என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகள் மற்றும் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். அதன்பேரில் மாநகராட்சி பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது.

    இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 10 நாய்கள் அந்தப் பகுதியில் பிடிபட்டன. அவற்றை வேனில் ஏற்றி கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நாகர்கோவில் கணேசபுரத்தில் பூங்காவுடன் கூடிய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள் எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் 10-ந்தேதி நடக்கிறது
    • திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி பங்கேற்கிறார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கணேசபுரத்தில் உள்ள லெமூரியா வர்மக் களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான வீரர்கள் பங்கேற்கும் அடிமுறை-சிலம்பப்போட்டிகள் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

    காலை 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் தமி ழ்நாடு முழுவதும் இருந்து அடிமுறை களரி, சிலம்பம் போட்டியில் தேர்ச்சி பெற்ற 2000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். ஆயுத வீச்சு உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறுகின்றன. மேலும் 300-க்கும் மேற்பட்ட வர்மக்கலை ஆசான்கள், 1000 பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு அன்று மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன..இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.டி.செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆடிட்டர் ஜான் மோரிஸ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திருமலை தமிழரசன், அங்கையற்கன்னி, சுஷ்ருசா ஆஸ்பத்திரி டாக்டர்கள் பானுமதி, பத்ரிநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை லெமூரியா வர்மக்களரி அடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் செல்வன், துணை நிறுவனர் ஆனந்த், ராஜா, முதன்மை செயல் அலுவலர் வைகுண்டராஜா மற்றும் ஊழியர்கள், வீரர்கள் செய்து வருகிறார்கள்.

    • காலை 9 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • திருக்கொடியிறக்கம் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

    திருவட்டார் :

    குலசேகரம் புனித அகு ஸ்தீனார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி யேசுரெ த்தினம் தலைமை தாங்கி னார். புனித சவேரியார் நர்சிங் கல்லூரி இயக்குனர் ஜெயபிரகாஷ் மறையுரையாற்றினார். இத்திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை ஜோன்ஸ் கிளீட்டஸ் மற்றும் அருட்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பலியில் பங்கு அருட்பணி நிர்வாகிகள் மற்றும் சபை அமைப்புகள், கிளை பங்குகள் உள்பட திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

    • பிடித்து அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கணேசபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. பூங்காவுடன் கூடிய இந்த குடியிருப்பில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களது குடும்பத்தினர் ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம். குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் இங்கு விளையாடுவது உண்டு.

    இந்த சூழலில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள், எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது
    • குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    கிள்ளியூர் :

    புதுக்கடை அருகே பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் மேலகுளம் என்ற காட்டத்திகுளம் உள்ளது. மிகப்பழமையான இந்த குளம் தற்போது சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது. கடுமையான கோடை காலங்களிலும் இயற்கையாக ஊற்று நீர் அதிகம் சுரப்பதால் இந்த குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை.

    இதனால் கோடை காலங்களில் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த குளத்தில் குளிக்க வருவது வழக்கம். இந்த குளத்தை நம்பி தற்போது சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமாக வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போதும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் குளத்தின் அடிமடை ஷட்டரை ஏதோ எந்திரத்தின் உதவியுடன் உடைத்து, தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதனால் தண்ணீர் வேகத்தால் பல ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீராதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பட்டணம்கால் பிரிவு நீர்வளத்துறையின் இளநிலை பொறியாளர் (பொறுப்பு) பேபி உஷா தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைக்கிறார்
    • ரதயாத்திரை மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் கடந்து செல்கிறது.

    கன்னியாகுமரி :

    அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க கோரியும், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ரதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளது.

    அதன்படி இந்த ரத யாத்திரையின் தொடக்க விழா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது. இந்த ரத யாத்திரையின் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்குகிறார். மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரத யாத்திரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, குஜராத், ஜார்க்கண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களை கடந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி டெல்லியை சென்றடைகிறது. இந்த ரதயாத்திரை மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் கடந்து செல்கிறது.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • ஒருவன் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துள்ளான்.

    கருங்கல் :

    கருங்கல் அருகே உள்ள நடுத்தேரியை சேர்ந்தவர் அனீஸ்பிரபு. இவர் கருங்கலில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சுஜாதா (வயது 38). இவர் வீட்டில் இருந்து தங்களது ஓட்டலுக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்றும் ஓட்டலுக்கு சென்று விட்டு சுஜாதா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த பேப்பரை சுஜாதா வாங்கி பார்த்த நேரத்தில், ஒருவன் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துள்ளான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆனால் அதற்குள் 2 வாலிபர்களும் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசில் சுஜாதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து நகையை பறித்துச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர்
    • கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    மத்திய பாராளுமன்ற நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை குழு அதன் தலைவர் லாக்கட் சட்டர் ஜி தலைமையில் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று மாலை கன்னியாகுமரி வந்தது.

