிடம் பணம் கேட்டார். ஆனால் லீலா பணம் கொடுக்கவில்லை. மது குடிக்க கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஆனந்த், தான் தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்து வந்தார்.
இந்த நிலையில் லீலா வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஆனந்த் வீட்டில் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லீலா உடனே வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 42 வேகன்களில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
- கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து இன்று 2600 டன் கோதுமை சரக்கு ரெயில் மூலமாக 42 வேகன்களில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட கோதுமையை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி பள்ளிவிளையில் உள்ள கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிவிளையில் உள்ள கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
- கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குளச்சல் :
குளச்சல் மேலத்தெருவை சேர்ந்தவர் சம்மீல் கான் (வயது 32).இவர் குளச்சல் காந்தி சந்திப்பில் கம்ப்யூட்டர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆயிசா சுமையா (26). இவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. பின்னர் 2-வது முறை கர்ப்பமடைந்த ஆயிசா சுமையாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அவர் 3-வது முறையாக கர்ப்பமடைந்து 8 மாத கர்ப்பிணியானார். வீட்டிலிருந்த ஆயிசா சுமையா நேற்று திடீரென வாந்தி எடுத்தார். வீட்டினர் உடனே அவரை நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆயிசா சுமையாவின் தாயார் நாகர்கோவில் கீழசரக்கல் விளையை சேர்ந்த சகர்பானு குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி. (பொறுப்பு) சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் ரத்து
- கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் பவுர்ணமிக்கு பிறகு கடந்த 4 நாட்களாக காலையில் நீர்மட்டம் தாழ்ந்தும், உள் வாங்கியும் காணப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொட ங்கப்படவில்லை. பின்னர் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
இன்றும் 5-வது நாளாக காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
திருவள்ளுவர் சிலைக் கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திரு வள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெற வில்லை.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- மணி, சுரேஷ், பிந்து ஆகியோருக்கும் குளிக்கும் ஆசை வந்தது.
- மீனவர்கள் மற்றும் சிலர் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளை பார்ப்பதோடு, கடலில் ஆனந்த குளியலிடுவதும் வழக்கம்.
கடந்த சில நாட்களாக கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாகவும் ,ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாகவும் இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக நீராடினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உள்பட 3 பேர் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்னோ பார்க் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் மணி (வயது 30), சுரேஷ் (30), பிந்து (25) உள்பட 10 பேர் நேற்று சுற்றுலாவாக வேனில் கன்னியாகுமரி வந்தனர்.
தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் இன்று பகல், கன்னியாகுமரி கோவளம் கடற்கரை பகுதியை பார்க்க புறப்பட்டனர்.
அப்போது கடல் அலை வேகமாக இருந்தது. இருப்பினும் அந்த பகுதியில் ஏராளமானோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் மணி, சுரேஷ், பிந்து ஆகியோருக்கும் குளிக்கும் ஆசை வந்தது.
இதனை தொடர்ந்து 3 பேரும் கடலில் குளிக்க இறங்கினர். அவர்கள் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தபோது, ராட்சத அலை வந்தது. அந்த அலையில் 3 பேரும் சிக்கினர்.
இதனை பார்த்த கடலில் குளித்த மற்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். இதனை கேட்ட மீனவர்கள் மற்றும் சிலர் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களால் பிந்துவை மட்டுமே மீட்க முடிந்தது.
மணி மற்றும் சுரேசை கடல் அலை இழுத்துச் சென்று விட்டது. இதுபற்றி கன்னியாகுமரி கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மற்றொரு அலை 2 பேரும் கடற்கரைக்கு கொண்டு வந்து வீசியது. அவர்களை உடனடியாக மீனவர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணி மற்றும் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிந்து, கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- பிரவீன் குமார் நேற்று மாலை வீட்டிலிருந்து திடீரென மாயமானார்
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
தென்காசி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ், இவரது மனைவி உஷா, இவர் நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் இவர்கள் குடும்பத்தோடு செட்டிக்குளத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் பிரவீன் குமார் (வயது 23) இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் பிரவீன் குமார் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வள்ளியூருக்கும் நாங்குநேரிக்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் பிரவீன்குமார் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத் தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த னா. இது குறித்து அவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த பிரவீன்கு மார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரம் கார ணமாக தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- வீட்டு கோழி கூட்டிற்குள் குருவி முட்டை அளவில் சிறியதாக ஒரு முட்டை கிடந்துள்ளது.
- 4 முட்டைகளையும் அவர் தனது கடை முன்பு பார்வைக்கு வைத்துள்ளார்
இரணியல் :
இரணியல் அருகே வில்லுக்குறி மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் பேட்ரிக் (வயது 51). இவர் வீட்டருகில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டு கோழி கூட்டிற்குள் குருவி முட்டை அளவில் சிறியதாக ஒரு முட்டை கிடந்துள்ளது. அடுத்த நாள் அதைவிட கொஞ்சம் பெரிதாகவும், அடுத்த நாள் அதைவிட பெரிதாகவும் இருந்துள்ளது.
4-வது நாள் கிடந்த முட்டை, கோழி முட்டை அளவில் இருந்துள்ளது. 4 முட்டைகளையும் அவர் தனது கடை முன்பு பார்வைக்கு வைத்துள்ளார். இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.






