search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு
    X

    கன்னியாகுமரியில் 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் ரத்து
    • கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் பவுர்ணமிக்கு பிறகு கடந்த 4 நாட்களாக காலையில் நீர்மட்டம் தாழ்ந்தும், உள் வாங்கியும் காணப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொட ங்கப்படவில்லை. பின்னர் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    இன்றும் 5-வது நாளாக காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    திருவள்ளுவர் சிலைக் கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திரு வள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெற வில்லை.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×