    இந்த குழுவில் மொத்தம் 30 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.

    முன்னதாக இந்த பாராளுமன்ற குழுவினரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று மண்டபத்தை சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.

    அப்போது எம்.பி.க்கள் குழுவினர் விவேகானந்தர் பாறையில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தை பார்த்து வணங்கினர். மேலும் அங்கு உள்ள தியான மண்டபத்தில் எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தியானம் செய்தனர். அதன் பின்னர் இந்த பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு எம்.பி.க்கள் குழுவினரை கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

    பின்னர் பாராளுமன்ற குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்வையிட்டனர். பின்னர் பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் அலுவலகம் வந்து ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.
    • ராமசாமியின் இடது கண், இமை, நெற்றி ஆகிய பகுதிகளில் காயம் உள்ளதாக தெரிகிறது

    இரணியல் :

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள போர்வெல் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்தவர் ராமசாமி (வயது 56). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அகரம் கிராமம் கொத்தம்பாளையம் ஆகும்.

    திங்கள் நகரில் உள்ள போர்வெல் அலுவலகத்திலேயே ராமசாமி தங்கி உள்ளார். நேற்று முன்தினம் மதியம் அவர் போர்வெல் லாரியை திக்கணம்கோட்டில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் அலுவலகம் வந்து ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் மாடத்தட்டுவிளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் போர்வெல் நிறுவனத்துக்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லாததால் பக்கத்து அறையை எட்டி பார்த்தபோது ராமசாமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போர்வெல் கம்பெனி ஊழியர் கவியரசனுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ராமசாமியை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ராமசாமியின் இடது கண், இமை, நெற்றி ஆகிய பகுதிகளில் காயம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் எப்படி இறந்தார்? திக்கணம்கோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்தில் சிக்கினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் ஒப்படைப்பு
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்கானிக்கல் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 10 ஊழியர்கள் நேற்று முன்தினம் கன்னியா குமரிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்தனர்.

    அவர்கள் கன்னியாகுமரி யில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று காலை கன்னியாகுமரி கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு சென்ற னர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.

    அப்போது கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலையில் மணி (வயது 30), சுரேஷ் (32), பிந்து (25) ஆகிய 3 பேரும் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்தனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உதவியுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்த 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் மணி மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே இறந்துவிட்டனர் என்று தெரிவித்தனர். பிந்து என்ற பெண் மட்டும் சிகிச்சைக்காக கன்னியா குமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பெங்களூ ரில் உள்ள மணி மற்றும் சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆசாரிப் பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள பிணவறை யில் வைக்கப்பட்டிருந்த மணி மற்றும் சுரேஷின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்களது உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவி னர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர்களது உடலை வாங்கி கொண்டு உற வினர்கள் இன்று சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டு செல்கிறார்கள்.

    • மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா?
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே தலக்குளம் பட்டரிவிளை யில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் பகுதி மாணவிகள் உட்பட பலர் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் விடுதியில் இருந்து திடீரென மாயமானார்கள்.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இதுபோல் ஒரு மாணவர் வெளியே சென்று பின்னர் திரும்பவும் வந்து விட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு
    • தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடந்தது. மாவட்ட செயலாளர் செல்லச் சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பா லகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதா வது:-

    இந்தியாவில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருகி றது. மணிப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள் ளது. 100 மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க பிரதமரை அழைத்தபோது எந்த பதிலும் இல்லை.

    நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை அடிப்படை யாக கொண்டு இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு எந்த காலத்திலும் பொருந்தாது. சட்டசபையை கலைக்கும் இத்தகைய நடவடிக்கை ஏற்புடைய தல்ல.

    கடற்கரை பாதுகாப்பு திருத்த சட்டம் மற்றும் வன பாதுகாப்பு உரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இந்த 2 சட்டங்க ளும் நிறைவேற்றப்பட்டால் வனங்கள் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு செல்லக்கூ டும். அதேபோல் தான் கடற்கரை களை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தாரை வார்க்கும் இந்த சட்டமும் நிறை வேற்றப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஜல்லி கற்கள் கிடைப்பதில்லை. ஆனால் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ரப்பருக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இந்தியா கூட்டணியின் சாதனையால் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை கண்டு மத்திய அரசு பயந்துள்ளது. கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வாங்கிய ரூ.15.50 லட்சம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு ரூ.7.50 லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அரசின் தணிக்கை துறை அதிகாரி கூறியுள்ளார். இதற்கு ஏன் மோடியோ, அமித்ஷாவோ, அண்ணா மலையோ வாய் திறக்காமல் உள்ளனர்.

    இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி யடையும். இந்தியா கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். வருகிற பாராளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பது தீர்க்கமாகி விட்டது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதில் உள்ள சில நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ரகுபதி நன்றி கூறினார்.

    ×