மத்திய பிரதேசத்தில் இருந்து 2600 டன் கோதுமை நாகர்கோவிலுக்கு வந்தது

42 வேகன்களில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் இருந்து 2600 டன் கோதுமை நாகர்கோவிலுக்கு வந்தது
Published on

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து இன்று 2600 டன் கோதுமை சரக்கு ரெயில் மூலமாக 42 வேகன்களில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட கோதுமையை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி பள்ளிவிளையில் உள்ள கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிவிளையில் உள்ள கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com